கோவா (மாநிலம்)
மேற்கு இந்திய மாநிலம் / From Wikipedia, the free encyclopedia
கோவா (Goa, (/ˈɡoʊə/ (கேட்கⓘ)) என்பது இந்தியாவின் தென்மேற்கு கடற்கரையில் கொங்கண் மண்டலத்தில் உள்ள ஒரு மாநிலமாகும். இது புவியியல் ரீதியாக தக்காணப் பீடபூமியிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலைகளால் பிரிக்கப்பட்டுள்ளது. [8] [9] இது வடக்கில் மகாராட்டிரம் மற்றும் கிழக்கு மற்றும் தெற்கில் கர்நாடகம் ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ளது. அரபிக்கடல் இதன் மேற்கே கடற்கரையை உருவாக்குகிறது. இது பரப்பளவில் இந்தியாவின் மிகச்சிறிய மாநிலமாகவும், மக்கள்தொகை அடிப்படையில் நான்காவது சிறிய மாநிலமாக உள்ளது. கோவா இந்தியாவின் அனைத்து மாநிலங்களைவிட தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. [10] இது நாட்டின் மொத்த தனிநபர் உள்நாட்டு உற்பத்தியை விட இரண்டரை மடங்கு அதிகமாக உள்ளது. [11] இந்தியாவின் பதினோராவது நிதிக் குழு, கோவாவை அதன் உள்கட்டமைப்பு வசதிகள் காரணமாக சிறந்த இடத்தில் உள்ள மாநிலமாக அறிவித்தது. மேலும் இந்தியாவின் தேசிய மக்கள்தொகை ஆணையம் இதை இந்தியாவில் சிறந்த வாழ்க்கைத் தரம் கொண்ட மாநிலமாக மதிப்பிட்டது (ஆணையத்தின் “12 குறிகாட்டிகள்” அடிப்படையில்). [11] மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணில் இந்திய மாநிலங்களில் இது மூன்றாவது மிக உயர்ந்த சுட்டெண் தரவரிசையில் உள்ளது.
கோவா | |
---|---|
Goa | |
குறிக்கோளுரை: Sarve Bhadrāṇi Paśyantu Mā Kaścid Duḥkhamāpnuyāt (எல்லோரும் நல்லதைக் காணட்டும், யாருக்கும் எந்தத் துன்பமும் ஏற்படக்கூடாது) | |
இந்தியாவில் அமைவிடம் | |
ஆள்கூறுகள் (பனஜி): 15.50°N 73.83°E / 15.50; 73.83 | |
நாடு | இந்தியா |
மாநில அமைப்பு | 30 மே 1987 |
தலைநகர் | பனஜி |
பெரிய நகரம் | வாசுகோட காமா |
மாவட்டங்கள் | 2 |
அரசு | |
• நிர்வாகம் | கோவா அரசு |
• ஆளுநர் | பி. எசு. சிறீதரன் பிள்ளை |
• முதலமைச்சர் | பிரமோத் சாவந்த் (பாசக) |
• சட்டமன்றம் | சட்டமன்றம் (40 தொகுதிகள்) |
• மக்களவைத் தொகுதி |
|
• தலைமைச் செயலாளர் | பரிமை ராய், இ.ஆ.ப[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,702 km2 (1,429 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 28-ஆவது |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 14,58,545[2] |
• தரவரிசை | 26-ஆவது |
இனம் | கோவான்கார் |
மொ.உ.உ (2020–21) | |
• மொத்தம் | ₹0.815 டிரில்லியன் (US$10 பில்லியன்) |
• தனிநபர் | ₹4,72,285 (US$5,900) |
நேர வலயம் | ஒசநே+05:30 (இசீநே) |
அஞ்சல் | 403XXX |
இடக் குறியீடு | +91 0832 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-GA |
வாகனப் பதிவு | GA- |
ம.மே.சு (2022) | 0.806[4] (மிக அதிகம்) |
பாலின விகிதம் | 973 ♀/1000 ♂[5] |
படிப்பறிவு | 88.70% (3-ஆவது) |
ஆட்சி மொழி | |
இணையதளம் | www |
^* தேவநாகரி எழுத்துக்களில் கொங்கணி மொழி அதிகாரபூர்வ மொழி, ஆனால் மராத்தி, ஆங்கிலம் ஆகியன அதிகாரபூர்வமாகப் பயன்படுத்த அனுமதி உண்டு.[6][7] |
மாநிலத்தின் தலைநகராக பனஜி உள்ளது. மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய நகரமாக வாஸ்கோட காமா உள்ளது. கோவாவில் உள்ள வரலாற்று நகரமான மட்காவ் போர்த்துகேயர்களின் கலாச்சார செல்வாக்கை இன்னும் வெளிப்படுத்துவதாக உள்ளது. போர்த்துகேயர்கள் 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வணிகர்களாக முதன்முதலில் துணைக்கண்டத்திற்கு பயணம் செய்து, விரைவில் அதைக் கைப்பற்றினர். பின்னர் கோவா போர்த்துகேயப் பேரரசின் ஒரு வெளிநாட்டுப் பிரதேசமாக மாறியது. பின்னர் இது போர்த்துகேய இந்தியா என்று அறியப்பட்டது. மேலும் 1961 இல் இந்தியாவுடன் இணைக்கப்படும் வரை சுமார் 450 ஆண்டுகள் பேர்த்துகேயர்களின் ஆட்சியிலேயே இருந்தது. [12] [13] கோவாவின் உத்தியோகபூர்வ மொழி, அதன் பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் கொங்கணி ஆகும்.
கோவாவின் வெண் மணல் கடற்கரைகள், சுறுசுறுப்பான இரவு வாழ்க்கை, வழிபாட்டுத் தலங்கள், உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பெற்றுள்ள கட்டிடக்கலை ஆகியவற்றால் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சர்வதேச மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இது வளம் மிகுந்த தாவரங்கள் மற்றும் விலங்கினங்களையும் கொண்டுள்ளது. ஏனெனில் இது வடமேற்கு தொடர்ச்சி மலை மழைக்காடுகளுக்கு மிக அருகில் உள்ளது. இது உலகின் அரிய பல்லுயிர் வெப்பப்பகுதிகளில் ஒன்றாகும்.