ஆகத்து 24 (August 24) கிரிகோரியன் ஆண்டின் 236 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 237 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 129 நாட்கள் உள்ளன.
- 79 – விசுவியசு எரிமலை வெடித்தது. பொம்பெயி, ஹெர்குலியம் ஆகிய நகரங்கள் எர்மலைக் குழம்பில் மூழ்கின.
- 455 – வன்டல் இராச்சியத்தின் மன்னர் கென்செரிக் ரோம் நகரை முற்றுகையிட்டான். திருத்தந்தை முதலாம் லியோ நகரை அழிக்க வேண்டாமெனவும், குடிமக்களைக் கொல்ல வேண்டாம் எனவும் அவர் விடுத்த வேண்டுகோளை கென்செரிக் ஏற்றுக் கொண்டதை அடுத்து, நகர வாயில்கள் திறக்கப்பட்டன. ஆனாலும், வன்டல்கள் நகரை சூறையாடினர்.
- 1200 – இங்கிலாந்தின் ஜான் மன்னர் இசபெல்லாவைத் திருமணம் புரிந்தார்.
- 1215 – திருத்தந்தை மூன்றாம் இனொசென்ட் மாக்னா கார்ட்டாவை செல்லுபடியற்றது என அறிவித்தார்.
- 1349 – அரையாப்பு கொள்ளைநோயைக் காரணம் காட்டி ஆறாயிரம் யூதர்கள் செருமனியின் மாயின்சு நகரில் கொல்லப்பட்டனர்.[1]
- 1456 – கூட்டன்பர்கு விவிலிய நூல் வெளியிடப்பட்டது.
- 1482 – பெரிக் நகரமும் அரண்மனையும் இசுக்காட்லாந்திடம் இருந்து ஆங்கிலேய இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது.
- 1516 – முதலாம் செலிமின் தலைமையில் உதுமானியர் மம்லூக் சுல்தானகத்தைத் தோற்கடித்து இன்றைய சிரியா]]வைக் கைப்பற்றினர்.
- 1608 – இந்தியாவுக்கான முதலாவது அதிகாரபூர்வ பிரித்தானியப் பிரதிநிதி வில்லியம் ஆக்கின்சு சூரத்து நகரை வந்தடைந்தார்.
- 1682 – வில்லியம் பென் தனக்கு வழங்கப்பட்ட பிரதேசத்தை (இன்றைய டெலவெயர் மாநிலம்) தனது பென்சில்வேனியா குடியேற்றத்துடன் இணைத்தார்.
- 1690 – பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தைச் சேர்ந்த ஜொப் சார்னொக் கல்கத்தாவில் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பித்தார். இதுவே கல்கத்தாவின் நிறுவன நாளாகக் கருதப்படுகிறது.
- 1814 – பிரித்தானியப் படைகள் வாசிங்டன், டி. சி.யை முற்றுகையிட்டு, வெள்ளை மாளிகை, கெப்பிட்டல் மற்றும் பல கட்டடங்களுக்குத் தீ வைத்தனர்.
- 1821 – மெக்சிகோவின் எசுப்பானியாவுடனான மெக்சிக்கோ விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.
- 1857 – ஐக்கிய அமெரிக்காவில் பெரும் பொருளாதார நெருக்கடி ஆரம்பமானது.
- 1891 – தாமசு ஆல்வா எடிசன் அசையும் படக்கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
- 1911 – மனுவேல் சி அரியாகா போர்த்துகலின் முதலாவது அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1931 – ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாவது தொழிற்கட்சி அரசு பதவி விலகியதை அடுத்து, தேசிய அரசு ஆட்சிக்கு வந்தது.
- 1931 – பிரான்சும் சோவியத் ஒன்றியமும் தமக்கிடையே போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.
- 1932 – அமேலியா ஏர்ஃகாட் லாஸ் ஏஞ்சலஸ் முதல் நுவார்க் வரை தனியாளாகப் பறந்து ஐக்கிய அமெரிக்கா மீது பறந்த முதலாவது பெண் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
- 1936 – ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் மண்டலம் உருவாக்கப்பட்டது.
- 1937 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: பாசுக்கு இராணுவம் இத்தாலியிடம் சரணடைந்தது.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: உளப் பிறழ்ச்சி, மற்றும் வலது குறைந்தோருக்கான நாட்சி ஜெர்மனியின் டி4 கருணைக்கொலைத் திட்டத்தை இட்லர் இடை நிறுத்துவதற்கு உத்தரவிட்டார். ஆனாலும், இக்கொலைகள் போர் முடியும் வரை தொடர்ந்தன.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: கிழக்கு சொலமன் தீவுகளில் நடந்த சமரில், சப்பானிய வானூர்தி தாங்கிக் கப்பல் ரியூஜோ மூழ்கடிக்கப்பட்டதில் 120 பேர் உயிரிழ்ந்தனர்.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: கூட்டுப் படைகளின் பாரிசுத் தாக்குதல் ஆரம்பமானது.
- 1949 – வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) அமுலுக்கு வந்தது.
- 1954 – அமெரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி ஐக்கிய அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது.
- 1954 – பிரேசில் அரசுத்தலைவர் கெட்டூலியோ வார்காசு தற்கொலை செய்து கொண்டார்.
- 1970 – வியட்நாம் போர் எதிர்ப்பாளர்கள் விஸ்கொன்சின் பல்கலைக்கழகத்தின், இசுட்டெர்லிங் மண்டபத்தில் குண்டு ஒன்றை வெடிக்க வைத்தனர்.
- 1989 – கொலம்பியாவின் போதைப்பொருள் கடத்தல் தலைவர்கள் கொலம்பிய அரசு மீது "முழுமையான போரை" ஆரம்பித்தனர்.
- 1991 – மிக்கைல் கொர்பச்சோவ் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகினார்.
- 1991 – உக்ரைன் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகி தனி நாடானது.
- 1992 – சூறாவளி ஆண்ட்ரூ புளோரிடாவில் தரை தட்டியது.
- 1992 – மக்கள் சீனக் குடியரசுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டன.
- 1994 – பாலத்தீனர்களுக்கு மேற்குக் கரையில் மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சி வழங்கும் ஒப்பந்தத்தில் இசுரேலும் பலத்தீன விடுதலை இயக்கமும் கையெழுத்திட்டன.
- 1995 – வின்டோஸ் 95 வெளியிடப்பட்டது.
- 2004 – மாஸ்கோவில் தமதேதவோ வானூர்தி நிலையத்தில் இருந்து புறப்பட்ட இரண்டு விமானங்கள் செச்சினியத் தீவிரவாதிகளால் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டதில் 89 பயணிகள் உயிரிழந்தனர்.
- 2006 – புளூட்டோ ஒரு கோள் அல்லவெனவும், அது குறுங்கோள் எனவும் உலகளாவிய வானியல் ஒன்றியம் அறிவித்தது.
- 2008 – சீனாவில் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்தன.
- 2008 – கிர்கிசுத்தானில் பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 71 பேர் உயிரிழந்தனர்.
- 2010 – மெக்சிக்கோவில் 72 சட்டவிரோதக் குடியேறிகள் லோசு சேட்டாசு என்ற போதைப்பொருள் கடத்தல் அமைப்பினரால் கொல்லப்பட்டனர்.
- 2016 – மத்திய இத்தாலியில் ஏற்பட்ட 6.2 அளவு நிலநடுக்கம் இடம்பெற்றதில் 300 பேர் வரை உயிரிழந்தனர்.
- 1556 – சோபி பிராகி, டென்மார்க்கு வானியலாளர் (இ. 1643)
- 1759 – வில்லியம் வில்பர்ஃபோர்ஸ், ஆங்கிலேய அரசியல்வாதி, கொடையாளி (இ. 1883]])
- 1772 – நெதர்லாந்தின் முதலாம் வில்லியம் (இ. 1840)
- 1861 – பியெரி பெர்தியர், பிரெஞ்சுப் புவியியலாளர், பொறியாளர் (பி. 1782)
- 1863 – தி. த. கனகசுந்தரம்பிள்ளை, ஈழத்து தமிழ் இலக்கிய, பதிப்பாளர், தமிழறிஞர் (இ. 1922)
- 1888 – பி. ஜி. கெர், பம்பாய் மாகாணத்தின் முதல் பிரதம மந்திரி (இ. 1957)
- 1899 – ஒர்கே லூயிசு போர்கெசு, அர்செந்தீன-சுவிசு எழுத்தாளர் (இ. 1986)
- 1906 – நாரண துரைக்கண்ணன், எழுத்தாளர், பத்திரிகையாளர்
- 1908 – சிவராம் ராஜகுரு, இந்திய செயற்பாட்டாளர் (இ. 1931)
- 1920 – ரிச்சர்ட் கியூ. ட்விஸ், ஆங்கிலேய வானியலாளர் (இ. 2005)
- 1922 – ஓவர்ட் சின், அமெரிக்க வரலாற்றாளர் (இ. 2010)
- 1926 – எஸ். அகஸ்தியர், ஈழத்து எழுத்தாளர் (இ. 1995)
- 1927 – அஞ்சலிதேவி, தென்னிந்திய நடிகை, தயாரிப்பாளர் (இ. 2014)
- 1929 – யாசிர் அரஃபாத், பாலத்தீனத் தலைவர் (இ. 2004)
- 1934 – நாகலிங்கம் எதிர்வீரசிங்கம், இலங்கை விளையாட்டு வீரர், செயற்பாட்டாளர் (இ. 2024)
- 1934 – பி. எஸ். வெங்கடேசன், மலேசிய எழுத்தாளர்
- 1941 – இ. பத்மநாப ஐயர், ஈழத்து இலக்கிய ஆர்வலர்
- 1945 – வின்சு மெக்மான், அமெரிக்க மற்போர் கலைஞர்
- 1947 – பவுலோ கோய்லோ, பிரேசில் எழுத்தாளர்
- 1963 – தா. பாலகணேசன், ஈழத்து எழுத்தாளர்
- 1965 – பிரயன் ராஜதுரை, இலங்கை-கனடியத் துடுப்பாளர்
- 1981 – சாத் மைக்கேல் முர்ரே, அமெரிக்க நடிகர்
- 1986 – சாந்தனு பாக்யராஜ், தமிழகத் திரைப்பட நடிகர்
- 1988 – ரூபர்ட் கிரின்ட், ஆங்கிலேய நடிகர்
- 1617 – லீமா நகர ரோஸ், அமெரிக்காக்களின் முதல் புனிதர் (பி. 1586)
- 1832 – சாடி கார்னோ, பிரான்சிய இயற்பியலாளர் (பி. 1796)
- 1861 – பியெரி பெர்தியர், பிரான்சியப் புவியியலாளர் (பி. 1782)
- 1961 – வேதரத்தினம் பிள்ளை, இந்திய விடுதலை இயக்க செயற்பாட்டாளர், அரசியல்வாதி (பி. 1897)
- 1972 – வே. இராமலிங்கம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் (பி. 1888)
- 1974 – சசிகுமார், தமிழ்த் திரைப்பட நடிகர், இராணுவ வீரர் (பி. 1944)
- 1978 – கேத்லின் கென்யான், பிரித்தானியத் தொல்லியலாளர் (பி. 1906)
- 1982 – ஜியார்ஜியோ அபெட்டி, இத்தாலிய சூரிய வானியலாளர் (பி. 1882)
- 1990 – அரோல்டு மாசுர்சுகி, அமெரிக்கப் புவியியலாளர், வானியலாளர் (பி. 1922)
- 1995 – சுந்தரம் கரிவரதன், இந்தியாவின் தானுந்து விளையாட்டு வீரர் (பி. 1954)
- 2003 – வில்பிரட் தீசிசர், எத்தியோப்பிய-ஆங்கிலேய எழுத்தாளர், நாடுகாண் பயணி (பி. 1910)
- 2014 – ரிச்சர்ட் ஆட்டன்பரோ, ஆங்கிலேய நடிகர், இயக்குநர் (பி. 1923)
- 2020 – காத்தரைன் ஜான்சன், அமெரிக்க இயற்பியலாளர், கணிதவியலாளர் (பி. 1918
- விடுதலை நாள் (உக்ரைன், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து, 1991)