ஜேம்ஸ் பாண்ட்
பிரித்தானிய கற்பனை உளவாளி கதாபாத்திரம் பற்றிய தொடர் / From Wikipedia, the free encyclopedia
ஜேம்ஸ் பாண்ட் (ஆங்கில மொழி: James Bond) என்பது இயான் பிளெமிங் என்பவரால் 1952 இல் உருவாக்கப்பட்ட ஒரு கனவுருப்பனை உளவாளி கதைப்பாத்திரம் ஆகும். இவர் பிரித்தானிய இரகசிய சேவையின் உறுப்பினர் ஆவார். இவரது இரகசிய குறிப்பெண் 007 ஆகும். இக்கதாப்பாத்திரத்தை வைத்துப் பல புத்தகங்கள், திரைப்படங்கள், வானொலி நிகழ்ச்சிகள், காமிக்ஸ் கதைகள், காணொலி விளையாட்டுக்கள் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன.