![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/01/Annamayya_in_Andhra_Pradesh_%2528India%2529.svg/langta-640px-Annamayya_in_Andhra_Pradesh_%2528India%2529.svg.png&w=640&q=50)
அன்னமய்யா மாவட்டம்
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
அன்னமய்யா மாவட்டம் (Annamayya district) ஆந்திரப் பிரதேசத்தின் 26 மாவட்டங்களில் ஒன்றாகும்.[4] இதன் நிர்வாகத் தலைமையிடம் ராயச்சோட்டி நகரம் ஆகும். சித்தூர் மாவட்டத்தின் மதனப்பள்ளி வருவாய் கோட்டம், ஒய் எஸ் ஆர் கடப்பா மாவட்டத்தின் ராயச்சோட்டி வருவாய் கோட்டம் மற்றும் புதிதாக நிறுவப்பட்ட ராஜம்பேட் வருவாய் கோட்டத்தின் பகுதிகளைக் கொண்டு 4 ஏப்ரல் 2022 அன்று அன்னமாச்சாரியார் நினைவாக அன்னமய்யா மாவட்டம் நிறுவப்பட்டது.[5]
விரைவான உண்மைகள் அன்னமய்யா, நாடு ...
அன்னமய்யா | |
---|---|
![]() | |
நாடு | ![]() |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
பகுதி | இராயலசீமை |
நிறுவப்பட்ட நாள் | 4 ஏப்ரல் 2022 |
தோற்றுவித்தவர் | ஆந்திரப் பிரதேச அரசு |
பெயர்ச்சூட்டு | அன்னமாச்சாரியார் |
தலைமையிடம் | ராயச்சோட்டி |
அரசு | |
• மாவட்ட ஆட்சித் தலைவர் | ஸ்ரீ பி.எஸ்.கிரிஷா, இ.ஆ.ப |
• காவல்துறைக் கண்காணிப்பாளர் | ஸ்ரீ வி ஹர்ஷவர்தன் ராஜு, இ.கா.ப |
பரப்பளவு | |
• மொத்தம் | 7,951 km2 (3,070 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 16,97,308 |
• அடர்த்தி | 213/km2 (550/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 516 XXX, 517 XXX |
தொலைபேசி | +91 |
வாகனப் பதிவு | AP 39[3] |
இணையதளம் | annamayya |
மூடு
7,951 சதுர கிலோ மீட்டர்[1] பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 16,97,308,[2] ஆகும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f7/Annamayya.png/640px-Annamayya.png)