வட சென்னை மக்களவைத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
வட சென்னை மக்களவைத் தொகுதி (Chennai North Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 2வது தொகுதி ஆகும்.
வட சென்னை மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
வட சென்னை மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 14,68,523[1] |
சட்டமன்றத் தொகுதிகள் | 10. திருவொற்றியூர் 11. ராதாகிருஷ்ணன் நகர் 12. பெரம்பூர் 13. கொளத்தூர் 15. திரு.வி.க. நகர் (தனி) 17. இராயபுரம் |
2008 ஆம் ஆண்டு செய்யப்பட்ட மறுசீரமைப்பிற்கு முன் வட சென்னை மக்களவைத் தொகுதியில், இராயபுரம், துறைமுகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர் (தனி), திருவொற்றியூர், வில்லிவாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. மறுசீரமைப்பின்போது பெரம்பூர் பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது. வில்லிவாக்கம் பிரிக்கப்பட்டு கொளத்தூர், திரு.வி.க.நகர் (தனி) எனும் சட்டமன்றத் தொகுதிகள் உருவாக்கப்பட்டன.
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:
ஆண்டு | வென்ற வேட்பாளர் | கட்சி | இரண்டாம் இடம் | கட்சி |
---|---|---|---|---|
1957 | எஸ். சி. சி. அந்தோனிப்பிள்ளை | சுயேச்சை | டி. செங்கல்வராயன் | இதேகா |
1962 | பொ. சீனிவாசன் | இதேகா | அப்துல் சமத் | முலீ |
1967 | கி. மனோகரன் | திமுக | எஸ். சி. சி. அந்தோனிப்பிள்ளை | இதேகா |
1971 | கி. மனோகரன் | திமுக | எஸ். ஜி. விநாயக மூர்த்தி | நிறுவன காங்கிரசு |
1977 | ஏ. வி. பி. ஆசைத்தம்பி | திமுக | கி. மனோகரன் | அதிமுக |
1980 | கோ. இலட்சுமணன் | திமுக | எம். அப்துல் காதர் | அதிமுக |
1984 | என். வி. என். சோமு | திமுக | கோ. இலட்சுமணன் | இதேகா |
1989 | தா. பாண்டியன் | இதேகா | என். வி. என். சோமு | திமுக |
1991 | தா. பாண்டியன் | இதேகா | ஆலடி அருணா | திமுக |
1996 | என். வி. என். சோமு | திமுக | தா. பாண்டியன் | இதேகா |
1998 | செ. குப்புசாமி | திமுக | ஆர்.டி.சபாபதி மோகன் | மதிமுக |
1999 | செ. குப்புசாமி | திமுக | என். சௌந்தரராஜன் | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் |
2004 | செ. குப்புசாமி | திமுக | எம்.என். சுகுமாரன் நம்பியார் | பாஜக |
2009 | டி. கே. எஸ். இளங்கோவன் | திமுக | தா. பாண்டியன் | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் |
2014 | வெங்கடேஷ் பாபு | அதிமுக | ஆர். கிரிராஜன் | திமுக |
2019 | கலாநிதி வீராசாமி[2] | திமுக | அழகாபுரம் ஆர். மோகன்ராஜ் | தேமுதிக |
2024 | கலாநிதி வீராசாமி | திமுக | ராயபுரம் மனோ | அதிமுக |
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
கலாநிதி வீராசாமி | திமுக | 4,96,485 |
ராயபுரம் மனோ | அதிமுக | 1,57,761 |
பால்கனகராஜ் | பாஜக | 1,13,085 |
அமுதினி | நாதக | 95,786 |
இந்தத் தேர்தலில் 10 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 13 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, தேமுதிக வேட்பாளரான, அழகாபுரம் ஆர். மோகன்ராஜை, 4,61,518 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.
வேட்பாளர் | சின்னம் | கட்சி | தபால் வாக்குகள் | பெற்ற மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் (%) |
---|---|---|---|---|---|
கலாநிதி வீராசாமி | திராவிட முன்னேற்றக் கழகம் | 1952 | 5,90,986 | 61.85% | |
அழகாபுரம் ஆர். மோகன்ராஜ் | தேமுதிக | 392 | 1,29,468 | 13.55% | |
மௌர்யா | மக்கள் நீதி மய்யம் | 187 | 1,03,167 | 10.8% | |
காளியம்மாள் | நாம் தமிழர் கட்சி | 104 | 60,515 | 6.33% | |
பி. சந்தனா கிருஷ்ணன் | அமமுக | 45 | 33,277 | 3.48% | |
நோட்டா | - | - | 68 | 15,687 | 1.64% |
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
டி. ஜி. வெங்கடேஷ் பாபு[5] | அதிமுக | 4,06,704 |
ஆர். கிரிராஜன் | திமுக | 3,07,000 |
பிஜூ சாக்கோ | இதேகா | 23,751 |
உ. வாசுகி | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் | 23,751 |
29 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின், டி. கே. எஸ். இளங்கோவன் சிபிஐ-யின் தா. பாண்டியனை 19,153 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
கட்சி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் |
---|---|---|
திமுக | டி. கே. எஸ். இளங்கோவன் | 2,81,055 |
சிபிஐ | தா. பாண்டியன் | 2,61,902 |
தேமுதிக | யுவராசு | 66,375 |
பாசக | தமிழிசை சௌந்தரராஜன் | 23,350 |
வெற்றிக்கான வாக்குகள் வித்தியாசம் = 2,53,539 வாக்குகள்.
கட்சி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் |
---|---|---|
திமுக | செ. குப்புசாமி | 5,70,122 |
பாசக | சுகுமாரன் நம்பியார் | 3,16,583 |
Seamless Wikipedia browsing. On steroids.