ஒட்டாவா (Ottawa, /ˈɒtəwə/ (ⓘ) or /ˈɒtəwɑː/) கனடா நாட்டின் தலைநகரம் ஆகும். இதுவே நாட்டின் 4வது பெரிய நகரம் ஆகும். இந்நகரம் தெற்கு ஒண்டாரியோவின் கிழக்குப்பகுதியில் ஒட்டாவா நதியின் தென்கரையில் அமைந்துள்ளது. இதன் எல்லையில் கியூபெக்கின் கெட்டினாவ் நகரம் அமைந்துள்ளது. இவை இரண்டும் இணைந்து ஒட்டாவா-கெட்டினாவ் பெருநகரப் பகுதியாகவும் தேசிய தலைநகர வலயமாகவும் விளங்குகின்றன.[6] 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இதன் மக்கள்தொகை 808,391 ஆகும்.
ஒட்டாவா | |
---|---|
நகரம் | |
ஒட்டாவா நகரம் Ville d'Ottawa | |
அடைபெயர்(கள்): பைடவுன் | |
குறிக்கோளுரை: "அட்வான்சு-ஒட்டாவா-ஆன் அவான்ட்" இரு அலுவல் மொழிகளில் (ஒட்டாவா முன்னேறு)[1] | |
ஒன்ராறியோவில் ஒட்டாவாவின் அமைவிடம் | |
நாடு | கனடா |
மாகாணம் | ஒன்றாரியோ |
வலயம் | தேசிய தலைநகர் வலயம் |
நிறுவல் | பைடவுனாக 1826[2] |
இணைப்பு | 1 சனவரி 2001 |
அரசு | |
• மேயர் | ஜிம் வாட்சன் |
• நகர மன்றம் | ஒட்டாவா நகர மன்றம் |
• நாடாளுமன்ற உறுப்பினர்கள் | உறுப்பினர் பட்டியல் |
பரப்பளவு | |
• நகரம் | 2,778.13 km2 (1,072.9 sq mi) |
• நகர்ப்புறம் | 501.92 km2 (193.79 sq mi) |
• மாநகரம் | 5,716.00 km2 (2,206.96 sq mi) |
ஏற்றம் | 70 m (230 ft) |
மக்கள்தொகை | |
• நகரம் | 8,83,391 (4th) |
• அடர்த்தி | 316.6/km2 (820/sq mi) |
• நகர்ப்புறம் | 9,33,596 |
• நகர்ப்புற அடர்த்தி | 1,860.1/km2 (4,818/sq mi) |
• பெருநகர் | 12,36,324 (4th) |
• பெருநகர் அடர்த்தி | 196.6/km2 (509/sq mi) |
நேர வலயம் | ஒசநே−5 (கிழக்கத்திய நேர வலயம்) |
• கோடை (பசேநே) | ஒசநே-4 (ஈடிடி) |
அஞ்சல் குறி வீச்சு | K0A, K1A-K4C[1] |
இடக் குறியீடு(கள்) | 613, 343தொலைபேசிக் குறியீடு |
இணையதளம் | www.ottawa.ca |
1826இல் பைடவுண் என நிறுவப்பட்டு பின்னர் 1855இல் "ஒட்டாவா"வாக ஒருங்கிணைக்கப்பட்டது. ஒட்டாவா கனடாவின் அரசியலுக்கும் தொழினுட்பத்திற்கும் மையமாக விளங்குகிறது. ஆரம்பத்திலிருந்த இதன் எல்லைகள் பல்வேறு சிறு இணைப்புகள் மூலமாக விரிவுபடுத்தப்பட்டு 2001இல் புதிய நகரமாக ஒருங்கிணைக்கப்பட்டது. "ஒட்டாவா" என்ற பெயர் உள்ளூர் மொழியில் அடவே என்பதிலிருந்து வந்துள்ளது; இதன் பொருள் "வணிகமாடல்" என்பதாகும்.[7]
துவக்கத்தில் அயர்லாந்திய, பிரான்சிய கிறித்தவர்களாலான குடியேற்றம் தற்போது பலவகை மக்கள் வாழும் பன்முக பண்பாடுடை நகரமாக விளங்குகிறது. கனடாவில் மிகவும் படித்தவர்கள் வாழும் நகரமாக ஒட்டாவா விளங்குகிறது. இங்கு பல உயர்நிலை கல்வி, ஆய்வு மற்றும் பண்பாட்டு நிறுவனங்கள் அமைந்துள்ளன. உயர்ந்த வாழ்க்கைத்தரமும் குறைந்த வேலையற்றோர் தொகையும் கொண்டதாக உள்ளது. வாழ்க்கைத்தரத்திற்கான மெர்செர் மதிப்பீட்டில் (221 நகரங்களில்) 14வது இடத்தில் உள்ளது. இந்த நகரத்தில் உள்ள ரிடொ கால்வாய் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.