அவள் அப்படித்தான்
சி. ருத்ரைய்யா இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
அவள் அப்படித்தான் 1978 ஆம் ஆண்டு சி. ருத்ரைய்யா இயக்கத்தில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா மற்றும் சிவச்சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர்.[1] தமிழில் வெளியான கடைசிக் கருப்பு வெள்ளைப் படங்களில் இது ஒன்றாகும். வணிக ரீதியாகத் தோல்வி அடையினும், இது விமர்சகர்கள், திரையுலகக் கலைஞர்கள் மற்றும் இணைத் திரைப்படத்தில் ஆர்வமுற்ற ரசிகர்கள் ஆகியோரிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்றது.
விரைவான உண்மைகள் அவள் அப்படித்தான், இயக்கம் ...
அவள் அப்படித்தான் | |
---|---|
![]() | |
இயக்கம் | சி. ருத்ரைய்யா |
தயாரிப்பு | சி. ருத்ரைய்யா, (குமார் ஆர்ட்ஸ்) |
கதை | அனந்து |
திரைக்கதை | சி. ருத்ரைய்யா வண்ணநிலவன் சோமசுந்தரேஸ்வர் |
இசை | இளையராஜா |
நடிப்பு | கமல்ஹாசன் ரஜினிகாந்த் ஸ்ரீபிரியா |
ஒளிப்பதிவு | நல்லுசாமி எம். என். ஞானசேகரன் |
படத்தொகுப்பு | ரவீந்திரன் |
வெளியீடு | அக்டோபர் 30, 1978 |
ஓட்டம் | 114 நிமிடங்கள் |
நீளம் | 3136 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மூடு
இத்திரைப்படம் தமிழக அரசு திரைப்பட விருதுகள் 1978 ஆண்டில் சிறந்த திரைப்படத்திற்கான இரண்டாம் பரிசு வாங்கியது. சிறந்த ஒளிப்பதிவாளர் விருதினையும் நல்லுசாமி மற்றும் ஞானசேகரன் வாங்கினார்கள். நடிகை ஸ்ரீபிரியா சிறப்பு பரிசும் தமிழக அரசிடமிருந்து வாங்கினார்.[2]