ஆகத்து 10 (August 10) கிரிகோரியன் ஆண்டின் 222 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 223 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 143 நாட்கள் உள்ளன.
- 610 – முகம்மது நபி குர்ஆனை அளித்த நாள். இது இஸ்லாமில், "லைலத்துல் கத்ர்" அல்லது ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு எனப்படுகிறது.
- 654 – முதலாம் மார்ட்டீனசுக்குப் பின்னர் முதலாம் இயூஜின் திருத்தந்தை ஆனார்.
- 955 – புனித உரோமைப் பேரரசர் முதலாம் ஒட்டோ மகியார்களைத் தோற்கடித்து 50 ஆண்டுகள் போரை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
- 1270 – யெக்கூனோ அம்லாக் எத்தியோப்பியப் பேரரசராக முடி சூடினார். இதன மூலம் நூறாண்டுகள் சாக்வி வம்சத்தின் ஆட்சியில்லாக் காலத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, சொலமனிய வம்சத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தார்.
- 1519 – மகலனின் ஐந்து கப்பல்கள் உலகைச் சுற்றிவர செவீயா நகரில் இருந்து புறப்பட்டன.
- 1680 – நியூ மெக்சிகோவில் எசுப்பானியக் குடியேறிகளுக்கெதிராக புவெப்லோக்களின் எழுச்சி ஆரம்பமானது.
- 1741 – குளச்சல் போர்: திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் படையினரைத் தோற்கடித்தார்.
- 1755 – பிரித்தானிய இராணுவனர் அகாடியர்களை நோவா ஸ்கோசியாவில் இருந்து பதின்மூன்று குடியேற்றங்களுக்கு கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.
- 1776 – அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்க விடுதலைச் சாற்றுரையின் செய்தி இலண்டனை வந்தடைந்தது.
- 1792 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி மன்னர் கைது செய்யப்பட்டார். அவரது பாதுகாப்புப் படையினர் பாரிசு தீவிரவாதக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1793 – இலூவா அருங்காட்சியகம் பாரிசில் திறந்து வைக்கப்பட்டது.
- 1802 – இலங்கை, திருகோணமலையில் தடுப்பூசி ஏற்றும் இயக்கம் ஆரம்பமானது.[1]
- 1809 – கித்தோ, (இன்றைய எக்குவடோரின் தலைநகரம்) எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. இக்கிளர்ச்சி 1810, ஆகத்து 2-இல் அடக்கப்பட்டது.
- 1821 – மிசோரி ஐக்கிய அமெரிக்காவின் 24வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- 1846 – சிமித்சோனிய நிறுவனம் அமெரிக்க சட்டமன்றத்தால் அங்கீகாரம் பெற்றது.
- 1856 – அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தைப் பெரும் சூறாவளி தாக்கியதில் 200 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
- 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படையினர் மிசோரியின் தென்மேற்குப் பகுதியில் கூட்டணிப் படைகளை வென்றனர்.
- 1904 – உருசிய-சப்பானியப் போர்: உருசியப் படைகளுக்கும் சப்பானியர்களுக்கும் இடையில் மஞ்சள் கடலில் கடற்போர் இடம்பெற்றது.
- 1905 – உருசிய-சப்பானியப் போர்: இரு நாடுகளுக்கும் இடையில் அமைதிப் பேச்சுகள் அமெரிக்காவில் நியூ ஹாம்சயர், போர்ட்ஸ்மவுத் நகரில் ஆரம்பமாயின.
- 1913 – இரண்டாம் பால்க்கன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு, பல்காரியா, உருமேனியா, செர்பியா, மொண்டெனேகுரோ, கிரேக்கம் ஆகிய நாடுகள் புக்கரெஸ்ட் நகரில் அமைதி உடன்பாட்டை எட்டின.
- 1920 – முதலாம் உலகப் போர்: உதுமானிய சுல்தான் ஆறாம் மெகுமதுவின் பிரதிநிதிகள் உதுமானியப் பேரரசை கூட்டுப் படைகளின் நாடுகளுக்குப் பகிர்ந்தளிக்கும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
- 1932 – 5.1 கிகி எடையுள்ள விண்வீழ்கல் ஒன்று ஏழு துண்டுகளாக வெடித்து அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் ஆர்ச்சி என்ற நகருக்கருகில் வீழ்ந்தன.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படையினர் குவாமில் நிலை கொண்டிருந்த கடைசி சப்பானியப் படைகளைத் தோற்கடித்தனர்.
- 1948 – சவகர்லால் நேரு இந்திய அணுசக்திப் பேரவையைத் துவக்கி வைத்தார்.
- 1953 – முதலாவது இந்தோசீனப் போர்: பிரெஞ்சு ஒன்றியம் வியட் மின்ன்னுக்கு எதிராகப் போர் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தனது படைகளை மத்திய வியட்நாமில் இருந்து திரும்ப அழைத்துக் கொண்டது.
- 1961 – வியட்நாம் போர்: அமெரிக்க இராணுவம் தென் வியட்நாமில் வியட்கொங் படைகளுக்கு உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்துவதற்காக 76,000 மீ3 இலையுதிர்ப்பிகளையும், களைக்கொல்லிகளையும் அங்கு வீசியது.[2]
- 1966 – கனடா, ஒட்டாவா நகரில் எரோன் வீதிப் பாலம் உடைந்ததில் ஒன்பது தொழிலாளிகள் உயிரிழந்தனர்.
- 1990 – மகெலன் விண்கலம் வெள்ளிக் கோளை அடைந்தது.
- 1993 – நியூசிலாந்து, தெற்குத் தீவை 7.0 அளவு நிலநடுக்கம் தாக்கியது.
- 2001 – அங்கோலாவில் தொடருந்து ஒன்று தாக்கப்பட்டதில் 252 பேர் கொல்லப்பட்டனர்.
- 2006 – திருகோணமலையில் சேருவிலை பகுதியில் இலங்கை இராணுவம் தொடர்ச்சியாகக் குண்டுகள் வீசியதில் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
- 2009 – சிலோவாக்கியாவில் இடம்பெற்ற சுரங்க வெடிப்பில் 20 பேர் உயிரிழந்தனர்.
- 2014 – தெகுரான் நகரில் மெகுரபாது வானூர்தி நிலையத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 40 பேர் உயிரிழந்தனர்.
- 1755 – பேஷ்வா நாராயணராவ், மராட்டியப் பேரரசின் 5-வது பேசுவா (இ. 1773)
- 1860 – விஷ்ணு நாராயண் பட்கண்டே, இந்துத்தானி இசைக்கலைஞர் (இ. 1936)
- 1894 – வி. வி. கிரி, இந்தியாவின் 4வது குடியரசுத் தலைவர் (இ. 1980)
- 1916 – சாவி, தமிழக எழுத்தாளர், இதழாசிரியர் (இ. 2001)
- 1926 – கண்பத்ராவ் தேஷ்முக், இந்திய அரசியல்வாதி
- 1927 – வைணு பாப்பு, இந்திய வானியலாளர் (இ. 1982)
- 1930 – க. துரைரத்தினம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1995)
- 1944 – எம். ஏ. நுஃமான், ஈழத்து எழுத்தாளர், கல்வியாளர்
- 1947 – அன்வர் இப்ராகீம், மலேசிய அரசியல்வாதி
- 1951 – குவான் மானுவல் சந்தோசு, கொலம்பியாவின் 59வது அரசுத்தலைவர்
- 1963 – பூலான் தேவி, இந்திய அரசியல்வாதி (இ. 2001)
- 1980 – ரொக்சான் மெக்கி, கனடிய-ஆங்க்லேய நடிகை
- 258 – புனித லாரன்சு, எசுப்பானிய-இத்தாலியப் புனிதர் (பி. 225)
- 1790 – பிலிப்பு தெ மெல்லோ, இலங்கைத் தமிழறிஞர் (பி. 1723)
- 1896 – ஓட்டொ லிலியென்தால், செருமானிய விமானி, பொறியியலாளர் (பி. 1848)
- 1945 – இராபர்ட் காடர்ட், அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1882)
- 2002 – யூகின் ஓடம், அமெரிக்க உயிரியலாளர், சூழலியலாளர் (பி. 1913)
- 2011 – பி. சி. அலெக்சாண்டர், இந்திய அரசியல்வாதி (பி. 1921)
- 2014 – கத்லீன் ஒல்லரென்ழ்சா, ஆங்கிலேயக் கணிதவியலாளர், வானியலாளர், அரசியல்வாதி (பி. 1912)
- 2024 – கே. நட்வர் சிங், இந்திய அரசியல்வாதி (பி. 1929)
- விடுதலை நாள் (எக்குவாடோர், எசுப்பானியாவிடம் இருந்து 1809)
"Remarkable events". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.