குட்டி பத்மினி
தென்னிந்திய திரைப்பட நடிகை / From Wikipedia, the free encyclopedia
குட்டி பத்மினி (Kutty Padmini) தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகையாவார். தமிழகத் திரைப்படத்துறையில் பிரதானமாக பணி புரிந்து வருகிறார். 1959இல் "ஆம்பள அஞ்சுலம்" எனறப் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1] இவர் தனது மூன்றாவது வயதில் தமிழகத் திரைப்படத்துறையில் அறிமுகமானார். சிவாஜி கணேசன், ம. கோ. இராமச்சந்திரன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரசினிகாந்த், கமல்ஹாசன் உட்பட தமிழ் திரையுலகின் பல முக்கிய நபர்களுடன் நடித்துள்ளார். குழந்தையும் தெய்வமும் திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை கலைஞருக்கான தேசிய திரைப்பட விருதை வென்ற முதல் பெண் குழந்தை நட்சத்திரக் கலைஞராவார். களத்தூர் கண்ணம்மா படத்தில் நடித்ததற்காக கமல்ஹாசன் முதல் முறையாக இவ்விருதினை பெற்றுள்ளார்.[2]
குட்டி பத்மினி | |
---|---|
குட்டி பத்மினி ஒரு நிகழ்ச்சியில் | |
பிறப்பு | 5 சூன் 1956 (1956-06-05) (அகவை 68) சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
இருப்பிடம் | சென்னை |
தேசியம் | இந்தியன் |
பணி | நடிகர், தயாரிப்பாளார், பெண் தொழிலதிபர் |
செயற்பாட்டுக் காலம் | 1959 முதல் தற்போது வரை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | குழந்தையும் தெய்வமும், கிருஷ்ணதாசி, இராமானுஜர் (தொலைக்காட்சித் தொடர்), ரோமாபுரி பாண்டியன் |
பிள்ளைகள் | கீர்த்தனா ஃபான்னிங், ரிதினேகா நேபால், ஆர்யா நேபால் |
வலைத்தளம் | |
http://www.vaishnaves.com |
குட்டி பத்மினி, பெண்மணி அவள் கண்மணி, அவள் அப்படித்தான், அவர்கள், சகலகலா சம்மந்தி போன்றத் திரைப்படங்களில் துணை நடிகையாகத் தன்னை வளர்த்துக் கொண்டார். இவரது வைஷ்ணவி ஃபிலிம்ஸ் எண்டெர்பிரசைஸ் லிமிடெட் என்ற தொலைக்காட்சி நிறுவனம் மூலம், "கிருஷ்ணதாசி", மற்றும் "இராமானுஜர்" போன்ற பல சிறந்த படைப்புகளை தயாரித்தார்.[3] தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாக உறுப்பினராகவும் இருக்கிறார்.[4]