பூசாபதி சஞ்சீவி குமாரசுவாமி ராஜா (8 ஜூலை 1898 – 16 மார்ச் 1957) சென்னை மாகாணத்தின் கடைசி முதலமைச்சராகவும், சென்னை மாநில முதல் முதல்வராகவும் ஏப்ரல் 6, 1949 முதல் ஏப்ரல் 10, 1952 வரை பொறுப்பேற்றவர்.[1]. அவர் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள இராசப்பாளையத்தில் பிறந்தவர்.
பி.எஸ்.குமாரசுவாமிராஜா | |
---|---|
சென்னை மாநில முதலமைச்சர் | |
பதவியில் 26 ஜனவரி 1950 – ஏப்ரல் 10, 1952 | |
ஆளுநர் | கிருஷ்ண குமாரசிங் பவசிங் |
முன்னையவர் | பதவி உருவாக்கபட்டது |
பின்னவர் | சி. இராஜகோபாலாச்சாரி |
சென்னை மாகாண முதல்வர் | |
பதவியில் ஏப்ரல் 6, 1949 – 26 ஜனவரி 1950 | |
ஆளுநர் | கிருஷ்ண குமாரசிங் பவசிங் |
முன்னையவர் | ஓ. பி. ராமசாமி ரெட்டியார் |
பின்னவர் | பதவி நீக்கப்பட்டது |
ஒரிசா மாநில ஆளுநர் | |
பதவியில் 1954–1956 | |
முன்னையவர் | சையிது பாசில் அலி |
பின்னவர் | பீம் சென் சச்சார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1898 இராஜபாளையம், சென்னை மாகாணம் இந்தியா |
இறப்பு | 1957 |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசியக் காங்கிரஸ் |
இளமை வாழ்வு
பூசாபதி சஞ்சீவி ராஜாவிற்கு மகனாக இராசப்பாளையத்தில் பிறந்தார். அவரது அன்னையை எட்டு நாட்களிலேயே இழந்தார். தந்தையை மூன்றாம் வயதில் இழந்தார்.உடன்பிறப்புகள் யாருமில்லாத குமாரசாமியை அவரது பாட்டியார் வளர்த்து வந்தார். பதினைந்தாம் நூற்றாண்டில் ஆந்திராவிலிருந்து இடம் பெயர்ந்த வீரர்கள் பரம்பரையைச் சேர்ந்த ராஜூக்களின் இனத்தைச் சேர்ந்தவர்.[2] தமது பள்ளிக்கல்வியை முடித்தவுடன் இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசில் இணைந்து பல்வேறு நிலைகளில் பங்காற்றி இருக்கிறார். கிராமத்தின் பஞ்சாயத்து அமைப்புகளில் நாட்டம் கொண்டு பஞ்சாயத்து மற்றும் நகரவை நிர்வாகங்களில் பங்கேற்றார்.
அரசியல் மற்றும் சமூக சேவை
அவரது இளம்வயதில் அன்னி பெசண்ட் அம்மையார் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோரது வாழ்வும் எழுத்துக்களும் பெரும் தாக்கம் ஏற்படுத்தியிருந்தன. 1919ஆம் ஆண்டு முதன்முதலாக மோகன்தாசு கரம்சந்த் காந்தி|காந்தியை சந்தித்த பிறகு அவரது வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டார்.காந்தியின் தென்னாபிரிக்கா போராட்டங்களையும் அகமதாபாத்தில் அவர் நிறுவிய ஆசிரமும் அவரது எளிமையும் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியது.
1932ஆம் ஆண்டு நீதியற்ற சட்டங்களுக்கு எதிரானப் போராட்டத்தில் சிறை சென்றார். 1934ஆம் ஆண்டு திருநெல்வேலி,மதுரை மற்றும் இராமநாதபுரம் அடங்கிய தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றார்.
1949 முதல் 1952 வரை தமிழ்நாடு (சென்னை மாகாணம்) முதலமைச்சராகவும் 1954 முதல் 1956 வரை ஒரிசா ஆளுநராகவும் பணியாற்றினார்.அவரது பணிக்காலத்தில் மதுவிலக்கு,காதித்துணிகளுக்கு ஆதரவு மற்றும் ஆலயப்பிரவேச ஆணை ஆகியன குறிப்பிடத்தக்கன.தமது வீட்டை காந்தி கலைமன்றம் என்ற நுண்கலை அமைப்பிற்கு நன்கொடை அளித்தார்.
நினைவுச் சின்னங்கள்
இவரது நினைவைப் போற்றும் வகையில் இந்திய நடுவணரசு இவர் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டது. புதியதாக உருவாக்கப்பட்ட பேருந்து நிலையத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும், அதைச் சுற்றி ஏற்படுத்தப்பட்ட நகருக்கும் இவர் பெயரைச் சூட்டியுள்ளனர்.
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.