Remove ads
இசுக்கொட்லாந்தின் பெரிய நகர் From Wikipedia, the free encyclopedia
கிளாசுக்கோ, கிளாஸ்கோ (Glasgow) இசுக்கொட்லாந்திலுள்ள மிகப் பெரிய நகரமும் ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாவது மிகக்கூடிய மக்கள்தொகையுள்ள நகரமுமாகும். விக்டோரியா காலத்தில் பிரித்தானியப் பேரரசின் இரண்டாவது நகரமாகக் கருதப்பட்டது.[3][4][5] இப்பொழுது ஐரோப்பாவின் முதன்மையான இருபது வணிக நகரங்களில் ஒன்றாக விளங்குகின்றது. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி மக்களடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 3,395 நபர்களாக இருந்தது.[6] இசுக்காத்திய மேற்கு மத்திய தாழ்நிலங்களில் கிளைடு ஆற்றங்கரையில் இந்த நகரம் அமைந்துள்ளது. இந்நகர மக்கள் கிளாசுவேனியர்கள் எனப்படுகின்றனர்.
கிளாசுக்கோ | |
சுகாத்து: Glesga | |
மேல்-இடதிலிருந்து வலச்சுழியாக: கிளாஸ்கோ அறிவியல் மையத்தின் காட்சி, புத்தியல் ஓவியக் காட்சிக்கூடத்தின் வாயிலில் வெல்லிங்டன் கோமானின் சிலை, இரோயல் எக்சேஞ்சு இசுகுயர், கலங்கரை விளக்கத்திலிருந்து நகரக் காட்சி, கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தின் கில்பர்ட்டு இசுகாட்டு கட்டிடம், பின்னியெசுடன் பாரந்தூக்கி, கிளாசுக்கோ நகரமன்றக் கூடம் |
|
கிளாசுக்கோ அரசச்சின்னம் |
|
கிளாசுக்கோ ஐக்கிய இராச்சியத்தில் | |
பரப்பளவு | 175.5 km2 (67.8 sq mi) [1] |
---|---|
மக்கட்தொகை | 5,96,550 (2013)[2] |
- அடர்த்தி | 8541.76 |
Urban | 1,750,000 |
மாநகரம் | Est. 2,850,000 |
மொழி | ஆங்கிலம், சுகாத்து, சுகாத்திசு கேலிக்கு |
OS grid reference | NS590655 |
- எடின்பரோ | வார்ப்புரு:Infobox UK place/dist |
- இலண்டன் | வார்ப்புரு:Infobox UK place/dist |
நாடு | இசுக்கொட்லாந்து |
இறையாண்மையுள்ள நாடு | ஐக்கிய இராச்சியம் |
அஞ்சல் நகரம் | GLASGOW |
அஞ்சல் மாவட்டம் | G1–G80 |
தொலைபேசிக் குறியீடு | 0141 |
காவல்துறை | |
தீயணைப்பு | |
மருத்துவ அவசர ஊர்தி | |
ஐரோப்பிய நாடாளுமன்றம் | |
இணையத்தளம் | www.glasgow.gov.uk |
இடங்களின் பட்டியல்: ஐக்கிய இராச்சியம் |
கிளைடு ஆற்றங்கரையில் சிறிய குடியிருப்பாகத் துவங்கி இன்று பிரித்தானியாவின் மிகப்பெரும் கடற் துறைமுகங்களில் ஒன்றாக கிளாசுக்கோ விளங்குகின்றது. பேராயரிடமாகவும் பின்னர் அரச சிற்றூராகவும் இருந்த கிளாசுக்கோவில் கிளாசுக்கோ பல்கலைக்கழகம் 15ஆவது நூற்றாண்டில் நிறுவப்பட்டது. 18ஆம் நூற்றாண்டிலிருந்து நகர வளர்ச்சி விரைவாக நடைபெற்றது. அத்திலாந்திக்குப் பெருங்கடல் வழியாக பிரித்தானியாவின் வணிகம் பிரித்தானிய அமெரிக்காவிற்கும் (வட அமெரிக்கா) பிரித்தானிய மேற்கிந்தியத் தீவுகளுக்கும் நடைபெற இத்துறைமுக நகரம் முக்கியப் பங்காற்றியது.
தொழிற்புரட்சியை அடுத்து இந்த நகரத்தின் மக்கள்தொகையும் பொருளியல் நிலையும் வளர்ச்சியுற்று வேதிப்பொருட்கள், துணிகள் மற்றும் பொறியியல் நுட்பங்களுக்கு உலகின் சிறந்த மையமாக உருவானது. குறிப்பாக, கப்பல் கட்டுதல், கடல்வழிப் பொறியியல் சிறப்பாக நிலைபெற்று புகழ்பெற்ற கப்பல்கள் இங்கு கட்டப்பட்டன. ஐரோப்பாவின் முதல் பத்து நிதி மையங்களில் ஒன்றாக இது விளங்குகிறது.[7] இசுக்கொட்லாந்தின் பல முன்னணி நிறுவனங்களின் தலைமையகம் கிளாசுக்கோவில் தான் அமைந்துள்ளது. உலகில் மிகவும் வாழத்தகுந்த இடங்களின் வரிசையில் 57வது இடத்தில் உள்ளது.[8]
2014 பொதுநலவாய விளையாட்டுக்கள்போட்டிகளை கிளாசுக்கோ ஏற்று நடத்துகின்றது. காற்பந்தாட்டம் கிளாசுக்கோவில் பரவலாக விரும்பப்படும் விளையாட்டாக உள்ளது.
கிளாசுக்கோ தற்போதுள்ள இடத்தில் வரலாற்றுக் காலத்திற்கு முன்பிருந்தே குடியிருப்பு இருந்து வந்துள்ளது. கிளைடு ஆற்றின் மேற்பகுதியில் மொலென்தினார் பர்ன் சிற்றோடையுடன் கலக்குமிடத்தில் ஆறாம் நூற்றாண்டில் புனிதர் முங்கோ தேவாலயமொன்றை அமைத்திருந்தார். கிளாசுக்கோவிலிருந்து 15 மைல்கள் தொலைவில் அமைந்த டம்பர்டனைத் தலைநகராகக் கொண்டிருந்த இசுட்ராத்கிளைடு இராச்சியம் 9வது நூற்றாண்டில் மற்ற பகுதிகளுடன் இணைந்து இசுக்காட்லாந்து இராச்சியம் உருவானது.[9] இசுகாட்லாந்தின் இரண்டாவது பெரிய பேராய பீடமாக கிளாசுக்கோ நகரம் வளர்ந்தது. 10வது, 11வது நூற்றாண்டுகளில் இந்த பேராயப் பீடத்தை இசுகாட்லாந்தின் முதலாம் டேவிடும் பேராயர் ஜானும் சீரமைத்த பிறகு கிளாசுக்கோ மேலும் முதன்மை பெற்றது.
1707இல் ஒன்றிணைப்புச் சட்டங்களுக்குப் பின்னர், இசுக்காட்லாந்திற்கு புதிய பிரித்தானியப் பேரரசின் விரிந்த சந்தைக்கு அணுக்கம் கிட்டியது; இந்த உலகளாவிய வணிக வாய்ப்பிற்கான முதன்மை வாயிலாக கிளாசுக்கோ அமைந்தது. அமெரிக்காக்களுக்குடனான சர்க்கரை, புகையிலை, பருத்தி மற்றும் ஆக்கப்பட்ட பொருட்களுக்கான வணிகம் வளர்ந்தது.[10] அமெரிக்காவிலிருந்து புகையிலை இறக்குமதி செய்து செல்வந்தர்களான வணிகர்கள் (வர்ஜினியா டான்சு) கிளைடு ஆற்றின் கழிமுகத்தில் ஆழ்நீர் துறைமுகமாக கிளாசுக்கோத் துறைமுகம் கட்டினர்.[11] 18வது நூற்றாண்டில் பிரித்தானியப் புகையிலை வர்த்தகத்தில் பாதிக்கும் மேற்பட்டு இங்குதான் நிகழ்ந்தது. உச்சநிலையில் ஒவ்வொரு ஆண்டிலும் 47,000,000 lb (21,000 t) புகையிலை இறக்குமதி செய்யப்பட்டது.[12]
1821இல் கிளாசுக்கோவின் மக்கள்தொகை தலைநகர் எடின்பர்கை விடக் கூடுதலாக இருந்தது. 1800இல் உலகின் முதல் நகராட்சி நிர்வாகத்தில் அமைந்த காவல்துறையாக கிளாசுக்கோ நகரக் காவல் உருவானது. 1878இல் கிளாசுக்கோ நகர வங்கி வீழ்ந்தபோதும் 19வது நூற்றாண்டு வரை பொருளியல் வளர்ச்சி குறையவில்லை. பேரரசின் இரண்டாவது நகரமாக பிரித்தானிய கடற்வணிகத்தில் பாதிக்கும் மேற்பட்ட பங்கை வகித்தது.[13] உலகின் அனைத்து இடம்பெயர் பொறிகளில் காற்பகுதி இங்கு தயாரானது.[14] தவிரவும் கப்பல் கட்டுதல், பொறியியல், தொழிற்சாலை பொறிகள், பாலம் கட்டமைப்பு, வேதிப் பொருட்கள், வெடிமருந்துகள், நிலக்கரி வணிகத்தில் முதன்மை பெற்றது. ஆடை தயாரிப்பு, கம்பளத் தயாரிப்பு, தோல் பதனிடுதல், அறைகலன் ஆக்கம், உணவு, பானம் மற்றும் புகைக்குழல் தயாரிப்புகளில் முக்கிய வணிக மையமாக விளங்கியது. அச்சுத்துறையிலும் நூல் வெளியீட்டுத் துறையிலும் முன்னேற்றம் கண்டது. கப்பல், வங்கிகள், காப்பீடு மற்றும் பிற தொழில்சார் சேவைகள் விரிவடைந்தன.[15]
கிளைடு ஆற்றங்கரையில் இசுகாட்லாந்தின் மேற்கு மையப் பகுதியில் (இசுட்ராத்கிளைடு) கிளாசுக்கோ அமைந்துள்ளது. இந்நகரின் ஊடாகப் பாயும் மற்றொரு ஆறு கெல்வின் ஆறு ஆகும். இந்த ஆற்றினை ஒட்டியே வில்லியம் தாம்சனுக்கு கெல்வின் பிரபு என்ற பட்டம் வழங்கப்பட்டது. இதுவே பின்னாளில் வெப்பநிலையை அளவிடும் அறிவியல் அலகு ஆயிற்று.
கிளாசுக்கோ இசுக்காட்லாந்தின் 32 உட்கோட்டங்களில் ஒன்றாக உள்ளது.
1950களில் கிளாசுக்கோவின் மக்கள்தொகை தனது உச்சமாக 1,089,000 எட்டியது. இக்காலத்தில் உலகின் மிகுந்த மக்கள் நெருக்கமுள்ள நகரங்களில் ஒன்றாக விளங்கியது. 1960களில் புதிய ஊர்களின் வரவால் மக்கள்தொகை குறையத் தொடங்கியது. தவிரவும் 20ஆம் நூற்றாண்டில் நகரத்தின் எல்லைகள் இருமுறை சீரமைக்கப்பட்டன. நகராட்சி எல்லைகளையும் மீறி புறநகர்பகுதிகளில் நகரம் வளர்ந்து வருகிறது. கிளாசுக்கோவின் மக்கள்தொகை இருவகையில் வரையறுக்கப்படுகின்றன: கிளாசுக்கோ நகரமன்ற பகுதி மற்றும் அனைத்துப் புறநகர்களையும் உள்ளடக்கிய பெரும் கிளாசுக்கோ நகரியப் பகுதி.
கிளாசுக்கோவின் ஆயுள் எதிர்பார்ப்பு 72.9 ஆண்டுகள் ஆகும்; இது ஐக்கிய இராச்சியத்திலேயே மிகவும் குறைந்ததாகும்.[21] 2008இல், உலக சுகாதார அமைப்பின் அறிக்கை யொன்று ஆண்களின் ஆயுள் எதிர்பார்ப்பு கிளாசுக்கோவின் கால்டன் பகுதியில் மிகவும் குறைந்த 54ஆகவும் அடுத்திருந்த லென்சீ பகுதியில் 82 ஆகவும் சமநிலையற்று இருந்ததை சுட்டிக்காட்டியது.[22][23]
கிளாசுக்கோவில் பெரும் நகரியப் போக்குவரத்து அமைப்பு உள்ளது; இதனை போக்குவரத்திற்கான இசுட்ராத்கிளைடு கூட்டாளிகள் (SPT) மேலாண்மை செய்கிறது.
நகரத்தில் பல பேருந்து சேவைகள் உள்ளன; தனியார்மயமாக்கலுக்குப் பிறகு இவற்றை தனியார் நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. முதன்மை பேருந்து முனையமாக புச்சானன் பேருந்து நிலையம் செயலாற்றுகிறது.
ஐக்கிய இராச்சியத்திலேயே இலண்டனுக்கு அடுத்தநிலையில் மிகவும் விரிவான நகரியத் தொடர்வண்டி அமைப்பையும் கிளாசுக்கோ கொண்டுள்ளது. பெரும்பாலான தொடர்வண்டித் தடங்கள் பிரித்தானிய ரெயில் நிறுவனத்தின் கீழ் மின்மயமாக்கப்பட்டுள்ளன. இசுக்காட்லாந்தினுள் ஓடும் அனைத்து தொடர்வண்டிகளும் இசுக்காட்டிய அரசின் உரிமம் பெற்ற பர்ஸ்ட் இசுகாட்ரெயிலால் இயக்கப்படுகின்றன. கிளாசுக்கோ சென்ட்ரல் நிலையமும் கிளாசுக்கோ குயீன் இசுட்ரீட்டு தொடர்வண்டி நிலையமும் முதன்மையான முனையங்களாகும். இலண்டன் ஈசுட்டன் நிலையத்திலிருந்து 641.6-கிலோமீட்டர் (398.7 mi) தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள மேற்கு கடலோர முதன்மைத் தடம் கிளாசுக்கோ சென்ட்ரலில் முடிகிறது; இங்கிலாந்திற்கான அனைத்து சேவைகளும் இந்த நிலையத்திலிருந்தே இயக்கப்படுகின்றன.[24] இசுகாட்லாந்திற்கான பெரும்பாலான சேவைகள் மற்ற நிலையமான குயீன் இசுட்ரீட்டு நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
நகரத்தின் நகர்புறத் தொடரமைப்பு கிளைடு ஆற்றின் இருபுறமுமாக பிரிவுபட்டுளது; இவற்றை இணைக்க திட்டமிடப்பட்டுள்ள கிராசுரெயில் கிளாசுக்கோ திட்டம் இசுகாட்டிய அரசின் நிதி வழங்கலுக்காகக் காத்திருக்கிறது. நகர்புற தொடர்வண்டிகளைத் தவிர எஸ்பிடி கிளாசுக்கோ சப்வேவையும் இயக்குகிறது. ஐக்கிய இராச்சியத்தில் முழுமையும் புவிக்கடியில் இயங்கும் விரைவுப் போக்குவரத்து அமைப்பாக கிளாசுக்கோ சப்வே விளங்குகிறது.[25]
கிளாசுக்கோவின் இருபுறங்களுக்குமிடையே இயக்கப்பட்டு வந்த படகுப் போக்குவரத்து பாலங்களும் நீரடி துளைவழிகளும் அமைக்கப்பட்ட பிறகு தமது முதன்மையை இழந்துள்ளன. உலகின் கடைசி துடுப்பு நீராவிக் கப்பல் சேவையான பிஎஸ் வேவர்லி கிளாசுக்கோ நகர மையத்திலிருந்து பொழுதுபோக்குக்கான கடற்பயணங்களை மேற்கொள்கிறது. நகரத்தில் இன்றும் செயல்படும் துறைமுகத் துறையாக கிங் ஜார்ஜ் V டாக் பீல் குழுமத்தால் இயக்கப்படுகிறது. கிளைடு ஆற்றின் கழிமுகத்தில் அமைந்துள்ள முனையங்களிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் கொள்கலங்கள் மூலம் 7.5 மில்லியன் டன் சரக்குகள் மேலாளப்படுகின்றன. இங்கிருந்து பல ஐரோப்பிய நகரங்களுக்கும் நடுக்கடல் மற்றும் பால்டிக் துறைமுகங்களுக்கும் வணிக கப்பல் போக்குவரத்து எப்ரைட்சு கடல் வழியே நடைபெறுகிறது.[26]
முதன்மையான எம்8 விரைவுச்சாலை நகர மையத்தின் வழியேச் செல்கிறது; எம்77 , எம் 73, எம் 80 விரைவுச்சாலைகளுடன் இணைக்கிறது. ஏ 82 விரைவுச்சாலை அர்கிலுடனும் உயர்நிலங்களுடனும் இணைக்கிறது. எம் 74 நெடுஞ்சாலை தெற்கில் கார்லிசலுடன் இணைக்கிறது.
கிளாசுக்கோவில் இரண்டு வானூர்தி நிலையங்கள் இயங்குகின்றன: கிளாசுக்கோ பன்னாட்டு வானூர்தி நிலையம் (GLA) (நகர மையத்திலிருந்து மேற்கே 13 km or 8 mi தொலைவில்) மற்றும் கிளாசுக்கோ பிரெஸ்ட்விக் வானூர்தி நிலையம் (PIK) ( தென் மேற்கில் 30 மைல்கள் (50 km) தொலைவில்). தவிர நீர்மீதான வானூர்தி முனையமொன்றை கிளாசுக்கோ அறிவியல் மையம் கிளைடு ஆற்றின் மீது இயக்குகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.