விளாத்திகுளம் (ஆங்கிலம்:Vilathikulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். விளாத்திகுளம் நகரம் முந்தைய திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
விளாத்திகுளம் | |
— பேரூராட்சி — | |
அமைவிடம் | 9°07′54″N 78°09′53″E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தூத்துக்குடி |
வட்டம் | விளாத்திகுளம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | க. இளம்பகவத், இ. ஆ. ப [3] |
சட்டமன்றத் தொகுதி | விளாத்திகுளம் |
சட்டமன்ற உறுப்பினர் | |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 47 மீட்டர்கள் (154 அடி) |
இணையதளம் | www.townpanchayat.in/vilathikulam |
விளாத்திகுளத்திற்கு கிழக்கே சாயல்குடி 37 கிமீ; மேற்கே எட்டயபுரம் 19 கிமீ; வடக்கே புதூர் 19 கிமீ; தெற்கே தூத்துக்குடி 45 கிமீ. அருகமைந்த தொடருந்து நிலையம், கோவில்பட்டி 35 கிமீ தொலைவில் உள்ளது.
17.92 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 57 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி விளாத்திகுளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4,042 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 15,277 ஆகும் [5][6]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.