ஜெய்சங்கர்
தமிழ் திரைப்பட நடிகர் / From Wikipedia, the free encyclopedia
ஜெய்சங்கர் (Jaishankar, 12 சூலை 1938 – 3 சூன் 2000) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு இவரது முதல் திரைப்படத்தின் இயக்குனர் ஜோசப் தளியத், ஜெய் என்ற பெயர்ச் சேர்க்கையை அளித்தார். இவர் 1960களிலும், 70களிலும் குறிப்பிடத்தக்க முன்னணி நடிகராக இருந்தார். இவர் நடித்த பெரும்பாலான படங்களில் மக்கள் கலைஞர் அல்லது மக்கள் தமிழன் என்ற பட்டத்துடன் படங்களில் இவருத பெயர் குறிப்பிடப்பட்டது. வல்லவன் ஒருவன் மற்றும் சி. ஐ. டி. சங்கர் போன்ற படங்களில் இவர் நடித்ததால் தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என்றும் குறிப்பிடப்பட்டார்.
விரைவான உண்மைகள் ஜெய்சங்கர், பிறப்பு ...
ஜெய்சங்கர் | |
---|---|
ஜெய்சங்கர் | |
பிறப்பு | சுப்பிரமணியம் சங்கர் (1938-07-12)சூலை 12, 1938 [1] திருநெல்வேலி, இந்தியா |
இறப்பு | சூன் 3, 2000(2000-06-03) (அகவை 61) சென்னை, இந்தியா |
மற்ற பெயர்கள் | மக்கள் கலைஞர், தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் |
செயற்பாட்டுக் காலம் | 1965-1998 |
வாழ்க்கைத் துணை | கீதா சங்கர் (தி. 1967) |
வலைத்தளம் | |
http://www.jaishankar.in |
மூடு