சென்னை புறநகர் பேருந்து நிலையம்

ஆசிய கண்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia

சென்னை புறநகர் பேருந்து நிலையம்map

சென்னை புறநகர் பேருந்து நிலையம் (அதிகாரப்பூர்வமாக புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம்)[1] அல்லது பரவலாக கோயம்பேடு பேருந்து நிலையம் என்பது இந்தியாவின், சென்னை மாநகரின் கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள ஒரு மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும். 37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பேருந்து நிலையம், ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரியதாகும்.[2] ஐ. எஸ். ஓ 9001:2000 தரச் சான்றிதழும் இப்பேருந்து நிலையம் பெற்றுள்ளது.[2]

விரைவான உண்மைகள் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம்சென்னை புறநகர் பேருந்து நிலையம், பொது தகவல்கள் ...
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம்
சென்னை புறநகர் பேருந்து நிலையம்
Thumb
சென்னைப் புறநகர் பேருந்து நிலையத்தின் முதன்மை முகப்பு
பொது தகவல்கள்
அமைவிடம்உள் வட்டச் சாலை, கோயம்பேடு, சென்னை
ஆள்கூறுகள்13.06745°N 80.20566°E / 13.06745; 80.20566
உரிமம்சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்
நடைமேடை160
இணைப்புக்கள்கோயம்பேடு மெட்ரோ நிலையம் (கட்டமைப்பில்)
கட்டமைப்பு
தரிப்பிடம்உள்ளது
துவிச்சக்கர வண்டி வசதிகள்உள்ளது
மாற்றுத்திறனாளி அணுகல்ஆம்
வரலாறு
திறக்கப்பட்டது2002
பயணிகள்
பயணிகள் நாள் ஒன்றுக்கு 8,00,000 முதல் 10,00,000/வரை
மூடு

கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கும் தெற்காசிய விளையாட்டுகளுக்காக கட்டப்பட்ட சிற்றூருக்கும் இடையே உள்வட்டச் சாலை (சவகர்லால் நேரு சாலை)யில் அமைந்துள்ள இப்பேருந்து நிலையம் 103 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.[3] இதனை நவம்பர் 18, 2002 இல் அன்றைய முதல்வர் புரட்சி தலைவி டாக்டர்அம்மாஜெ. ஜெயலலிதா அவர்கள் திறந்து வைத்தார். 2002 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் நாளன்று, அப்போதைய தமிழக முதல்வராக இருந்த புரட்சி தலைவி டாக்டர் அம்மா ஜெயலலிதா அவர்களால் நிறுவப்பட்டது.[4] இப்பேருந்து நிலையம் ஒரே சமயத்தில் 270 பேருந்துகளையும், நாளொன்றுக்கு 2000 பேருந்துகளையும் 2 லட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்டது.[3]

இந்தப் பேருந்து நிலையத்தின் பின்புறம் சென்னை மெட்ரோ தனது இருக்கைப் பெட்டிகள் பணிமனையை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

வரலாறு

புறநகர் பேருந்து நிலையம் முதலில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு அண்மையில் ஏறத்தாழ 1.5  ஏக்கர் பரப்பளவில் பிராட்வே முனையம் என அமைந்திருந்தது.[5] வளர்ந்து வந்த போக்குவரத்துத் தேவைகளை இந்த முனையம் சந்திக்க இயலாமல் போனதால் ஓர் புதிய முனையத்தை கோயம்பேட்டில் கட்டமைக்கத் திட்டமிடப்பட்டது. இதற்காக சூன் 6, 1999 அன்று நடைபெற்ற கால்கோள் விழாவிற்கு அன்றைய முதல்வர் மு. கருணாநிதி தலைமையேற்றார். சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தினால் திட்டமிட்டு, வடிவமைக்கப்பட்ட இந்த வளாகம்  103 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டது.[3] இதனை நவம்பர் 18, 2002இல் அன்றைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா திறந்து வைத்தார்.[6]

சேவைகள்

Thumb
சென்னையிலிருந்து அனைத்து நகரிடை பேருந்துகளும் இயக்கப்படுகின்ற சென்னைப் புறநகர் பேருந்து நிலையம் ஆசியாவிலேயே பெரும் பேருந்து நிலையமாக விளங்குகிறது.

இந்த நிலையத்தில் மூன்று கிளைகளில் ஆறு நடைமேடைகளும் 180 பேருந்து நிறுத்துமிடங்களும் உள்ளன. இங்கு எந்த நேரத்திலும் 270 சேவைப் பேருந்துகள் நிறுத்தப்படவும், ஓய்வுநிலையாக 60 பேருந்துகளும் நிறுத்தப்படவும் கூடும். நகரின் முக்கிய வாயிலாக விளங்கும் இந்த முனையம் 2000 பேருந்துகளையும் 200,000 பயணிகளையும் மேலாளும் திறனுடையது.[3] இங்கு தற்போது ஒரே நேரத்தில் 500 பேருந்துகளும், நாளொன்றுக்கு 3,000 பேருந்துகளும் 250,000 பயணிகளும் பயன்படுத்துகின்றனர்.[7] 36.5-ஏக்கர் (148,000 m2) பரப்பளவில் அமைந்துள்ள இந்நிலையத்தில் 17,840 sq ft (1,657 m2) பரப்பில் பயணிகளுக்கான வசதிகளும் 25,000 sq ft (2,300 m2) பரப்பில் தானிகள், வாடகை உந்துகள் மற்றும் தனியார் தானுந்துகளும் 16,000 sq ft (1,500 m2) பரப்பில் இரு சக்கர தானுந்துகளும் நிறுத்த வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.[3] மேலும் இங்கு மூன்று தங்கு விடுதிகளும், மூன்று சிற்றுணவகங்களும் மூன்று பயணர் சரக்கு வைக்குமிடங்களும் பத்து பயணச்சேவை முகமையகங்களும் கடைகளும் பேரங்காடிகளும் தாவருவிகளும் வாடகைக்கான தங்கு கூடங்களும் (குளிர்பதனப்படுத்தப்பட்ட மற்றும் அல்லாத) கழிவறைகளும் உள்ளன; இருபத்தி நான்கு மணி நேரமும் இயங்கும் பாதுகாப்பு வீரர்கள், இலவசமாக தூய குடிநீர், 24 மணி நேர இலவச முதலுதவி மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் வசதிக்கு சக்கர இருக்கைகளும் வழங்கப்படுகின்றன. இங்கு ஒருநாளைக்கு 500,000 பேருக்கும் மேலாக வந்துபோவதாகவும் 4,800 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மதிப்பிட்டுள்ளது.

தன்னுந்து நிறுத்துமிடங்கள்

இந்தப் பேருந்து முனையத்தில் 1,500 முதல் 2,000 வரையிலான ஈராழி தன்னுந்துகளும் 60 நாற்சக்கர தன்னுந்துகளும் நிறுத்தக்கூடிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.[8] 2008 ஆம் ஆண்டில் நுழைவாயிலில் பேருந்துகளும் ஈராழி தன்னுந்துகளும், பிற தன்னுந்துகளும் நெரிசலை ஏற்படுத்தாதிருக்கும் பொருட்டு தரைக்குக் கீழே ஓர் ஈரடுக்கு ஈராழி தானுந்து நிறுத்தும் வசதியை அமைக்கத் திட்டமிடப்பட்டது. 9 கோடி திட்டச்செலவில் ஒருநாளுக்கு 3000 ஈராழி தன்னுந்துகள் நிறுத்தும் தேவையை கருத்தில் கொண்டு இதன் வடிவமைப்பு திட்டமிடப்பட்டது. சனவரி 2009இல் 6,000-ச.மீ பரப்பில் துவங்கிய இப்பணி ஆகத்து 2010இல் 17 கோடி செலவில் நிறைவுற்றது. இந்த நிறுத்தும் வசதியைத் திசம்பர் 26, 2010இல் அன்றைய துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.[9]

சென்னை நகரத்தில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் கட்டப்பட்ட இது போன்றதொரு நிறுத்தற் வசதி இதுவே முதலாவதாகும். பேருந்து வளாகத்தின காலிமனையில் உள் வட்டச் சாலையை ஒட்டி இரண்டு தளங்களில் கட்டப்பட்டுள்ளது. 3000 ச.மீ பரப்புள்ள ஒவ்வொரு தளத்திலும் 1500 ஈராழி வண்டிகள் நிறுத்தப்படக் கூடும். முதல் தளம் 10 அடிகள் (3.0 m) ஆழத்திலும் இரண்டாம் தளம் 20 அடிகள் (6.1 m) ஆழத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. இதனை அணுக இரு சாய்தளங்களும் மூன்று மாடிப்படிகளும் உள்ளன. தீயணைப்புச் சாதனங்களும் கண்காணிப்புக் காமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. நிறுத்தற்கூடத்தின் மேற்கூரையில் தெளிப்புப் பாசனத்துடன் கூடிய பூங்கா, நீரூற்று மற்றும் நடப்பவர்களுக்கான சுற்றுப்பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன.[10][11]

பேருந்து நிலையத்தில் விளம்பரங்கள்

Thumb
வெளியூர் பேருந்துகளுக்கான வடக்குப்புர நுழைவாயில்

சென்னையில் விளம்பரம் வெளியிட பெரும் வசதியளிக்கும் வளாகங்களில் இந்தப் பேருந்து முனையமும் ஒன்றாக உள்ளது. உச்ச நீதிமன்றத்தால் வெளியிடங்களில் விளம்பரப் பதாகைகள் அமைக்கத் தடை செய்யப்பட்டுள்ள நிலையில்[சான்று தேவை] சென்னை வானூர்தி நிலையம், சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம் மற்றும் இங்கு மட்டுமே உள்வாயில்-வெளிவாயில்களில் சட்டப்படி விளம்பரப் பதாகைகள் அமைக்க இயலும் என்ற நிலையில் இந்த வளாகத்தில் 100,000 சதுர அடிகள் (9,300 m2) பரப்பிற்கு காட்சிபடுத்தக்கூடிய வெளி அமைந்துள்ளது.

மற்ற வசதிகள்

சூன் 2009இல், சென்னை மாநகரக் காவல் இங்கு "சிறார்-கவனிப்பு மையம்" ஒன்றை அமைத்து காணாமற் போனவர்களைக் கண்டுபிடிக்கவும், வழிதவறிய சிறுவர்களுக்கும் உதவி வருகின்றனர். மேலும் சிறுவர்களுக்கெதிரான துன்புறுத்தல்களுக்கு ஆளானவர்களுக்கும் ஆவன செய்து வருகின்றனர்.[12]

இந்த முனையத்தில் 64 மூடியச் சுற்று ஒளிப்படக் கருவிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

சென்னை ஒப்பந்த பயணச்சேவை பேருந்து நிலையம்

சென்னை ஒப்பந்த பயணச்சேவை பேருந்து நிலையம் (Chennai Contract Carriage Bus Terminus, CCCBT), பரவலாக ஓம்னி பேருந்து நிலையம் சென்னை புறநகர் பேருந்து நிலையத்திற்கு அடுத்து ஒப்பந்த அடிப்படையில் (எதிர் பட்டியலிடப்பட்ட வழிதடங்களில்) வெளியூர் செல்லும் தனியார் பேருந்துகள் நிறுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 80 பேருந்துகள் நிறுத்தவும், 100 பயணமில்லாப் பேருந்துகள் நிறுத்தவும், 50 பயணச் சேவை முகமையகங்கள் இயங்கவும் ஒரு நேரத்தில் 120 பயணியர் தங்கக்கூடிய 14 பயணியர் காத்திருப்புக் கூடங்களும் அமைந்துள்ளன. இதனையும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மேற்பார்த்து வருகிறது. நாளொன்றுக்கு 200 பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.[13]

பேருந்து சேவைகள்

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களின் தலைநகர்களுக்கும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களின் முக்கிய இடங்களுக்கும், பேருந்துகளை இயக்குகிறது.

நடைமேடைகள்

மேலதிகத் தகவல்கள் பாந்து எண், பேருந்து செல்லும் ஊர் பெயர் ...
பாந்து எண்பேருந்து செல்லும் ஊர் பெயர்மாவட்டம்வழித்தடம்
நடைமேடை - 1
1,2,3காஞ்சிபுரம்காஞ்சிபுரம் மாவட்டம்பூந்தமல்லி, திருப்பெரும்புதூர்
4,5செய்யாறுதிருவண்ணாமலை மாவட்டம்காஞ்சிபுரம்
6செய்யாறு PVTதிருவண்ணாமலை மாவட்டம்காஞ்சிபுரம்
7,8புதுச்சேரிபுதுச்சேரி மாநிலம்திண்டிவனம்
9புதுச்சேரி PRTCபுதுச்சேரி மாநிலம்திண்டிவனம்
10கடலூர்கடலூர் மாவட்டம்
11சிதம்பரம்கடலூர் மாவட்டம்கடலூர்
12சிதம்பரம்கடலூர் மாவட்டம்விக்கிரவாண்டி
13நெய்வேலி TSகடலூர் மாவட்டம்
14வடலூர் / காட்டுமன்னார் கோவில்தஞ்சாவூர் மாவட்டம்
15திண்டிவனம்விழுப்புரம் மாவட்டம்
16,17,18விழுப்புரம்விழுப்புரம் மாவட்டம்
19செஞ்சிவிழுப்புரம் மாவட்டம்
20திருக்கோவிலூர்விழுப்புரம் மாவட்டம்விழுப்புரம்
21,22கள்ளக்குறிச்சிகள்ளக்குறிச்சி மாவட்டம்விழுப்புரம்
23விருத்தாசலம்கடலூர் மாவட்டம்
24திட்டக்குடிகடலூர் மாவட்டம்
25செந்துறை/அரியலூர்அரியலூர் மாவட்டம்
26ஜெயங்கொண்டம் CRCஅரியலூர் மாவட்டம்
27,28,29,30பெங்களூரு KSRTCகர்நாடகம்
நடைமேடை - 2
1,2,3,4ஆரணிதிருவண்ணாமலை மாவட்டம்ஆற்காடு
5ஆரணி - AC & UDதிருவண்ணாமலை மாவட்டம்ஆற்காடு
6போளூர்திருவண்ணாமலை மாவட்டம்ஆற்காடு, ஆரணி
7புதுச்சேரி PVTபுதுச்சேரி மாநிலம்சூனாம்பேடு
8புதுச்சேரிபுதுச்சேரி மாநிலம்சூனாம்பேடு
9மாமல்லபுரம்செங்கல்பட்டு மாவட்டம்
10கல்பாக்கம்செங்கல்பட்டு மாவட்டம்செங்கல்பட்டு
11,12வந்தவாசிதிருவண்ணாமலை மாவட்டம்மேல்மருவத்தூர்
13திருவண்ணாமலைதிருவண்ணாமலை மாவட்டம்மேல்மருவத்தூர், வந்தவாசி
14,15வந்தவாசிதிருவண்ணாமலை மாவட்டம்உத்திரமேரூர்
16,17போளூர்திருவண்ணாமலை மாவட்டம்உத்திரமேரூர், வந்தவாசி, சேத்துப்பட்டு
18திருவண்ணாமலைதிருவண்ணாமலை மாவட்டம்காஞ்சிபுரம், வந்தவாசி, சேத்துப்பட்டு
19,20,21,22,23,24திருவண்ணாமலைதிருவண்ணாமலை மாவட்டம்திண்டிவனம்
25திருத்தணிதிருவள்ளூர் மாவட்டம்திருவள்ளூர்
26,27,28,29பெங்களூரு SETCகர்நாடகம்
நடைமேடை - 3
1,2,3ஆற்காடுஇராணிப்பேட்டை மாவட்டம்பூந்தமல்லி
4சித்தூர்ஆந்திர மாநிலம்
5,6,7,8வேலூர்வேலூர் மாவட்டம்திருப்பெரும்புதூர்
9வேலூர் PVTவேலூர் மாவட்டம்திருப்பெரும்புதூர்
10,11குடியாத்தம்வேலூர் மாவட்டம்வேலூர்
12,13பேர்ணாம்பட்டுவேலூர் மாவட்டம்வேலூர்
14ஆம்பூர்திருப்பத்தூர் மாவட்டம்வேலூர்
15,16,17திருப்பத்தூர்திருப்பத்தூர் மாவட்டம்வேலூர்
18,19,20தர்மபுரிதர்மபுரி மாவட்டம்வேலூர்
21சேலம்சேலம் மாவட்டம்வேலூர், திருப்பத்தூர்
22கிருஷ்ணகிரிகிருஷ்ணகிரி மாவட்டம்வேலூர்
23,24,25ஓசூர்கிருஷ்ணகிரி மாவட்டம்வேலூர், கிருஷ்ணகிரி
26,27,28,29,30சேலம்சேலம் மாவட்டம்விழுப்புரம், கள்ளக்குறிச்சி
நடைமேடை - 4
1,2,3,4வேளாங்கண்ணி SETCநாகப்பட்டினம் மாவட்டம்புதுச்சேரி
5,6,7நாகப்பட்டினம் SETCநாகப்பட்டினம் மாவட்டம்புதுச்சேரி
8,9,10கும்பகோணம் SETCதஞ்சாவூர் மாவட்டம்
11,12மயிலாடுதுறை SETCநாகப்பட்டினம் மாவட்டம்
13திருநள்ளார் SETCபுதுச்சேரி
14,PRTCபுதுச்சேரி மாநிலம்
15,16,17கும்பகோணம் TNSTCதஞ்சாவூர் மாவட்டம்
18,19,20கோயம்புத்தூர் SETCகோயம்புத்தூர் மாவட்டம்
21கோயம்புத்தூர்/ஊட்டிநீலகிரி மாவட்டம்கோயம்புத்தூர்
22கோயம்புத்தூர்/கூடலூர்நீலகிரி மாவட்டம்
23கோயம்புத்தூர்/குருவாயூர்கோயம்புத்தூர் மாவட்டம்
24கோயம்புத்தூர்/எர்ணாகுளம்கோயம்புத்தூர் மாவட்டம்
25,26,27கோயம்புத்தூர் SETCகோயம்புத்தூர் மாவட்டம்
28ஈரோடு/கோபி/திருப்பூர்திருப்பூர் மாவட்டம்
29ஈரோடுஈரோடு மாவட்டம்விழுப்புரம்
நடைமேடை - 5
1,2,3,4,5,6,7,8,9மதுரைமதுரை மாவட்டம்
10,11,12இராமநாதபுரம், இராமேஸ்வரம், கமுதி, பரமக்குடி, சாயல்குடி, கீழக்கரைஇராமநாதபுரம் மாவட்டம்
13,14,15காரைக்குடி, தேவக்கோட்டைசிவகங்கை மாவட்டம்
16பேராவூரணிதஞ்சாவூர் மாவட்டம்
17,18புதுக்கோட்டை, அறந்தாங்கி, திருப்பத்தூர், பொன்னமராவதி, சிவகங்கைபுதுக்கோட்டை மாவட்டம்/சிவகங்கை மாவட்டம்
19காரைக்குடிசிவகங்கை மாவட்டம்
20,21,22தஞ்சாவூர்தஞ்சாவூர் மாவட்டம்
23,24மன்னார்குடி , திருத்துறைப்பூண்டி, திருவாரூர்திருவாரூர் மாவட்டம்
25அதிராமப்பட்டினம் , பட்டுக்கோட்டைதஞ்சாவூர் மாவட்டம்
26,27,28,29,30கும்பகோணம்தஞ்சாவூர் மாவட்டம்
நடைமேடை - 6
1,2,3,4,5,6திருச்சிதிருச்சிராப்பள்ளி மாவட்டம்விழுப்புரம்
7பெரம்பலூர்/அரியலூர்பெரம்பலூர் மாவட்டம்விழுப்புரம்
8நாமக்கல்/துறையூர்நாமக்கல் மாவட்டம்விழுப்புரம்
9கரூர்/பள்ளப்பட்டி/தாராபுரம்கரூர் மாவட்டம்விழுப்புரம்
10பொள்ளாச்சி/பழனி/உடுமலைப்பேட்டை/கொடைக்கானல்கோயம்புத்தூர் மாவட்டம்/திருப்பூர் மாவட்டம்விழுப்புரம்
11,12திண்டுக்கல்/தேனி/கம்பம்/போடி/குமுளி/பெரியக்குளம்திண்டுக்கல் மாவட்டம்/தேனி மாவட்டம்விழுப்புரம்
13,14,15செங்கோட்டை/தென்காசி/பத்தினம்திட்டாதென்காசி மாவட்டம்விழுப்புரம்
16,17,18தூத்துக்குடி/ஏர்ல்/திசையன்விளை/திருச்செந்தூர்/விளாத்திகுளம்தூத்துக்குடி மாவட்டம்
19,20திருநெல்வேலி/இடையன்குடி/குட்டம்திருநெல்வேலி மாவட்டம்விழுப்புரம்
21பாபநாசம்தஞ்சாவூர் மாவட்டம்
22திருவனந்தபுரம்கேரளா
23கன்னியாகுமரிகன்னியாகுமரி மாவட்டம்
24,25நாகர்கோவில்கன்னியாகுமரி மாவட்டம்
26மார்த்தாண்டம்கன்னியாகுமரி மாவட்டம்
27,28,29பம்பா/சிறப்பு பேருந்துகள்கேரளா ‌
மூடு

வருங்காலத் திட்டங்கள்

சென்னை மெட்ரோ இப்பேருந்து வளாகத்தினுள் உயரத்தில் அமைந்ததாகத் தனது தொடர்வண்டி நிலையத்தை அமைத்துள்ளது. மூன்று வழிகளுடன் ஒரு கிமீ தொலைவும் 11 மீ அகலமும் கொண்ட மேம்பாலம் காளியம்மன் கோவில் சாலை - சவகர்லால் நேரு சாலை சந்திப்பில் கட்டமைக்கப்படுகிறது. 50 கோடி செலவில் மதிப்பிடப்பட்டுள்ள இத்திட்டத்தினால் விருகம்பாக்கத்திற்கும், கோயம்பேட்டிற்கும் இடையேயான போக்குவரத்து பயனடையும். தற்போது இந்த சந்திப்பை ஒரு மணி நேரத்திற்கு 18,000 தானுந்துகள் கடப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.[14]

நகரத்தினுள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க துணை புறநகர் பேருந்து நிலையங்கள் 80 கோடி செலவு மதிப்பீட்டில் வேளச்சேரியிலும் மாதவரத்திலும் கட்டப்படத் திட்டமிடப்படுள்ளன.[15] கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் இராசீவ் காந்தி சாலையில் செல்லும் 300 பேருந்துகள் வேளச்சேரி பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தும். வடக்கு பெரும் முதன்மைச் சாலையில் (ஜி. என். டி ரோடு) செல்லும் பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தும். ஆந்திரா செல்லும் பேருந்துகளும் மாதவரத்திலிருந்து இயக்கப்படும். இந்த இரு துணை பேருந்து நிலையங்களும் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தை ஒத்த வசதிகளுடன் அமைக்கப்படும். எட்டு ஏக்கர் பரப்பில் அமையவிருக்கும் மாதவரம் நிலையம் 200 பேருந்துகளை இயக்கும் திறனுடன் விளங்கும். 48 கோடி செலவில்[15] 12 ஏக்கர் பரப்பில் கட்டப்பட இருக்கும் வேளச்சேரி நிலையத்தில் 300 பேருந்துகள் இயங்கக் கூடியதாவிருக்கும்.[16] இருப்பினும், சென்னை மோனோரெயில் திட்டம் நிறைவேற்றப்படுவதைக் கருத்தில்கொண்டு வேளச்சேரி பேருந்து நிலையப் பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.[15]

தற்போதுள்ள ஓம்னி பேருந்து நிலையத்திற்கு எதிராக உள்ள 4 ஏக்கர் காலியிடத்தில் ஒருங்கிணைந்த பலநிலை நிறுத்தற்கூடம் அமைக்கப்பட உள்ளது. தரைக்குக் கீழே இரு தளங்கும் தரைக்கு மேலும் தளங்களுடன் அமையவிருக்கும் இந்த நிறுத்தற்கூடத்தில் பணியில் இல்லாத தனியார் ஓம்னி வண்டிகளும் பல்வேறு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளும் நிறுத்தலாம். இதன் கடைசி மேல்தளத்தில் 400 நான்கு சக்கர தானுந்துகள் நிறுத்தவும் அதன் கீழுள்ள தளத்தில் 1000 ஈராழித் தன்னுந்துகள் நிறுத்தவும் வசதி செய்யப்படும். முதல் தளத்தில் பணியில் இல்லா அரசுப் பேருந்துகள் நிறுத்தப்படும். தற்போதுள்ள ஒப்பந்தப் பயணச்சேவைப் பேருந்து நிலையம் இந்த நிறுத்தற்கூடத்தின் தரைத்தளத்திற்கு மாற்றப்படும்.[17]

பெயர் மாற்றம்

அக்டோபர் மாதம், 2018 ஆம் ஆண்டு நடந்த எம். ஜி. ஆர். நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் க. பழனிசாமி பங்கேற்று உரையாற்றிய போது, கோயம்பேடு பேருந்து நிலையம் இனி டாக்டர் புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர் பெயரில் அழைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி அக்டோபர் 10, 2018 அன்று கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பெயரை புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என்று மாற்றி பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.[18]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.