தென்காசி
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
தென்காசி (Tenkasi) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தின், தென்காசி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், தேர்வுநிலை நகராட்சியும் ஆகும்.
தென்காசி | |
---|---|
தென்காசி தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 8.956400°N 77.315200°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தென்காசி |
பகுதி | பாண்டிய நாடு |
அரசு | |
• வகை | தேர்வு நிலை நகராட்சி |
• நிர்வாகம் | தென்காசி நகராட்சி |
• மக்களவை உறுப்பினர் | மருத்துவர். ராணி ஶ்ரீ குமார் |
• சட்டமன்ற உறுப்பினர் | எச். பழனி நாடார் |
• மாவட்ட ஆட்சியர் | A.K. கமல் கிஷோர், இ.ஆ.ப. |
ஏற்றம் | 184 m (604 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 70,545 |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீடு | 627 811, 627 814, 627 808, 627 803, 627 804. |
தொலைபேசி குறியீடு | 04633 |
வாகனப் பதிவு | TN-76 |
சென்னையிலிருந்து தொலைவு | 626 கி.மீ (389 மைல்) |
திருச்சியிலிருந்து தொலைவு | 302 கி.மீ (188 மைல்) |
மதுரையிலிருந்து தொலைவு | 160 கி.மீ (103 மைல்) |
நெல்லையிலிருந்து தொலைவு | 60 கி.மீ (37 மைல்) |
தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சுற்றுச்சூழலில் அமைந்துள்ளது. குற்றாலம் அருவிகள் இந்நகரத்தில் அருகாமையில் உள்ளதால் இது சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் ஒரு நகரமாக அமைந்துள்ளது. இவ்வூர் பருவ மழைத் தூறலுக்குப் பெயர் போனது. மக்கள் இதை சாரல் மழை என்றும் அழைப்பதுண்டு.
இவ்வூரின் அமைவிடம் 8.97°N 77.3°E ஆகும்.[2] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143 மீட்டர் (469 அடி) உயரத்தில் இருக்கின்றது.
முன்னொரு காலத்தில் தென்காசியை ஆட்சி செய்த பராகிராம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றி, தெற்கில் உள்ள என்னுடைய பக்தர்கள் சிலர், வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும் போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் தென்காசி கோபுரத்தை கட்டுமாறு ஆணையிட்டுள்ளார். அதனை ஏற்று பராகிரமபாண்டிய மன்னனால் கட்டப்பட்டதுதான் தென்காசி கோபுரம் ஆகும். இந்த கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது.[3] முற்காலத்தில், சோழர்கள் புகழ் மங்கி பாண்டியர்களின் கை ஓங்கியது. அந்தக் காலகட்டத்தில், பாண்டியர்களும் இலங்கை மீது படையெடுத்தனர். தென்காசியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி நடத்திய அரிகேசரி பராக்கிரமபாண்டியன் (பொ.ஊ. 1422–61) இலங்கை மீது படையெடுத்து சிங்களரை பலமுறை வென்றதாக கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.
மதவாரியான கணக்கீடு | ||||
---|---|---|---|---|
மதம் | சதவீதம்(%) | |||
இந்துக்கள் | 62.26% | |||
முஸ்லிம்கள் | 34.79% | |||
கிறிஸ்தவர்கள் | 2.7% | |||
சீக்கியர்கள் | 0.01% | |||
பௌத்தர்கள் | 0.01% | |||
சமயமில்லாதவர்கள் | 0.14% |
இந்திய 2011, மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 70,545 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். தென்காசி மக்களின் சராசரி கல்வியறிவு 87.7% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 93.04%, பெண்களின் கல்வியறிவு 82.52% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தென்காசி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, தென்காசியில் இந்துக்கள் 62.26%, முஸ்லிம்கள் 34.79%, கிறிஸ்தவர்கள் 2.79%, சீக்கியர்கள் 0.01%, பௌத்தர்கள் 0.01% மற்றும் சமயமில்லாதவர்கள் 0.14% பேர்களும் உள்ளனர்.
தென்காசியை தலைமையிடமாக கொண்டு ஒர் புதிய மாவட்டத்தை உருவாக்குவது குறித்து 2016 ஆம் ஆண்டு முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா ஆட்சியில் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீண்ட இழுபறிக்குப் பின், தமிழகத்தின் 33-வது மாவட்டமாக திருநெல்வேலியில் இருந்து சில பகுதிகளை கொண்டு 2019 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தேதி சட்டப்பேரவையில் தமிழகத்தின் அப்போதையை முதலமைச்சர் க .பழனிசாமி, தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் விதி எண் 110-ன் கீழ் என அறிவித்தும், பின் அந்த மாவட்டத்திற்கு புதிதாக இ.ஆ.ப சார்ந்த மாவட்ட ஆட்சித் தலைவர் நியமிக்கப்படுவார் என்றும் அறிவித்தார். இதனால் தென்காசி மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்தும், முதலமைச்சர் திரு. பழனிச்சாமிக்கு நன்றி கடிதம் எழுதி அனுப்பப்பட்டது. இந்த புதிய மாவட்டத்தில் ஐந்து சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன.
தென்காசியில் வணிகம் மிகவும் முன்னேற்றம் அடைந்து காணப்படுகிறது. எனினும் எந்த தொழிற்சாலையும், பெரிய உற்பத்தி நிலையமோ இல்லை. எனினும் பல பாரம்பரியம் மிக்க துணியகங்கள் இங்கு உள்ளன. தற்போது வந்துள்ள நவீன உணவகங்களால் இந்நகரம் சிறப்படைந்துள்ளது. நகை கடைகள், பல்பொருள் அங்காடி என எல்லா வகை வணிகமும் நடைபெறுகின்றன.
நகராட்சி அதிகாரிகள் | |
---|---|
தலைவர்|திரு.சாதிர்| | |
ஆணையர் | |
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் | |
சட்டமன்ற உறுப்பினர் | எச். பழனி நாடார் |
மக்களவை உறுப்பினர் | தனுஷ் எம். குமார் |
தென்காசி நகராட்சியானது தென்காசி சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த தனுஷ் எம். குமார் வென்றார்.
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை காங்கிரசு கட்சியை சேர்ந்த எச். பழனி நாடார் வென்றார்.
தென்காசியின் மையப்பகுதியில் இரயில் நிலையம் அமைந்துள்ளது.
இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. அவை தென்காசி நகராட்சி புதிய பேருந்து நிலையம் மற்றும் அறிஞர் அண்ணா பழைய பேருந்து நிலையம் ஆகும்.
தென்காசியிலிருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், ராமேஸ்வரம், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருச்செந்தூர், அம்பாசமுத்திரம்,கடையம், [பாபநாசம் (திருநெல்வேலி)|பாபநாசம்]], செங்கோட்டை, சங்கரன்கோவில், கோவில்பட்டி, இராஜபாளையம், மதுரை, தேனி, குமுளி, போடி, விருதுநகர், திருச்சி, தஞ்சை, திருப்பூர், சிவகாசி, சென்னை, கோயமுத்தூர், சேலம், ஈரோடு, சத்தியமங்கலம், வேளாங்கண்ணி, சிதம்பரம், புதுச்சேரி, திருவண்ணாமலை, வேலூர் என தமிழ்நாட்டின் ஏனய பகுதிகளுக்கு செல்ல நேரடியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், கேரள மாநிலத்தின் கொல்லம், சங்கனாச்சேரி, திருவனந்தபுரம், புனலூர், அம்பநாடு, கொட்டாரக்கரை, காயம்குளம், எர்னாகுளம், கோழிக்கோடு, கருநாகப்பள்ளி, மாவேலிக்கரை போன்ற முக்கிய நகரங்களுக்கும், பெங்களூரு, திருப்பதி, பாண்டிச்சேரி போன்ற வெளிமாநில நகரங்களுக்கும் பேருந்து வசதிகள் உள்ளது.
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை 1986 வது வருடம் பொது மக்களின் நலனுக்காக தொடங்கப்பட்டு, பல்வேறு மருத்துவ துறைகளுடன் செயல்பட்டு வருகிறது. மருத்துவமனையில் தினசரி 1500 - 2000 வரை வெளிநோயாளிகள் சிகிச்சைபெற்று செல்கின்றனர் . மேலும் 337 படுக்கை வசதிகளுடன் கூடிய உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு அனைத்து சிறப்பு வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது.
புனித மிக்கேல் அதிதூதர் கத்தோலிக்க திருத்தலம் - தென்காசி கத்தோலிக்க வட்டாரத்தின் முதன்மை ஆலயமாகும். இது நூற்றாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது, ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இவ்விழாவில் இங்குள்ள இசுலாமியர்களும் பங்கு கொண்டு ஒற்றுமையின் சின்னமாக திகழ்கிறார்கள்.[சான்று தேவை] கேரள பக்தர்கள் அதிகம் பேர் வருவதால் மலையாள மொழியிலும் வழிபாடு நடைபெறுகிறது. சர்வேசுவரன் கோவில் என்று பிற மதத்தவரால் அழைக்கப்படுகிறது.
.ஆத்மீக வளர்ச்சி சபை, குத்துக்கல்வலசை,தென்காசி. 9715035208
தட்பவெப்ப நிலைத் தகவல், தென்காசி | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 29.7 (85.5) |
31.3 (88.3) |
33.0 (91.4) |
33.2 (91.8) |
33.4 (92.1) |
31.7 (89.1) |
30.9 (87.6) |
31.3 (88.3) |
31.6 (88.9) |
30.8 (87.4) |
29.3 (84.7) |
29.2 (84.6) |
31.28 (88.31) |
தாழ் சராசரி °C (°F) | 21.6 (70.9) |
22.3 (72.1) |
23.8 (74.8) |
25.0 (77) |
25.5 (77.9) |
24.6 (76.3) |
24.2 (75.6) |
24.3 (75.7) |
24.0 (75.2) |
23.7 (74.7) |
22.8 (73) |
21.9 (71.4) |
23.64 (74.56) |
பொழிவு mm (inches) | 48 (1.89) |
37 (1.46) |
67 (2.64) |
97 (3.82) |
76 (2.99) |
120 (4.72) |
105 (4.13) |
47 (1.85) |
57 (2.24) |
214 (8.43) |
221 (8.7) |
105 (4.13) |
1,194 (47.01) |
ஆதாரம்: Climate-Data.org[5] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.