சப்பானியப் பேரரசு (大日本帝国/大日本帝國,டாய் நிப்பான் டெய்கோகு?, பொருள் "பெரும் சப்பானியப் பேரரசு")[7] (Empire of Japan) அரசியலமைப்பின்படியான, நாடாளுமன்ற முடியாட்சி, பேரரசு மற்றும் உலக வல்லமை கொண்ட இராச்சியமாகும்.[5] இது சனவரி 3, 1868இல் மெய்சி மீள்விப்பு காலத்திலிருந்து 1947இல் தற்கால சப்பானின் அரசியலமைப்பு சட்டம் நிறைவேற்றப்படும்வரை அமைந்திருந்தது.
சப்பானியப் பேரரசின் ஃபுகோகு கியோஹை (富国強兵,ஃபுகோகு கியோஹை? "நாட்டை செழிப்பாக்கு, படைத்துறையை வலிதாக்கு") முழக்கத்துடன் நிறைவேறிய தொழில்மயமாக்கலும் படைத்துறையாக்கமும் சப்பானை உலக வல்லமை உள்ள நாடாக மாற்றியது; அச்சு நாடுகளுடன் கூட்டு சேர்ந்து ஆசியா - பசிபிக் பகுதியின் பெரும்பாலான நாடுகளை கைப்பற்றியது. 1942இல் சப்பானியப் பேரரசு உச்சநிலையில் இருந்தபோது அதன் ஆட்சிப்பரப்பு 7,400,000 சதுர கிலோமீட்டர்கள் (2,857,000sqmi) ஆக இருந்தது. இதனால் வரலாற்றிலேயே மிகப் பெரிய கடல்சார் பேரரசுகளில் ஒன்றாக விளங்கியது.[8]