தமிழ்நாட்டில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் காஞ்சிபுரம் ஆகும். இந்த மாவட்டம் 1655.94 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது.
காஞ்சிபுரம் | |
மாவட்டம் | |
காஞ்சி வரதராச பெருமாள் கோயில் | |
காஞ்சிபுரம் மாவட்டம்:அமைந்துள்ள இடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
தலைநகரம் | காஞ்சிபுரம் |
பகுதி | வட மாவட்டம் |
ஆட்சியர் |
மருத்துவர். மா. ஆர்த்தி, இ.ஆ.ப |
காவல்துறைக் கண்காணிப்பாளர் |
- |
நகராட்சிகள் | 1 |
வருவாய் கோட்டங்கள் | 2 |
வட்டங்கள் | 5 |
பேரூராட்சிகள் | 5 |
ஊராட்சி ஒன்றியங்கள் | 5 |
ஊராட்சிகள் | 274 |
வருவாய் கிராமங்கள் | 479 |
சட்டமன்றத் தொகுதிகள் | 4 |
மக்களவைத் தொகுதிகள் | 2 |
பரப்பளவு | 1655.94 ச.கி.மீ |
மக்கள் தொகை |
11,66,401 (2011) |
அலுவல் மொழி(கள்) |
தமிழ் |
நேர வலயம் |
இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு |
631 xxx |
தொலைபேசிக் குறியீடு |
044 |
வாகனப் பதிவு |
TN-21, TN-87 |
பாலின விகிதம் |
ஆண்-50.6%/பெண்-49.4% ♂/♀ |
கல்வியறிவு |
75.34% |
சராசரி கோடை வெப்பநிலை |
36.6 °C (97.9 °F) |
சராசரி குளிர்கால வெப்பநிலை |
19.8 °C (67.6 °F) |
இணையதளம் | kancheepuram |
சிவன் மற்றும் விஷ்ணு கோயில்கள் அதிகமாக உள்ளது. பட்டு கைத்தறி நெசவு சேலைகளுக்கு புகழ் பெற்ற மாவட்டம். முன்னாள் தமிழக முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த மாவட்டம். தமிழ்நாட்டின் வடகிழக்கு கடற்கரையோரத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் கோயில் நகரம் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். நிர்வாக காரணங்களுக்காக மாவட்டம் 2 வருவாய் கோட்டங்கள், 5 வட்டங்களுடன் 633 வருவாய் கிராமங்கள் அமைந்துள்ளது. 633 கிராம பஞ்சாயத்துகளாகவும் 5 ஊராட்சி ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.[1]
2019இல் காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து புதிய செங்கல்பட்டு மாவட்டம் நிறுவப்பட்ட பின்னர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் வட்டம், உத்திரமேரூர் வட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், வாலாசாபாத்து வட்டம் மற்றும் குன்றத்தூர் வட்டம் என 5 வருவாய் வட்டங்களுடன் செயல்படுகிறது.
பொ.ஊ.மு. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பதஞ்சலி மகாபாசியம் எனும் வட மொழி நூலில், காஞ்சிபுரம் பற்றிய குறிப்புகள் உள்ளது. மணிமேகலை, பெரும்பாணாற்றுப்படை போன்ற தமிழ் இலக்கியங்களில் காஞ்சி நகரத்தைப் பற்றிய செய்திகள் உள்ளது.
சோழப் பேரரசில் இருந்த தொண்டை மண்டலப் பகுதிகளை பின்னர் பல்லவர்கள் வென்று காஞ்சி நகரத்தை தங்கள் தலைநகராகக் கொண்டு பொ.ஊ. 300 முதல் பொ.ஊ. 850 முடிய ஆண்டனர். பல்லவர்கள், தொண்டை மண்டலத்தில் நூற்றுக்கணக்கான கோயில்கள் எழுப்பினர். அவைகளில் சிறப்பு மிக்கது மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள் ஆகும். பல்லவர்கள் மாமல்லபுரம் துறைமுகத்திலிருந்து சீனா, சயாம், பிசி போன்ற வெளிநாடுகளுடன் வணிகத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பல்லவர்களை வீழ்த்தி மீண்டும் சோழர்கள் காஞ்சிபுரத்தை கைப்பற்றி 10ம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டு வரை ஆண்டனர். பிரித்தானியர்கள் காஞ்சிபுரம் பகுதிகளை கைப்பற்றி ஆள்வதற்கு முன்னர் விசயநகர மன்னர்கள் 14ம் நூற்றாண்டு முதல் 17ம் நூற்றாண்டு முடிய ஆண்டனர்.
காஞ்சி நகரம், இந்து, பௌத்தம் மற்றும் சமண சமயங்களின் தலைமையகமாக விளங்கியது. தண்டி எனும் வட மொழிப் புலவர், நறுமணமிக்கப் பூக்களில் மல்லிகையும்; அழகிய பெண்களில் அரம்பையரும், மனித வாழ்வின் நால்வகை ஆசிரமங்களில் கிரகத்தம் போன்று; நகரங்களில் காஞ்சி சிறப்பு மிக்கது எனப்புகழ்கிறார்.
காஞ்சியை ஆண்ட பல்லவ மன்னர்களில் பெரும் புலமை படைத்த முதலாம் மகேந்திரவர்மன் இசை மற்றும் நாடக ஆசிரியர் ஆவார். பொ.ஊ. ஏழாம் நூற்றாண்டில் காஞ்சி நகரத்திற்கு வருகைபுரிந்த, பௌத்த அறிஞரும், யாத்திரிகருமான யுவான் சுவாங், காஞ்சி நகரம் ஆறு மைல் சுற்றளவு கொண்டிருந்தது என்றும், வட இந்தியாவின் காசி நகரத்திற்கு இணையான கல்வி நிலையங்களை காஞ்சி நகரம் கொண்டிருந்தது என்றும்; காஞ்சி மக்கள் கல்வி அறிவு படைத்தவர்கள் என்றும் தமது பயணக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய இந்தியா அரசினர் 1788இல் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஒரு மாவட்ட ஆட்சியரை நியமித்தனர். 1859 வரை காஞ்சிபுரம் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாக இருந்த கருங்குழி, பின்னர் சைதாப்பேட்டைக்கு மாற்றப்பட்டது. 1859 முதல் 1968 வரை சைதாப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாக விளங்கியது. 1 சூலை 1968 முதல் செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைமையிடமாக காஞ்சிபுரம் விளங்கியது.
1 சூலை 1977 அன்று செங்கல்பட்டு மாவட்டத்தைப் பிரித்து, காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
29 நவம்பர் 2019 அன்று காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளைக் கொண்டு புதிய செங்கல்பட்டு மாவட்டம் நிறுவப்பட்டது.[2][3]
காஞ்சிபுரம் வருவாய் மாவட்டத்திலிருந்து புதிய செங்கல்பட்டு மாவட்டம் நிறுவிய பின்னர், காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் மற்றும் திருப்பெரும்புதூர் என இரண்டு வருவாய் கோட்டங்களும்; 5 வருவாய் வட்டங்களும் கொண்டுள்ளது.[4]
ஆண்டு | ம.தொ. | ஆ. ±% |
---|---|---|
1901 | 7,08,782 | — |
1911 | 7,59,794 | +0.70% |
1921 | 7,98,408 | +0.50% |
1931 | 8,71,546 | +0.88% |
1941 | 9,56,996 | +0.94% |
1951 | 10,30,559 | +0.74% |
1961 | 11,67,491 | +1.26% |
1971 | 14,99,744 | +2.54% |
1981 | 18,98,021 | +2.38% |
1991 | 24,15,010 | +2.44% |
2001 | 28,77,468 | +1.77% |
2011 | 39,98,252 | +3.34% |
சான்று:[5] |
2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை 3,998,252 ஆகும். அதில் ஆண்கள் 2,012,958; பெண்கள் 1,985,294 ஆக உள்ளனர். மக்கள் தொகை வளர்ச்சி (2001 – 2011) 38.95% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 892 நபர்கள் வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 986 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 84.49% ஆக உள்ளது. ஆண்களின் எழுத்தறிவு 89.89% ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 79.02% ஆகவும் உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆறு வயதிற்குட்பட்டவர்கள் 431,574 ஆக உள்ளனர்.[6]
இம்மாவட்டத்தில் இந்துக்கள் 3,537,399 (88.47%); கிறித்தவர்கள் 256,762 (6.42%); இசுலாமியர்கள் 173,785 (4.35%); மற்றவர்கள் 0.75% ஆக உள்ளனர். இம்மாவட்டத்தில் தமிழ், தெலுங்கு, ஆங்கில மொழிகள் பேசப்படுகிறது.
மக்களவை உறுப்பினர்கள் | |||
---|---|---|---|
17வது மக்களவைத் தொகுதி(2019-2024) | |||
5 | திருப்பெரும்புதூர் | திரு.த.ரா.பாலு | (திமுக) |
6 | காஞ்சிபுரம் | திரு.க.செல்வம் | (திமுக) |
சட்டமன்ற உறுப்பினர்கள் | |||
16வது சட்டமன்றத் தொகுதி(2021-2026) | |||
28 | ஆலந்தூர் | திரு.தா.மோ.அன்பரசன் | (திமுக) |
29 | திருப்பெரும்புதூர் | திரு.கு.செல்வபெருந்தகை | (காங்கிரஸ்) |
36 | உத்திரமேரூர் | திரு.க.சுந்தர் | (திமுக) |
37 | காஞ்சிபுரம் | திரு.சி.விக்.எம்.பி.எழிலரசன் | (திமுக) |
இம்மாவட்டத்தின் 47% மக்களின் முதன்மைத் தொழில் வேளாண்மை ஆகும். நெல், கரும்பு, நிலக்கடலை, பயறு வகைகள், நவதானியங்கள் முக்கியப் பயிர்கள் ஆகும். இம்மாவட்டத்தின் பாயும் பாலாறு மற்றும் ஏரிகள் நீர் ஆதாரம் ஆகும்.
காஞ்சிபுரத்தை கோயில் நகரம் என்றும், பட்டு நகரம் என்றும் அழைப்பர். இம்மாவட்டத்தில் நெய்யப்படும் காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள், புவிசார் குறியீடு பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் காணப்படும் 163 பெருங்கற்கால இடங்களில், 70% காஞ்சிபுரம் மாவட்டத்தில் காணப்படுகிறது அவைகளில் குறிப்பிடத்தக்கது எருமையூர், சிறுகளத்தூர், சிக்கராயபுரம், அய்யன்சேரி, கீழம்பாக்கம் மற்றும் நன்மங்கலம் ஆகும்.[7]
இந்தியாவின் பெருந்தொழில் நகரங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் மாவட்டம் விளங்குகிறது. இம்மாவட்டத்தில் உண்டாய், நிசான், மிட்சுபிசு, போர்டு, பிஎம்டபிள்யு, யமகா போன்ற கார் நிறுவனங்கள் உள்ளது. திருப்பெரும்புதூரும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் பெருந்தொழில் முனையமாக உள்ளது. மேலும் சாம்சங், டெயிம்ளர், டெல் போன்ற மின்னனு பொருட்கள் உற்பத்தி நிலையங்கள் உள்ளது. செயிண்ட் கோபன் கட்டிட கண்ணாடிகள் உற்பத்தி நிறுவனமும் உள்ளது. பல பன்னாட்டு மற்றும் உள்நாட்டுத் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் இம்மாவட்டத்தில் தங்கள் கிளைகளைக் கொண்டுள்ள்து.
கீழ்கண்ட தரவுகள் வருடா வருடம் மாறக்கூடியவை. எனவே, அரசின் மாவட்ட வேளாண்மைத் துறைத் தளங்களையும், மாநில தகவல் நடுவங்களையும் ஒப்பிட்டறிக.[8] இம்மாவட்டத்தில் கணிசமான உயரத்தில் சில மலைகள் உள்ளன. மதுராந்தகம் வட்டத்தில் சிறிய மலைகள் பல அமைந்துள்ளன. இம்மாவட்டத்தின் வழியாக இயங்கும் மிக முக்கியமான ஆறுகளில் ஒன்று பாலாறு ஆகும். எனினும், இந்த மாவட்டத்தில் நீர்பாசனத்திற்கு முக்கிய ஆதாரமாக ஏரிகளும், கிணறுகளும் உள்ளன. இம்மாவட்டத்தின் மொத்த வனப்பகுதி 23.586 எக்டேர் ஆகும். அது உள்பகுதியையும் மாவட்டத்தையும் சுற்றியுள்ளது. இந்த வனப்பகுதியில் 366.675 எக்டேர் நிலப்பரப்பு உள்ளது. 76.50 மெட்ரிக் டன்னும் எண்ணெய் வித்துக்கள் 8.039 டன்கள் பயிரடப்பட்டுள்ளன. அரிசி 145966 இடங்களிலும், கம்பு மற்றும் தானியங்கள் 1217 இடங்களிலும், பருப்பு வகைகள் 2966 இடங்களிலும், கரும்பு 7586 இடங்களிலும், நிலக்கடலை 28766 இடங்களிலும், எள் 912 இடங்களிலும், பருத்தி 53 இடங்களிலும், பயிரிடப் பட்டுள்ளன. பருவநிலையானது, கோடை காலத்தில் அதிகபட்சம் 36.6° செல்சியசு ஆகவும், குறைந்த அளவு 21.1° செல்சியசு ஆகவும் இருக்கும். குளிர் காலத்தில் உயர்ந்த பட்சம் 28.7° செல்சியசு ஆகவும், 19.8° செல்சியசு ஆகவும் காணப்படுகின்றன. மழைக்காலத்திற்கு முன்னர் மழைப்பொழிவு கிட்டத்தட்ட முழுவதும் சீராக இருக்கும். கடற்கரை வட்டங்களில் உள்வட்ட பகுதிகளை விட அதிக மழையைப் பெறுகின்றன. இந்த மாவட்டத்தின் முக்கிய பருவநிலை, பருவ மழையைப் பொறுத்து, மழை பெய்யாத நிலையில் துன்பகரமான சூழ்நிலைகள் நிலவுகின்றன வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவக்காற்றுகள 54 விழுக்காடு மற்றும் 36 விழுக்காடு வருடாந்தர மழைக்காலத்திற்கான முக்கிய பங்களிப்பாகும். இந்த மாவட்டம் முக்கிய பருவ நிலை மழை பொருத்து வளர்ச்சி உள்ளது. மழை பெய்யாத காலங்களில் வறட்சி நிலவுகிறது. மழையளவு காலம், இயல்பாக இருக்கும் போது, 1213.3 மி.மீ அளவும், ஒட்டுமொத்த அசல் மழையளவு 1133.0 மி.மீ ஆகவும் இருக்கிறது.
இது சென்னை மாநகரருக்கு அருகே உள்ளது. இதன் மேற்கே இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டமும், வடக்கே திருவள்ளூர் மாவட்டமும் மற்றும் சென்னை மாவட்டமும், தெற்கில் விழுப்புரம் மாவட்டமும் மற்றும் செங்கல்பட்டு மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளது. 11.00 முதல் 12.00 வரை வடக்கு அட்சரேகை மற்றும் 77.28 முதல் 78.28 முதல் 78.50 வரை கிழக்கு நீளம் அமைந்துள்ளது. மாவட்டத்தின் மொத்த பூகோள பரப்பளவு 1444 ச.கிமீ ஆகும்.
வெவ்வேறு பருவங்களில், மாவட்டத்தில் அனுபவிக்கும் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையை கீழே உள்ள அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது.
கோடைக்காலம் | குளிர்காலம் | |
---|---|---|
அதிகபட்சம். | 38.5 °C (101.3 °F) | 27.7 °C (81.9 °F) |
குறைந்தபட்சம். | 29.1 °C (84.4 °F) | 19.0 °C (66.2 °F) |
தட்பவெப்ப நிலைத் தகவல், சென்னை, இந்தியா (நுங்கம்பாக்கம்) 1981–2010, உச்சம் 1901–2012 | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 34.4 (93.9) |
36.7 (98.1) |
40.6 (105.1) |
42.8 (109) |
45.0 (113) |
43.3 (109.9) |
41.1 (106) |
40.0 (104) |
38.9 (102) |
39.4 (102.9) |
35.4 (95.7) |
33.0 (91.4) |
45.0 (113) |
உயர் சராசரி °C (°F) | 29.3 (84.7) |
30.9 (87.6) |
32.9 (91.2) |
34.5 (94.1) |
37.1 (98.8) |
37.0 (98.6) |
35.3 (95.5) |
34.7 (94.5) |
34.2 (93.6) |
32.1 (89.8) |
29.9 (85.8) |
28.9 (84) |
33.1 (91.6) |
தினசரி சராசரி °C (°F) | 25.2 (77.4) |
26.6 (79.9) |
28.7 (83.7) |
30.9 (87.6) |
32.9 (91.2) |
32.4 (90.3) |
30.9 (87.6) |
30.3 (86.5) |
29.8 (85.6) |
28.4 (83.1) |
26.5 (79.7) |
25.3 (77.5) |
28.99 (84.19) |
தாழ் சராசரி °C (°F) | 21.2 (70.2) |
22.2 (72) |
24.2 (75.6) |
26.6 (79.9) |
28.0 (82.4) |
27.5 (81.5) |
26.4 (79.5) |
25.9 (78.6) |
25.6 (78.1) |
24.6 (76.3) |
23.1 (73.6) |
21.9 (71.4) |
24.8 (76.6) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 13.9 (57) |
15.0 (59) |
16.7 (62.1) |
20.0 (68) |
21.1 (70) |
20.6 (69.1) |
21.0 (69.8) |
20.5 (68.9) |
20.6 (69.1) |
16.7 (62.1) |
15.0 (59) |
13.9 (57) |
13.9 (57) |
மழைப்பொழிவுmm (inches) | 25.9 (1.02) |
3.4 (0.134) |
3.5 (0.138) |
14.4 (0.567) |
34.2 (1.346) |
55.8 (2.197) |
103.8 (4.087) |
126.8 (4.992) |
147.7 (5.815) |
315.6 (12.425) |
399.9 (15.744) |
177.4 (6.984) |
1,382.9 (54.445) |
% ஈரப்பதம் | 67 | 66 | 67 | 70 | 68 | 63 | 65 | 66 | 71 | 76 | 76 | 71 | 69 |
சராசரி மழை நாட்கள் | 1.4 | 0.8 | 0.3 | 0.8 | 1.8 | 4.0 | 6.5 | 7.7 | 7.3 | 10.9 | 11.5 | 5.8 | 58.8 |
சூரியஒளி நேரம் | 232.5 | 240.1 | 291.4 | 294.0 | 300.7 | 234.0 | 142.6 | 189.1 | 195.0 | 257.3 | 261.0 | 210.8 | 2,848.5 |
Source #1: இந்திய வானிலை ஆய்வுத் துறை (சூரியன் 1971–2000)[9][10][11][12] | |||||||||||||
Source #2: ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம்[13] |
காஞ்சிபுரம் வழியாகச், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, NH 48 நகரின் புறநகர்ப் பகுதியைக் கடந்து செல்கிறது. சென்னை, பெங்களூர், விழுப்புரம், திருப்பதி, திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, வேலூர், சேலம், திண்டிவனம், மதுரை, திருச்சி, புதுச்சேரி, தஞ்சாவூர், வந்தவாசி, செய்யார், போளூர், படவேடு, செங்கல்பட்டு, தாம்பரம், மேல்மருவத்தூர், கல்பாக்கம், நெய்வேலி, கடலூர் மற்றும் கும்பகோணம் ஆகிய நகரங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தினசரிப் பேருந்துச் சேவைகளை வழங்குகிறது. இங்கிருந்து சென்னை செல்வதற்க்கு, இரண்டு பெரிய பேருந்து வழித்தடங்கள் உள்ளன, ஒன்று பூந்தமல்லி வழியாகவும், மற்றொன்று தாம்பரம் வழியாகவும் செல்லலாம். உள்ளூர்ப் பேருந்துச் சேவைகளைத், தமிழ்நாட்டு மாநிலப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் பிரிவு வழங்குகிறது. 2006 ஆம் ஆண்டு நிலவரப்படி, 191 வழித்தடங்களுக்கு மொத்தம் 403 பேருந்துகள் நகரத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
காஞ்சிபுரத்தில் தொடருந்து நிலையம் ஒன்று உள்ளது. செங்கல்பட்டு - அரக்கோணம் தொடருந்து பாதையானது, காஞ்சிபுரம் வழியாக செல்கிறது. புதுச்சேரி மற்றும் திருப்பதிக்கு தினசரி தொடருந்து இயக்கப்படுகின்றன, மேலும் மதுரைக்கு வாரத்திற்கு ஒரு நாள் விரைவு தொடருந்தும் மற்றும் நாகர்கோயிலுக்கு இரண்டு வாரத்திற்கு ஒரு நாள் விரைவுத் தொடருந்தும் இயக்கப்படுகின்றன.
இந்நகரிலிருந்து 72 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆனது, அருகிலுள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையமாகும்.
காஞ்சிபுரம் மாவட்டம் கோயில் நகரமென்று அழைக்கப்படுகிறது. தென்னிந்தியாவின் பாரம்பரியத்தையும், தொன்மையையும் விளக்கும் நகரமாக விளங்குகின்றது. பல்லவர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட மாமல்லபுர கற்கோயில்கள் தமிழர்களின் கலை நுணுக்கத்தை பறைசாற்றும்படியாக அமைந்துள்ளது. திருப்பெரும்புதூர் இராமானுசர் பிறந்த இடம். வைணவம் உருவாக காரணமான இராமானுசர் வசிட்ட தத்துவத்தை தோற்றுவித்த இடம். இன்றும் வைணவர்களின் புனித யாத்திரை தலமாகவுள்ளது. ஏகாம்பரநாதர் சிவன் கோயில், பொ.ஊ. 8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயில் ஆகியவை பெரும் பெயர் பெற்றவை. சிவனின் உருத்திர தாண்டவத்தை விளக்கும் பல்லவர்களின் கலை புகழ்பெற்ற ஒன்றாகும். மேலும் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட உலகநாதர் கோயில், வரதராச பெருமாள் கோயில், வைகுண்ட பெருமாள் கோயில், விசயராகவ பெருமாள் கோயில், சுப்பிரமணிய சுவாமி கோயில் போன்றவை வரலாற்று சிறப்பு மிக்கவையாகக் கருதப்படுகின்றன.மேலும், முட்டுக்காடு ஏரி, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், அண்ணா நினைவிடம் போன்றவை சுற்றுலாவுக்கு ஏற்ற இடங்களாக உள்ளன.[14]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.