தமிழ்நாட்டில், மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை 148 நகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையாளர்களாக, அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இந்த நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து நகர்மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். நகர்மன்றத் தலைவர் மக்களால் நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றார். இவருக்கு அடுத்தபடியாக நகர்மன்றத் துணைத் தலைவர் நகர்மன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுகின்றார். நகர்மன்ற உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் நகராட்சி மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார்.

இவை சிறப்புநிலை, தேர்வுநிலை, முதல்நிலை, இரண்டாம்நிலை என்கிற நிலைகளில் 142 நகராட்சிகள் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நகராட்சிகள் அனைத்தும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையர் தலைமையிலான அலுவலகத்தின் கீழ் இயங்குகின்றன. தமிழக உள்ளாட்சி அமைப்பான நகராட்சிகள் அரசியலமைப்பு 74 வது திருத்தச் சட்ட செயல் 1992ன் விதி 243 டபுள்யூ நகராட்சிகள் அமைக்க, அதற்கு அதிகாரங்களை வழங்க வழி செய்கின்றது. அதன் படி இது ஒரு மாநில அரசிடமிருந்து அதிகாரப் பகிர்வைப் பெற்றத் தன்னாட்சி அமைப்பாக தமிழகத்தில் செயல்படுகின்றது.

திருவள்ளூர் மாவட்டம்

  1. திருவள்ளூர் (தேர்வு நிலை)
  2. திருத்தணி (முதல் நிலை)
  3. பூந்தமல்லி (தேர்வு நிலை)
  4. திருவேற்காடு (சிறப்பு நிலை)
  5. பொன்னேரி (இரண்டாம் நிலை) (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
  6. திருநின்றவூர் (இரண்டாம் நிலை) (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)

செங்கல்பட்டு மாவட்டம்

  1. செங்கல்பட்டு (முதல் நிலை)
  2. மதுராந்தகம் (இரண்டாம் நிலை)
  3. மறைமலைநகர் (சிறப்பு நிலை)
  4. நந்திவரம்-கூடுவாஞ்சேரி (முதல் நிலை) (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
  5. மாமல்லபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம்

  1. குன்றத்தூர் (இரண்டாம் நிலை) (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
  2. மாங்காடு (இரண்டாம் நிலை) (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
  3. ஸ்ரீபெரும்புதூர்

வேலூர் மாவட்டம்

  1. குடியாத்தம் (முதல் நிலை)
  2. பேரணாம்பட்டு (இரண்டாம் நிலை)

இராணிப்பேட்டை மாவட்டம்

  1. அரக்கோணம் (முதல் நிலை)
  2. ஆற்காடு (முதல் நிலை)
  3. இராணிப்பேட்டை (தேர்வு நிலை)
  4. வாலாஜாபேட்டை (இரண்டாம் நிலை)
  5. மேல்விஷாரம் (இரண்டாம் நிலை)
  6. சோளிங்கர் (இரண்டாம் நிலை) (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)

திருப்பத்தூர் மாவட்டம்

  1. திருப்பத்தூர் (தேர்வு நிலை)
  2. வாணியம்பாடி (தேர்வு நிலை)
  3. ஆம்பூர் (தேர்வு நிலை)
  4. ஜோலார்பேட்டை (இரண்டாம் நிலை)

விழுப்புரம் மாவட்டம்

  1. விழுப்புரம் (சிறப்பு நிலை)
  2. திண்டிவனம் (தேர்வு நிலை)
  3. கோட்டக்குப்பம் (இரண்டாம் நிலை) (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)

கள்ளக்குறிச்சி மாவட்டம்

  1. கள்ளக்குறிச்சி (தேர்வு நிலை)
  2. திருக்கோவிலூர் (இரண்டாம் நிலை) (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
  3. உளுந்தூர்பேட்டை (இரண்டாம் நிலை) (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)

கடலூர் மாவட்டம்

  1. சிதம்பரம் (தேர்வு நிலை)
  2. விருத்தாச்சலம் (முதல் நிலை)
  3. பண்ருட்டி (முதல் நிலை)
  4. நெல்லிக்குப்பம் (இரண்டாம் நிலை)
  5. வடலூர் (இரண்டாம் நிலை) (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
  6. திட்டக்குடி (இரண்டாம் நிலை) (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)

திருவண்ணாமலை மாவட்டம்

  1. ஆரணி (முதல் நிலை)
  2. திருவத்திபுரம் (இரண்டாம் நிலை)
  3. வந்தவாசி (இரண்டாம் நிலை)

கிருஷ்ணகிரி மாவட்டம்

  1. கிருஷ்ணகிரி (சிறப்பு நிலை)
  2. ஊத்தங்கரை

தருமபுரி மாவட்டம்

  1. தருமபுரி (சிறப்பு நிலை)
  2. அரூர்

சேலம் மாவட்டம்

  1. எடப்பாடி (முதல் நிலை)
  2. ஆத்தூர் (தேர்வு நிலை)
  3. மேட்டூர் (தேர்வு நிலை)
  4. நரசிங்கபுரம் (இரண்டாம் நிலை)
  5. தாரமங்கலம் (இரண்டாம் நிலை) (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
  6. இடங்கணசாலை (இரண்டாம் நிலை) (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
  7. சங்ககிரி

நாமக்கல் மாவட்டம்

  1. திருச்செங்கோடு (தேர்வு நிலை)
  2. இராசிபுரம் (முதல் நிலை)
  3. பள்ளிபாளையம் (இரண்டாம் நிலை)
  4. குமாரபாளையம் (முதல் நிலை)

நீலகிரி மாவட்டம்

  1. உதகமண்டலம் (சிறப்பு நிலை)
  2. குன்னூர் (தேர்வு நிலை)
  3. கூடலூர் (இரண்டாம் நிலை)
  4. நெல்லியாளம் (இரண்டாம் நிலை)
  5. கோத்தகிரி

கோயம்புத்தூர் மாவட்டம்

  1. மேட்டுப்பாளையம் (தேர்வு நிலை)
  2. பொள்ளாச்சி (சிறப்பு நிலை)
  3. வால்பாறை (தேர்வு நிலை)
  4. கருமத்தம்பட்டி (இரண்டாம் நிலை) (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
  5. காரமடை (இரண்டாம் நிலை) (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
  6. கூடலூர் (இரண்டாம் நிலை) (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
  7. மதுக்கரை (இரண்டாம் நிலை) (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)

திருப்பூர் மாவட்டம்

  1. தாராபுரம் (தேர்வு நிலை)
  2. உடுமலைப்பேட்டை (தேர்வு நிலை)
  3. வெள்ளக்கோயில் (இரண்டாம் நிலை)
  4. காங்கேயம் (முதல் நிலை)
  5. பல்லடம் (முதல் நிலை)
  6. திருமுருகன்பூண்டி (முதல் நிலை) (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
  7. அவினாசி

கரூர் மாவட்டம்

  1. குளித்தலை (இரண்டாம் நிலை)
  2. புகழூர் (இரண்டாம் நிலை) (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
  3. பள்ளப்பட்டி (இரண்டாம் நிலை) (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)

அரியலூர் மாவட்டம்

  1. அரியலூர் (இரண்டாம் நிலை)
  2. ஜெயங்கொண்டம் (முதல் நிலை)

பெரம்பலூர் மாவட்டம்

  1. பெரம்பலூர் (தேர்வு நிலை)

ஈரோடு மாவட்டம்

  1. கோபிச்செட்டிப்பாளையம் (தேர்வு நிலை)
  2. சத்தியமங்கலம் (முதல் நிலை)
  3. பவானி (இரண்டாம் நிலை)
  4. புஞ்சை புளியம்பட்டி (இரண்டாம் நிலை)
  5. பெருந்துறை

திருச்சிராப்பள்ளி மாவட்டம்

  1. மணப்பாறை (முதல் நிலை)
  2. துறையூர் (தேர்வு நிலை)
  3. துவாக்குடி (இரண்டாம் நிலை)
  4. இலால்குடி (இரண்டாம் நிலை) (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
  5. முசிறி (இரண்டாம் நிலை) (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)

தஞ்சாவூர் மாவட்டம்

  1. பட்டுக்கோட்டை (தேர்வு நிலை)
  2. அதிராம்பட்டினம் (இரண்டாம் நிலை) (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
  3. திருவையாறு

புதுக்கோட்டை மாவட்டம்

  1. அறந்தாங்கி (முதல் நிலை)

திருவாரூர் மாவட்டம்

  1. திருவாரூர் (தேர்வு நிலை)
  2. மன்னார்குடி (தேர்வு நிலை)
  3. திருத்துறைப்பூண்டி (இரண்டாம் நிலை)
  4. கூத்தாநல்லூர் (இரண்டாம் நிலை)

நாகப்பட்டினம் மாவட்டம்

  1. நாகப்பட்டினம் (தேர்வு நிலை)
  2. வேதாரண்யம் (முதல் நிலை)

மயிலாடுதுறை மாவட்டம்

  1. மயிலாடுதுறை (சிறப்பு நிலை)
  2. சீர்காழி (இரண்டாம் நிலை)

திண்டுக்கல் மாவட்டம்

  1. பழனி (தேர்வு நிலை)
  2. கொடைக்கானல் (சிறப்பு நிலை)
  3. ஒட்டன்சத்திரம் (இரண்டாம் நிலை)

தேனி மாவட்டம்

  1. தேனி (சிறப்பு நிலை)
  2. பெரியகுளம் (இரண்டாம் நிலை)
  3. கம்பம் (முதல் நிலை)
  4. சின்னமனூர்(இரண்டாம் நிலை)
  5. போடிநாயக்கனூர் (தேர்வு நிலை)
  6. கூடலூர் (இரண்டாம் நிலை)

மதுரை மாவட்டம்

  1. திருமங்கலம் (முதல் நிலை)
  2. மேலூர் (இரண்டாம் நிலை)
  3. உசிலம்பட்டி (இரண்டாம் நிலை)

சிவகங்கை மாவட்டம்

  1. தேவகோட்டை (முதல் நிலை)
  2. சிவகங்கை (முதல் நிலை)
  3. மானாமதுரை (இரண்டாம் நிலை)

இராமநாதபுரம் மாவட்டம்

  1. இராமநாதபுரம் (சிறப்பு நிலை)
  2. பரமக்குடி (முதல் நிலை)
  3. இராமேஸ்வரம் (முதல் நிலை)
  4. கீழக்கரை (இரண்டாம் நிலை)

விருதுநகர் மாவட்டம்

  1. அருப்புக்கோட்டை (முதல் நிலை)
  2. இராஜபாளையம் (சிறப்பு நிலை)
  3. சாத்தூர் (இரண்டாம் நிலை)
  4. ஸ்ரீவில்லிப்புத்தூர் (முதல் நிலை)
  5. விருதுநகர் (தேர்வு நிலை)

தூத்துக்குடி மாவட்டம்

  1. கோவில்பட்டி (சிறப்பு நிலை)
  2. காயல்பட்டினம் (இரண்டாம் நிலை)
  3. திருச்செந்தூர் (இரண்டாம் நிலை) (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)

தென்காசி மாவட்டம்

  1. தென்காசி (தேர்வு நிலை)
  2. சங்கரன்கோவில் (முதல் நிலை)
  3. கடையநல்லூர் (முதல் நிலை)
  4. புளியங்குடி (இரண்டாம் நிலை)
  5. செங்கோட்டை (இரண்டாம் நிலை)
  6. சுரண்டை (இரண்டாம் நிலை) (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)

திருநெல்வேலி மாவட்டம்

  1. அம்பாசமுத்திரம் (இரண்டாம் நிலை)
  2. விக்கிரமசிங்கபுரம் (இரண்டாம் நிலை)
  3. களக்காடு (இரண்டாம் நிலை) (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)

கன்னியாகுமரி மாவட்டம்

  1. குழித்துறை (இரண்டாம் நிலை)
  2. குளச்சல் (முதல் நிலை)
  3. பத்மனாபபுரம் (இரண்டாம் நிலை)
  4. கொல்லங்கோடு (இரண்டாம் நிலை) (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)

2021-இல் உருவாக்கப்பட்ட புதிய நகராட்சிகள்

2021 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் 30 பேரூராட்சிகளைக் கொண்டு, 28 புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டது. மேலும் கும்பகோணம் நகராட்சியானது, கும்பகோணம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

தொடர்புடையவை

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.