பகவந்த் மான்

From Wikipedia, the free encyclopedia

பகவந்த் மான்

பகவந்த் மான் (Bhagwant Singh Mann ) (பிறப்பு: 17 அக்டோபர் 1973) இந்தியாவின் பஞ்சாப் மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி அரசியல்வாதியும், சமூக ஆர்வலரும், நகைச்சுவையாளரும், பாடகரும், முன்னாள் நடிகரும் ஆவார். 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளாராக இவரது பெயர் அறிவிக்கப்பட்டது.[2]இவர் 10 மே 2017 அன்று சங்கரூர் மக்களவைத் தொகுதியிலிருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விரைவான உண்மைகள் பகவந்த் மான், 17வது பஞ்சாப் முதலமைச்சர் ...
பகவந்த் மான்
Thumb
பகவந்த் சிங் மான்
17வது பஞ்சாப் முதலமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
16 மார்ச் 2022
ஆளுநர்பன்வாரிலால் புரோகித்
முன்னையவர்சரண்ஜித் சிங் சன்னி
இந்திய பஞ்சாபின் சட்டமன்றம் பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
16 மார்ச் 2022
முன்னையவர்தல்வீர் சிங் கங்குரா
தொகுதிதூரி சட்டமன்றத் தொகுதி
இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
16 மே 2014  14 மார்ச் 2022
முன்னையவர்விஜய் இந்தர் சிங்லா
தொகுதிசங்கரூர்
ஒருங்கிணைப்பாளர், பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சி
பதவியில் உள்ளார்
பதவியில்
31 சனவரி 2019[1]
முன்னையவர்பல்பீர் சிங்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
பகவந்த் சிங் மான்

17 அக்டோபர் 1973 (1973-10-17) (அகவை 51)
சங்கரூர், பஞ்சாப், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஆம் ஆத்மி கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
பஞ்சாப் மக்கள் கட்சி (2012-2014)
தொழில்நடிகர், பாடகர், நகைச்சுவையாளர், சமூக ஆர்வலர், அரசியல்வாதி
கையெழுத்துThumb
இசை வாழ்க்கை
பிற பெயர்கள்"நகைச்சுவை மன்னன்", "ஜுக்னு"
இசை வடிவங்கள்நகைச்சுவை
இசைத்துறையில்1992–2015
மூடு

அரசியல் வாழ்க்கை

2011-ஆம் ஆண்டில் பகவந்த் மான் பஞ்சாப் மக்கள் கட்சியில் இணைந்தார்.[3][4]2012 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் லெகரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

மார்ச் 2014-இல் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து சங்கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 2,11,721 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.[5]2017 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக ஜலாலாபாத் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். [6] இவர் 2017 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலின் போது போதை மது சர்ச்ச்சையில் சிக்கினார்.[7] [8]

2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பகவந்த் மான் ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக சங்கரூர் மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு வென்றார்.

பஞ்சாப் முதலமைச்சர் பதவி

சனவரி 18, 2022 அன்று, பகவந்த் மான், 2022 பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலில் பஞ்சாப் முதலமைச்சருக்கான ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு பொது வாக்கெடுப்பின் அடிப்படையில் 93% வாக்காளர்கள் பகவந்த் மான் முதல்வராக ஆக வேண்டும் என்று கூறினர். இவரது தலைமையின் கீழ் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி 2022ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல்களில் 117 இடங்களில் 92 இடங்களை வென்றது.[9] பஞ்சாபின் முதல் அமைச்சராகப் பகவந் மான் பதவியேற்பார் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.[10][11]

இவர் 16 மார்ச் 2022 அன்று, பகத் சிங் பிறந்த ஊரான கட்கர் கலனில் பஞ்சாப் முதலமைச்சராக, பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தால் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.[12][13]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.