From Wikipedia, the free encyclopedia
வானிலையியலில், பொழிவு ( precipitation) எனப்படுவது புவியீர்ப்பு விசையினால் புவியின் வளிமண்டலத்தில் உள்ள நீராவி குளிர்கையினால் புவியை நோக்கி விழுகின்ற அனைத்தும் ஆகும்.[1] பொதுவாக இது மழையைக் குறித்தாலும் வழக்கமாக இது தூறல், மழை, பனி மழை, உறைநிலை மழை, பனி, ஆலங்கட்டி மழை என பல்வகைப்படும். உள்ளூர் வளிமண்டலத்தில் நீராவியின் அடர்த்தி கூடுதலாகிக் குளிர்வதினால் ஏற்படுகிறது.[2] இரண்டு விதங்களில், சில நேரங்களில் இரண்டும் ஒரேவேளையில் நிகழ்ந்தும், காற்றில் ஈரப்பதம் கூடுதலாகிறது. ஒன்று காற்று குளிர்ந்துவிடுவதால் மற்றொன்று நீராவியைச் சேர்ப்பதால். பொதுவாக, பொழிவு நிலத்தில் விழும்; விலக்காக விர்கா எனப்படும் மழை விண்ணிலிருந்து மண்ணிற்கு வரும் வழியிலேயே ஆவியாகிவிடும். மழை பெரும்பாலும் சிறுதுளிகளாக கோள வடிவில் அமைந்திருக்கும். பனிப்பொழிவு அதன் வழியில் எதிர்கொள்ளும் காற்றின் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தைப் பொறுத்து பல வடிவங்களில் விழுகின்றது. பனிப்பொழிவு மற்றும் பனிக்கட்டி மழைக்கு நிலத்தின் சூன்ய வெப்பநிலை அல்லது அதற்கும் கீழே உறைநிலையில் இருக்கவேண்டும்; ஆலங்கட்டி மழை, அதன் உருவாக்க முறை காரணமாக நிலத்தின் வெப்பநிலை உயர்வாக இருப்பினும் நிகழலாம்.
Seamless Wikipedia browsing. On steroids.