திசம்பர் 11 (December 11) கிரிகோரியன் ஆண்டின் 345 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 346 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 20 நாட்கள் உள்ளன.
- 361 – யூலியன் உரோமையின் தனிப்பெரும் பேரரசராக கான்ஸ்டண்டினோபில் நகர் வந்தார்.
- 630 – 10,000 போர்வீரர்களுடன் முகம்மது நபி மக்கா நோக்கிச் சென்றார்.
- 861 – அப்பாசியாவின் கலீபா அல்-முத்தவாக்கி துருக்கியப் படையினரால் படுகொலை செய்யப்பட்டார்.
- 969 – பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் நிக்கபோரசு அவரது மனைவி தியோபானோவினாலும், அவளது காதலனாலும் (பின்னாள் பேரரசர் முதலாம் ஜான்) படுகொலை செய்யப்பட்டார்.
- 1282 – வேல்சின் கடைசிப் பழங்குடி இளவரசர் கடைசி லெவெலின் கொல்லப்பட்டார்.
- 1688 – மாண்புமிகு புரட்சி: இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு, பிரான்சுக்குத் தப்பியோட முயன்ற போது, இங்கிலாந்துப் பேரரசின் இலச்சினையை தேம்சு ஆற்றில் எறிந்து விட்டுச் சென்றார்.
- 1789 – ஐக்கிய அமெரிக்காவின் மிகப் பழமையான பொதுப் பல்கலைக்கழகம் வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்) அமைக்கப்படட்து.
- 1792 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
- 1816 – இந்தியானா அமெரிக்காவின் 19வது மாநிலமாக இணைக்கப்பட்டது.
- 1868 – பிரேசில் இராணுவம் ஏவாய் சமரில் பரகுவை இராணுவத்தைத் தோற்கடித்தது.
- 1905 – உக்ரைன் கீவ் (அன்றைய உருசியப் பேரரசின் ஒரு பகுதி) நகரில் தொழிலாளர்களின் கிளர்ச்சி ஆரம்பமானது. சூலியாவ்க்கா குடியரசு உருவானது.
- 1907 – நியூசிலாந்தின் நாடாளுமன்றக் கட்டடம் முற்றாகத் தீக்கிரையானது.
- 1917 – முதலாம் உலகப் போர்: பிரித்தானியத் தளபதி எட்மண்ட் அலென்பி எருசலேம் நகரை நடந்து சென்றடைந்து அங்கு இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தார்.
- 1925 – கத்தோலிக்க திருச்சபை கிறிஸ்து அரசர் பெருவிழாவை அறிமுகப்படுத்தியது.
- 1927 – கம்யூனிச செம்படையினர் சீனாவின் குவாங்சௌவில் கிளர்ச்சியை ஏற்படுத்தி, நகரின் பெரும் பகுதியைக் கைப்பற்றி குவாங்சௌ சோவியத்தை அறிவித்தார்கள்.
- 1931 – ஆத்திரேலியா, கனடா, அயர்லாந்து, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா ஆகிய மேலாட்சி அரசுகளுக்குத் தமது முழுமையான அரசியலமைப்புகளைப் பேணும் சட்டமூலம் வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931 பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- 1936 – ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் எட்டாம் எட்வர்டு முடிதுறந்தார்.
- 1937 – இரண்டாம் இத்தாலிய-எத்தியோப்பியப் போர்: இத்தாலி உலக நாடுகள் சங்கத்தில் இருந்து வெளியேறியது.
- 1937 – எஸ்தோனியாத் தலைவர் ஜான் ஆன்வெல்ட் ஸ்டாலின் ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கா சப்பானியப் பேரரசு மீது போரை அறிவித்ததை அடுத்து, செருமனி, இத்தாலி ஆகியன அமெரிக்கா மீது போரை அறிவித்தன.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: போலந்து சப்பானியப் பேரரசு மீது போரை அறிவித்தது.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியக் கடற்படை வேக் தீவு சமரில் முதலாவது தோல்வியைச் சந்தித்தது.
- 1946 – ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் அமைக்கப்பட்டது.
- 1958 – மேல் வோல்ட்டா பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1962 – கனடாவில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றபட்டது.
- 1964 – சே குவேரா ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றினார். இவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஐநா கட்டடத்தின் மீது குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது.
- 1972 – அப்பல்லோ 17 நிலாவில் இறங்கியது. இதுவே நிலாவில் இறங்கிய ஆறாவதும், கடைசியுமான அப்பல்லோ திட்டம் ஆகும்.
- 1981 – எல் சல்வடோரில் இராணுவத்தினர் உள்நாட்டுப் போரின் ஒரு கட்டமாக கிட்டத்தட்ட 900 பொதுமக்களை கொன்றனர்.
- 1990 – அல்பேனியாவில் மாணவர்கள், தொழிலாளர்களின் போராட்டங்கள் ஆரம்பமானது. இதுவே காலப்போக்கில் அல்பேனியாவில் பொதுவுடைமை வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.
- 1993 – மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் உயர்மாடிக் கட்டடம் ஒன்று வீழ்ந்ததில் 48 பேர் உயிரிழந்தனர்.
- 1994 – டோக்கியோ நோக்கிச் சென்ற பிலிப்பீனிய விமானம் ஒன்றில் குண்டு ஒன்று வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார். விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
- 1994 – உருசியப் படைகள் செச்சினியாவில் ஊடுருவ உருசிய அரசுத்தலைவர் போரிஸ் யெல்ட்சின் ஆணையிட்டார்.
- 1998 – தாய்லாந்தைச் சேர்ந்த விமானம் வீழ்ந்ததில் 101 பேர் உயிரிழந்தனர்.
- 2001 – சீனா உலக வணிக அமைப்பில் இணைந்தது.
- 2005 – ஆத்திரேலியா, சிட்னியில் குரொனல்லா என்ற இடத்தில் வெள்ளை இன ஆத்திரேலியர்களுக்கும் லெபனானிய ஆத்திரேலியர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது.
- 1781 – டேவிட் புரூஸ்டர், இசுக்கொட்டிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1868)
- 1789 – மிரோன் வின்சுலோ, அமெரிக்க மதப்பரப்புனர் (இ. 1864)
- 1803 – ஹெக்டர் பேர்லியோஸ், பிரான்சிய புனைவிய இசையமைப்பாளர் (இ. 1869)
- 1843 – ராபர்ட் கோக், நோபல் பரிசு பெற்ற செருமானிய மருத்துவர் (இ. 1910)
- 1863 – ஆன்னி ஜம்ப் கெனான், அமெரிக்க வானியலாளர் (இ. 1941)
- 1882 – சுப்பிரமணிய பாரதி, தமிழகக் கவிஞர், ஊடகவியலாளர் (இ. 1921)
- 1882 – மாக்ஸ் போர்ன், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1970)
- 1890 – மார்க் டோபே, அமெரிக்க-சுவிசு ஓவியர் (இ. 1976)
- 1911 – நகிப் மஹ்ஃபூஸ், நோபல் பரிசு பெற்ற எகிப்திய எழுத்தாளர் (இ. 2006)
- 1918 – அலெக்சாண்டர் சோல்செனிட்சின், நோபல் பரிசு பெற்ற உருசிய எழுத்தாளர் (இ. 2008)
- 1922 – திலிப் குமார், பாக்கித்தானிய-இந்திய நடிகர்
- 1931 – ஓஷோ, இந்திய மெய்யியலாளர் (இ. 1990)
- 1935 – பிரணப் முகர்ஜி, 13வது இந்தியக் குடியரசுத் தலைவர் (இ. 2020)
- 1937 – எம். சந்திரசேகரன், தமிழக வயலின், வாய்ப்பாட்டுக் கலைஞர்
- 1943 – ஜான் கெர்ரி, அமெரிக்க அரசியல்வாதி
- 1949 – கத்ரி கோபால்நாத், தென்னிந்திய சாக்சபோன் இசைக் கலைஞர் (இ. 2019)
- 1951 – மழிலான் ஆத்மன், மலேசிய வானியலாளர்
- 1951 – பீட்டர் டி. டேனியல்ஸ், ஆங்கிலேய மொழியியலாளர்
- 1954 – பிரசந்தா, நேபாளப் பிரதமர்
- 1958 – ரகுவரன், தமிழக நடிகர் (இ. 2008)
- 1966 – பெனடிக்டா பொக்கொலி, இத்தாலிய நாடக, திரைப்பட நடிகர்
- 1969 – விசுவநாதன் ஆனந்த், இந்திய சதுரங்க வீரர்
- 1969 – மாக்ஸ் மார்டினி, அமெரிக்க நடிகர், இயக்குநர்
- 1980 – ஆர்யா, தமிழ்த் திரைப்பட நடிகர்
- 1987 – பீட்டர் ஷோல்ஸ், செருமனியக் கணிதவியலாளர்
- 1996 – ஹைலி ஸ்டெயின்பீல்ட், அமெரிக்க நடிகை
- 384 – முதலாம் தாமசுஸ் (திருத்தந்தை) (பி. 305)
- 1241 – ஒகோடி கான், மங்கோலியப் பேரரசர் (பி. 1186)
- 1784 – ஆண்டர்சு இலெக்செல், பின்னிய-சுவீடிய வானியலாளர், கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1740)
- 1937 – ஜான் ஆன்வெல்ட், எசுத்தோனிய அரசியல்வாதி (பி. 1884)
- 1945 – சார்லசு பாப்ரி, பிரான்சிய இயற்பியலாளர் (பி. 1867)
- 1977 – ஹன்டி பேரின்பநாயகம், இலங்கைத் தமிழ்க் கல்விமான், சமூக சேவையாளர், அரசியல்வாதி (பி. 1899)
- 2002 – நானி பல்கிவாலா, இந்திய அரசியல்சட்ட நிபுணர், பொருளியல் அறிஞர் (பி. 1920)
- 2004 – எம். எஸ். சுப்புலட்சுமி, கருநாடக இசைப் பாடகி (பி. 1916)
- 2011 – மரியோ மிராண்டா, இந்திய-கோவா ஓவியர் (பி. 1926)
- 2012 – ரவி சங்கர், இந்திய சித்தார் இசைக்கலைஞர் (பி. 1920)