மகாராட்டிரம்
மேற்கு இந்திய மாநிலம் / From Wikipedia, the free encyclopedia
மகாராட்டிரம் (மராத்தி: महाराष्ट्र Mahārāṣṭra, ஒலிப்பு: [மகாராஷ்ட்ரா]ⓘ) இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். மகாராட்டிரம் தன் எல்லைகளாக மேற்கே அரபிக்கடல், வடமேற்கில் குசராத் மற்றும் ஒன்றிய ஆட்சிப் பகுதிகளாகிய தாத்ரா மற்றும் நகர் அவேலி, வடகிழக்கில் மத்தியப் பிரதேசம், கிழக்கில் சத்தீசுக்கர், தெற்கில் கருநாடகம், தென்கிழக்கில் தெலுங்கானா மற்றும் தென்மேற்கில் கோவாவையும் கொண்டுள்ளது. இம்மாநிலத்தின் நிலப்பரப்பு (307,731 ச.கி.மீ. / 118,816 ச மைல்) இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 9.84% ஆகும். இம்மாநிலத்தின் தலைநகர் மும்பை, நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றானதும் மற்றும் பொருளாதாரத் தலைநகரமாக விளங்குவதுமாகும். புணே மற்றும் நாக்பூர் மற்ற பெரிய நகரங்களாகும். இம்மாநிலம் பரப்பளவில் மூன்றாவது பெரிய மாநிலமாகவும் மக்கள்தொகையில் இரண்டாவது பெரிய மாநிலமாகவும் விளங்குகிறது.
மகாராட்டிரா | |
---|---|
மேலிருந்து இட-வலமாக: மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பிரதாப்கட் கோட்டை, சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம், அசந்தா குகைகளில் உள்ள அவலோகிதரின் ஓவியங்கள், எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோவில், இந்தியாவின் நுழைவாயில் (மும்பை), எலிபண்டா குகைகளில் உள்ள மும்மூர்த்திகள் சிலை, சனிவார்வாடா கோட்டை மற்றும் ஆசூர் சாகிப் நாந்தேத் | |
சின்னம் | |
இந்தியாவில் மகாராட்டிராவின் அமைவிடம் | |
ஆள்கூறுகள் (மும்பை): 18.97°N 72.820°E / 18.97; 72.820 | |
நாடு | இந்தியா |
உருவாக்கம் | 1 மே 1960 |
தலைநகரங்கள் | மும்பை நாக்பூர்[1] |
மாவட்டங்கள் | 36 |
அரசு | |
• நிர்வாகம் | மகாராட்டிர அரசு |
• ஆளுநர் | பகத்சிங் கோசியாரி |
• முதலமைச்சர் | ஏக்நாத் சிண்டே |
• சட்டமன்றம் | ஈரவை சட்டமன்ற மேலவை 78 சட்டமன்ற பேரவை 288 |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,07,713 km2 (1,18,809 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 3-ஆவது |
மக்கள்தொகை (2011)[2] | |
• மொத்தம் | 11,23,72,972 |
• தரவரிசை | 2-ஆவது |
• அடர்த்தி | 370/km2 (950/sq mi) |
இனம் | மகாராட்டியர் |
GDP | |
• மொத்தம் (2018–19) | ₹27.96 இலட்சம் கோடி (US$350 பில்லியன்) |
• தலைக்கு (2017–18) | ₹1,80,596 (US$2,300) |
நேர வலயம் | ஒசநே+05:30 (இ.சீ.நே.) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-MH |
வாகனப் பதிவு | MH |
அலுவல்முறை மொழிகள் | மராத்தி[5][6] |
HDI (2017) | 0.695[7] (medium) · 15-ஆவது |
படிப்பறிவு (2011) | 82.34%[8] |
பால் விகிதம் (2011) | 929 ♀/1000 ♂[8] |
இணையதளம் | www |
†The State of Bombay was split into two States i.e. Maharashtra and Gujarat by the Bombay Reorganisation Act 1960[9] †† Common high court |
முதல் மாநில சீரமைப்பு குழுவின் பரிந்துரைப்படி தற்போதைய மகாராட்டிர மாநிலம் மே 1, 1960-இல் (மகாராட்டிர தினமாக கொண்டாடப்படுகிறது) உருவானது. மராத்தி மொழி பெரும்பான்மையாகப் பேசும் முந்தைய பாம்பே, தக்கண் மாநிலம் மற்றும் விதர்பா பகுதிகள் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
மகாராட்டிரம் இந்தியாவின் செல்வவள மிக்க மாநிலங்களில் ஒன்றாகும். 2005-06-ஆம் ஆண்டில் நாட்டின் தொழில் உற்பத்தியில் 15%- உம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.2%-உம் பங்களிக்கிறது.[10][11][12][13]