இந்து

இந்து மதம் உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய மதமாகும். From Wikipedia, the free encyclopedia

இந்து (ஒலிப்பு) (தேவநாகரி:हिंदू) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் மெய்யியல், சமயங்கள் மற்றும் பண்பாடு ஆகியவற்றைக் குறிக்கும் அடையாளச் சொல்லாகும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி "இந்து" என்பது இந்திய சமயங்களைக் குறிக்கிறது.(உதா: இந்து சமயம், சைவம், வைணவம், சமணம், பௌத்தம், சீக்கியம் மற்றும் அனைத்து நாட்டுப்புற சமயங்கள்).[1] பொதுவாக இந்து சமயத்தவரைக் குறிப்பிட இந்து என்ற சொல் பயன்படுகிறது.

சொல்வரலாறு

சுவசுத்திக்கா

செங்கிருதச் சொல்லான சிந்துவிலிருந்து இந்து மருவியதாகும். முதன்முதலாக சிந்து என்ற சொல் இந்தியத் துணைக்கண்டத்தின் வடக்குப்பகுதி ஆறான சிந்து ஆற்றை குறிப்பிட இருக்கு வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.[2][3]

பிரகாசுபதி ஆகமத்தில்

மேற்கத்திய அரபு மொழியில் சிந்து நதிக்கு அப்பாலுள்ள மக்களைக் குறிக்க அல்-இந் என்கிற சொல் பயன்படுத்தப்பட்டு பிரபலமானது.[6] மற்றும் ஈரான் நாட்டிலும் அந்து என்ற சொல்லே இந்தியர்களைக் குறிக்கப் பயன்பட்டது. 13ம் நூற்றாண்டின் போதுதான் இந்துசுதான் என்பது இந்தியாவைக் குறிக்க பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டது.[7] ஆரம்பத்தில் இந்து என்கிற சொல் சமயத்தை பிரதானமாக குறிக்காமல் பகுதி மக்களையே குறித்துள்ளது. 16-18ம் நூற்றாண்டு வங்காள மொழி நூல்களிலும், காசுமீர், தென்னிந்திய நூல்களிலும் அப்படியே பயன்படுத்தப்பட்டு வந்தன.[8][9] பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு ஆட்சிக்காலத்தில் இந்திய சமயத்தை பின்பற்றுபவர்களை குறிக்க இந்து என்கிற சொல் புழக்கத்தில் வந்தது. காலப்போக்கில் ஆபிரகாமிய சமயம் மற்றும் வேத கால இந்திய சமயமல்லாத (சமணம், சீக்கியம் அல்லது பௌத்தம்) நீங்கலாக சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்களை மட்டும் குறிக்கப்பயன்படுகிறது. ஒரு மதமாக இந்து மதம் உறுதியான வரையறை மற்றும் தெளிவான எல்லைகளைக் கொண்டிருக்கவில்லை. கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையில், பௌத்தம், சமணம் மற்றும் சீக்கியம் ஆகியவை இந்து மதத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகின்றன, ஆனால் பெரும்பான்மையான ஆசிய நாடுகளில் அவை தனித்தனியாகக் கணக்கிடப்படுகின்றன.[10][11][a]

இவற்றையும் பார்க்க

குறிப்புகள்

  1. Despite the commonplace use of the term "Hindu" for the followers of the Hindu religion, the term also continues to designate a cultural identity, the ownership of India's millennia-old cultural heritage. Arvind Sharma notes that the exclusivist conception of religion was foreign to India, and Indians did not yield to it during the centuries of Muslim rule but only under the British colonial rule. Resistance to the exclusivist conception led to Savarkar's Hindutva, where Hinduism was seen both as a religion and a culture.[12] Hindutva is a national Hindu-ness, by which a Hindu is one born in India and behaves like a Hindu. M. S. Golwalkar even spoke of "Hindu Muslims," meaning "Hindu by culture, Muslim by religion."[13]

மேற்கோள்கள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.