வேலூர் மாவட்ட நகரம் From Wikipedia, the free encyclopedia
குடியேற்றம், சொல்வழக்கில் குடியாத்தம் (ஆங்கிலம்:Gudiyatham), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் வட்டம் மற்றும் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடம் நகரமும், முதல் நிலை நகராட்சியும் ஆகும்.
குடியாத்தம் குடியேற்றம் | |||||||
— முதல் நிலை நகராட்சி — | |||||||
ஆள்கூறு | |||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | வேலூர் | ||||||
வட்டம் | குடியாத்தம் வட்டம் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | வி. ஆர். சுப்புலட்சுமி, இ. ஆ. ப [3] | ||||||
சட்டமன்றத் தொகுதி | குடியாத்தம் | ||||||
சட்டமன்ற உறுப்பினர் |
வி. அமலு (திமுக) | ||||||
மக்கள் தொகை | 91,558 (2011[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
|
1954-ம் ஆண்டு குடியாத்தம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் முதல்முறையாக தமிழக முதலமைச்சராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 36 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 21,363 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 91,558 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 86.2%மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,029 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 9273 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 957 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 15,383 மற்றும் 96 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 81.58%, இசுலாமியர்கள் 16.96%, கிறித்தவர்கள் 0.98%, தமிழ்ச் சமணர்கள் 0.28%, மற்றும் பிறர் 0.20% ஆகவுள்ளனர்.[4]
இந்நகரானது கைத்தறி எனும் நெசவுத் தொழிலில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
குடியாத்தம் நகராட்சி என்பது குடியாத்தம் நகரை ஆளும் குடிமை அமைப்பாகும்
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.