செப்டம்பர் 27 (September 27) கிரிகோரியன் ஆண்டின் 270 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 271 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 95 நாட்கள் உள்ளன.
- 1696 – அல்போன்ஸ் மரிய லிகோரி, இத்தாலிய ஆயர், புனிதர் (இ. 1787)
- 1722 – சாமுவேல் ஆடம்ஸ், அமெரிக்க அரசியல் அறிஞர் (இ. 1803)
- 1814 – டானியல் கிர்க்வுட், அமெரிக்க வானியலாளர் (இ. 1895)
- 1824 – பெஞ்சமின் ஆப்தார்ப் கவுல்டு, அமெரிக்க வானியலாளர் (இ. 1896)
- 1905 – சி. பா. ஆதித்தனார், தினத்தந்தி தமிழ் நாளிதழ் நிறுவனர் (இ. 1981)
- 1918 – மார்ட்டின் இரைல், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய வானியலாளர் (இ. 1984)
- 1924 – தேவன் யாழ்ப்பாணம், ஈழத்து எழுத்தாளர் (இ. 1982)
- 1925 – ராபர்ட் எட்வர்ட்சு, நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய மருத்துவர் (இ. 2013)
- 1926 – ஜி. வரலட்சுமி, தென்னிந்திய நடிகை, பாடகி (இ. 2006)
- 1929 – புகழேந்தி, தென்னிந்தியத் திரைப்பட இசை அமைப்பாளர் (இ. 2005)
- 1932 – ஒலிவர் வில்லியம்சன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்
- 1932 – யஷ் சோப்ரா, பாக்கித்தானி-இந்திய இயக்குநர் (இ. 2012)
- 1933 – நாகேஷ், நகைச்சுவை நடிகர் (இ. 2009)
- 1953 – அம்ருதானந்தமயி, இந்திய குரு, ஞானி
- 1957 – லீலாவதி, தமிழக இடதுசாரி அரசியல்வாதி (இ. 1997)
- 1965 – சுதா சந்திரன், இந்திய பரதநாட்டியக் கலைஞர், நடிகை
- 1972 – கிவ்வினெத் பேல்ட்ரோ, அமெரிக்க நடிகை, தொழிலதிபர்
- 1981 – லட்சுமிபதி பாலாஜி, இந்தியத் துடுப்பாளர்
- 1981 – பிரண்டன் மெக்கல்லம், நியூசிலாந்து துடுப்பாளர்
- 1982 – லில் வெய்ன், அமெரிக்க ராப் இசைக் கலைஞர், நடிகர்
- 1984 – காயத்ரி ஜெயராமன், இந்தியத் திரைப்பட நடிகை
- 1988 – சந்தியா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- 1590 – ஏழாம் அர்பன் (திருத்தந்தை) (பி. 1521)
- 1660 – வின்சென்ட் தே பவுல், பிரெஞ்சு புனிதர் (பி. 1581)
- 1833 – இராசாராம் மோகன் ராய், இந்திய சீர்திருத்தவாதி (பி. 1772)
- 1933 – காமினி ராய், வங்காளக் கவிஞர், பெண்ணியவாதி (பி. 1864)
- 1972 – சீர்காழி இரா. அரங்கநாதன், இந்தியக் கணிதவியலாளர் (பி. 1892)
- 1975 – டி. ஆர். சேஷாத்ரி, தமிழக வேதியலறிஞர் (பி. 1900)
- 1996 – முகமது நஜிபுல்லா, ஆப்கானித்தானின் 7வது அரசுத்தலைவர் (பி. 1947)
- 2000 – அ. மாற்கு, ஈழத்து ஓவியர் (பி. 1933)
- 2008 – மகேந்திர கபூர், இந்தியப் பாடகர் (பி. 1934)
- 2011 – வில்சன் கிரேட்பாட்ச், செயற்கையாக உட்பொருத்தக்கூடிய இதயமுடுக்கியைக் கண்டுபிடித்த அமெரிக்கப் பொறியாளர் (பி. 1919)
- 2015 – பிராங்க் டைசன், ஆங்கிலேய-ஆத்திரேலியத் துடுப்பாளர் (பி. 1930)
- 2017 – இயூ எஃப்னர், அமெரிக்கப் பதிப்பாளர், தொழிலதிபர் (பி. 1926)