மேற்கு கோதாவரி மாவட்டம்
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
மேற்கு கோதாவரி இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டம், ஆந்திர பகுதியில் மாநிலத்தின் கடலோரத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாக தலைமையகம் பீமாவரத்தில் அமைந்துள்ளது.[3] இந்தியாவின் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாவட்டத்தின் நிலவியல் பரப்பளவு 7,742 கி.மீ. என அளவிடப்பட்டுள்ளது. இம்மாவடத்தின் மொத்த மக்கள் தொகை, 2011 மக்கள் தொகை கணக்கீட்டின் படி, 3,936,966 ஆகும். இதன் மேற்கில் கிருஷ்ணா மாவட்டமும், கிழக்கில் கிழக்கு கோதாவரி மாவட்டமும், தெற்கே வங்காள விரிகுடாவும், வடக்கில் தெலுங்கானா மாநிலமும் அமைந்து, நில, நீர் எல்லைகளால் சூழப்பட்டுள்ளது.[4]
விரைவான உண்மைகள் மேற்கு கோதாவரி மாவட்டம் పశ్చిమ గోదావరి జిల్లా (தெலுங்கு), நாடு ...
மேற்கு கோதாவரி மாவட்டம்
పశ్చిమ గోదావరి జిల్లా (தெலுங்கு) | |
---|---|
மேல் இடதுபுறத்தில் இருந்து கடிகார திசையில்: பீமாவரம் அருகே நெல் வயல்கள், ரச்சுரு கிராமம், க்ஷீராராமில் உள்ள ராமலிங்கேஸ்வரசுவாமி கோவில், அச்சந்தாவில் கோதாவரி ஆறு, சோமேஸ்வர சுவாமி கோவில் | |
![]() ஆந்திரப் பிரதேசத்தில் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் இருப்பிடம் | |
நாடு | ![]() |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
பகுதி | கடற்கரை ஆந்திரா |
நிறுவப்பட்ட நாள் | 1925[1] |
மறுசீரமைக்கப்பட்டது | 4 ஏப்பிரல் 2022 |
தலைமையிடம் | பீமவரம் |
மண்டலங்கள் | 19 |
அரசு | |
• மாவட்ட ஆட்சித் தலைவர் | திருமதி. பி. பிரசாந்தி, இ.ஆ.ப |
• காவல்துறைக் கண்காணிப்பாளர் | திரு. யு.ரவி பிரகாஷ், இ.கா.ப |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,178 km2 (841 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 17,79,935 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
தொலைபேசி குறியீடு | +91 |
இணையதளம் | westgodavari |
மூடு