ஆந்திரப் பிரதேச மாவட்டங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
ஆந்திரப் பிரதேசம் , உத்தராந்திரா , கடற்கரை ஆந்திரா மற்றும் இராயலசீமை ஆகிய மூன்று பிரிவுகளில் 26 மாவட்டங்களைக் கொண்டுள்ளது . உத்தராந்திரா பிரிவு சிறீகாகுளம் , விசயநகர , பார்வதிபுரம் மண்யம் , ஏ எஸ் ஆர் , விசாகப்பட்டினம் மற்றும் அனகாபள்ளிமாவட்டங்களை உள்ளடக்கியது . கடற்கரை ஆந்திரா பிரிவில் காக்கிநாடா , கொனசீமா , கிழக்கு கோதாவரி , மேற்கு கோதாவரி , ஏலூரு , கிருஷ்ணா , என் டி ஆர் , குண்டூர் , பால்நாடு , பாபட்லா , பிரகாசம் மற்றும் நெல்லூர் மாவட்டங்கள். இராயலசீமை பரிவு கர்நூல் , நந்தியால் , அனந்தபூர் , சிறீசத்ய சாய் , கடப்பா , அன்னமய்யா , திருப்பதி மற்றும் சித்தூர் மாவட்டங்களைக் கொண்டுள்ளது .
ஆந்திராவின் மாவட்டங்கள் | |
---|---|
ஆந்திராவின் மாவட்டங்கள் | |
வகை | மாவட்டங்கள் |
அமைவிடம் | ஆந்திரப் பிரதேசம் |
எண்ணிக்கை | 26 மாவட்டங்கள் |
மக்கள்தொகை | பார்வதிபுரம் மண்யம் – 9,25,340 (மிக குறைந்த); நெல்லூர் – 24,69,712 (மிக உயர்ந்த) |
பரப்புகள் | விசாகப்பட்டினம் – 1,048 km2 (405 sq mi) (மிக குறைந்த); பிரகாசம் – 14,322 km2 (5,530 sq mi) (மிக உயர்ந்த) |
அரசு | ஆந்திரப் பிரதேச அரசு |
உட்பிரிவுகள் | ஆந்திராவின் வருவாய் பிரிவுகள் |
பரப்பளவில் பிரகாசம் மிகப்பெரிய மாவட்டம், விசாகப்பட்டினம் சிறியது. நெல்லூர் அதிக மக்கள்தொகை கொண்ட மாவட்டம், பார்வதிபுரம் மன்யம் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம். மாவட்டங்கள் நிர்வாக நோக்கங்களுக்காக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வருவாய் பிரிவுகளாகவும் மண்டலங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.