அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டத்திலுள்ள நகரம் From Wikipedia, the free encyclopedia
விருதுநகர் மாவட்டத்திலுள்ள நகரம் From Wikipedia, the free encyclopedia
அருப்புக்கோட்டை (Aruppukkottai), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும்.
அருப்புக்கோட்டை | |||||||
— முதல் நிலை நகராட்சி — | |||||||
ஆள்கூறு | 9°30′50″N 78°06′01″E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | விருதுநகர் | ||||||
வட்டம் | அருப்புக்கோட்டை வட்டம் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | வீ ப ஜெயசீலன், இ. ஆ. ப [3] | ||||||
நகராட்சி தலைவர் | |||||||
சட்டமன்றத் தொகுதி | அருப்புக்கோட்டை | ||||||
சட்டமன்ற உறுப்பினர் | |||||||
மக்கள் தொகை | 1,36,047 (2011[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
• 123 மீட்டர்கள் (404 அடி) | ||||||
குறியீடுகள்
|
இவ்வூரின் அமைவிடம் 9.52°N 78.1°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 97 மீட்டர் (318 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்த ஊர் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை(45-பி)யில், மதுரையில் இருந்து 48 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
அருப்புக்கோட்டையின் பழைய பெயர் செங்காட்டு இருக்கை இடத்துவழி என்பதாகும்.
விஜயநகரப் பேரரசு காலத்தில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் மதுரையில் இருந்து இங்கு வந்து குடியேறி வேளாண்மை தொழில் செய்து வந்ததால் 'அரவகோட்டை' என அழைக்கப்பட்டது. பின் கால மாற்றத்தில் தற்போது அருப்புக்கோட்டை என அழைக்கப்படுகிறது. அருப்புக்கோட்டையை அண்டிய சிற்றூர்கள் மல்லிகை அரும்பு உற்பத்திக்குப் பெயர் பெற்றவை. அருப்புக்கோட்டை என்பது அரும்புகோட்டை என்னும் சொல்லின் மருவுச் சொல் எனவும் கூறப்படுகிறது. அருப்புக்கோட்டை நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 87,722 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 43,558 ஆண்கள், 44,164 பெண்கள் ஆவார்கள். அருப்புக்கோட்டை மக்கள்தொகையின் பாலின விகிதம் 1014. அதாவது 1000 ஆண்களுக்கு 1014 பெண்கள் இருக்கிறார்கள். அருப்புக்கோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 89.97% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.85%, பெண்களின் கல்வியறிவு 85.18% ஆகும். இது தமிழக சராசரி கல்வியறிவான 80.09% விட கூடியதே. அருப்புக்கோட்டை மக்கள் தொகையில் 7,654 (8.73%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். அருப்புக்கோட்டையில் 23,803 வீடுகள் உள்ளன.
2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 91.47% ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 6.42% கிருஸ்துவர்கள் 2.02%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். அருப்புக்கோட்டை மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 7.04%, பழங்குடியினர் 0.16% ஆக உள்ளனர்.[5]
நெசவு மற்றும் அதை சார்ந்த தொழில்கள், விவசாயம், பெரும்பான்மை நகர மக்களாலும் மற்றும் இதைச் சுற்றியுள்ள கிராம மக்களாலும் செய்யப்படுகின்றன. இந்நகரைச் சுற்றியுள்ள சுமார் ஆயிரம் கிராம மக்களுக்கு இது கல்வி மற்றும் சந்தைக்கான மைய இடமாக விளங்குகிறது. இந்நகரைச் சுற்றிலும் சுமார் பத்திற்கும் மேற்பட்ட தனியார் நூற்பு ஆலைகள் உள்ளன.
அருப்புக்கோட்டையானது மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கோவில்பட்டி மற்றும் இராமநாதபுரத்தை இணைக்கும் மையமாக செயல்படுகிறது.
திருச்சி, மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகியவற்றை இணைக்கும் ஒரு முக்கியமான வழியான தேசிய நெடுஞ்சாலை 45-பி, அருப்புக்கோட்டை வழியாக செல்கிறது.
அருப்புக்கோட்டை தொடருந்து நிலையமானது மானாமதுரை மற்றும் விருதுநகர் ஆகியவற்றுடன் இணைக்கும் அகல ரயில் பாதையாக உள்ளது. இது தென் மாவட்டங்களை, டெல்டா மாவட்டங்களுடன் இணைப்பதற்கான ஒரு முக்கிய தொடருந்துப் பாதையாகும். மேலும் இது விருதுநகர் - அருப்புக்கோட்டை - மானாமதுரை - காரைக்குடி - திருச்சி வழியாக சென்னைக்கு செல்ல மாற்று வழியாகவும் உள்ளது.
இங்கிருந்து 44 கி.மீ தொலைவில் மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைந்துள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.