Remove ads
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
இது இந்து சமய விழாக்களை பட்டியலிடும் கட்டுரையாகும்.
இந்தக் கட்டுரையில் அல்லது கட்டுரைப் பகுதியில் விரிவாக்க வேலை நடந்து கொண்டிருக்கிறது. உங்களால் உதவ முடியுமெனில் இக்கட்டுரையை வளர்த்தெடுப்பதில் உதவுங்கள். இக்கட்டுரை அல்லது பகுதி பல நாட்களுக்கு தொகுக்கப்படாமல் காணப்படின், இந்த வார்ப்புருவை நீக்கி விடுங்கள். நீங்கள் இந்த வார்ப்புருவைச் சேர்த்த தொகுப்பாளராக இருந்து, நீங்கள் இதனைத் தொகுக்கும் போது {{in use}} என்ற வார்ப்புருவைச் சேர்த்து விடுங்கள்.
இந்த கட்டுரை ச.பிரபாகரன் (பேச்சு | பங்களிப்பு) ஆல் 28 நாட்கள் முன்னர் கடைசியாகத் தொகுக்கப்பட்டது. (இற்றைப்படுத்துக) |
பாரதத்தில் தற்காலத்தில் நான்கு வகை நாள்காட்டிகள் பின்பற்றப்படுகின்றன.
இவற்றில், அமையந்தம் முறையில் கணக்கிடப்படும் திங்களில் வளர்பிறை முதலிலும் தேய்பிறை இரண்டாவதாகவும் வரும். பூரணையந்தம் முறையில் கணக்கிடப்படும் திங்களில் தேய்பிறை முதலிலும் வளர்பிறை இரண்டாவதாகவும் வரும். ஒரு திங்களில் இரண்டு முறைகளிலும் வளர்பிறை பொதுவாக வரும். அமையந்தம் முறையில் வளர்பிறை பக்கத்திற்கு பிந்தைய தேய்பிறைப் பக்கத்தை அத்திங்களின் தேய்பிறைப் பக்கமாகவும் பூரணையந்தம் முறையில் வளர்பிறைப் பக்கத்திற்கு முந்தைய தேய்பிறைப் பக்கத்தை அத்திங்களின் தேய்பிறைப் பக்கமாகவும் எடுத்துக்கொள்வர்.
இவையல்லாமல், தமிழ்நாட்டில் சங்ககாலத்தில், நிரயனமுறை ஞாயிறு நாள்காட்டியுடன் சேர்த்து பூரணையைத் திங்களின் முதல் நாளாகக் கொண்டு கணக்கிடப்படும் திங்களைக் கொண்ட திங்கள் நாள்காட்டியும் இருந்துள்ளது. ஞாயிறு நாள்காட்டியில் மற்றொரு முறையான புவியிலிருந்து பார்க்கும் பொழுது ஞாயிறு உதயத்தின் வடக்கு தெற்கு நகர்வை வைத்து ஆண்டைக் கணக்கிடும் அயனமுறையைப் பற்றி அறிந்திருந்தாலும் நிரயனமுறை ஞாயிறு நாள்காட்டியையே பின்பற்றி வந்துள்ளனர்.
திங்கள் | நாள் | நிகழ்வு | வகை | குறிப்பு |
---|---|---|---|---|
மேழஞாயிறு=சித்திரைத்திங்கள் | ||||
சித்திரை | பிறப்பு=1 | சித்திரைப் புத்தாண்டு | புத்தாண்டு | சிறப்பு நிகழ்வு - பொன்னேர் உழுதல் |
சித்திரை | சித்திரை+பூரணை | சித்திரா பௌர்ணமி, சித்ரா பௌர்ணமி | விழா | |
சித்திரை | பரணி | சித்திரைப் பரணி | நோன்பு | |
சித்திரை | புனர்பூசம்+வளர்பிறை நவமி | இராம நவமி | பிறந்தநாள் | திருவரங்கம் கோவில் பஞ்சாங்கத்தில் ஞாயிறு நாட்காட்டிப்படி இருக்கும். நாட்காட்டியில் திங்கள் நாட்காட்டிப்படி இருக்கும். |
இடபஞாயிறு=வைகாசித்திங்கள் | ||||
வைகாசி | விசாகம்+பூரணை | வைகாசி விசாகம் | பிறந்தநாள் | முருகன் பிறந்தநாள் |
வைகாசி | சோதி+வளர்பிறை சதுர்தசி | நரசிம்ம ஜெயந்தி, நரசிம்ம செயந்தி | பிறந்தநாள் | திருவரங்கம் கோவில் பஞ்சாங்கத்தில் ஞாயிறு நாட்காட்டிப்படி இருக்கும். நாட்காட்டியில் திங்கள் நாட்காட்டிப்படி இருக்கும். |
மிதுனஞாயிறு=ஆனித்திங்கள் | ||||
ஆனி | கேட்டை+பூரணை | ஆனிக் கேட்டை | சிறப்பு நிகழ்வு - ஜேஷ்டாபிஷேகம் | |
ஆனி | அமை | ஆனி அமாவாசை | முன்னோர் வழிபாடு | |
ஆனி | உத்தரம் | ஆனி உத்தரம் | சிறப்பு நிகழ்வு - ஆனித் திருமஞ்சனம் | |
கடகஞாயிறு=ஆடித்திங்கள் | ||||
ஆடி | பிறப்பு=1 | ஆடிப்பிறப்பு | விழா | புது விதைப்புத் தொடக்கம், வேறுபெயர்=ஆடிப் பண்டிகை[1] |
ஆடி | 18 | ஆடிப்பெருக்கு | விழா | புது விதைப்புத் தொடக்கம், வேறுபெயர்கள்=ஆடிப் பதினெட்டு,ஆடிப் பதினெட்டாம்பெருக்கு,பதினெட்டாம்பெருக்கு, ஆடி நோன்பு |
ஆடி | 28 | ஆடி இருபத்தெட்டாம்பெருக்கு | விழா | வேறுபெயர்கள்=இருபத்தெட்டாம்பெருக்கு,இருபத்தெட்டாம் ஆடிப் பெருக்கு |
ஆடி | கார்த்திகை | ஆடிக் கார்த்திகை | நோன்பு | முருகன் வழிபாடு |
ஆடி | அமை | ஆடி அமாவாசை | முன்னோர் வழிபாடு | |
ஆடி | பூரம் | ஆடிப் பூரம் | பிறந்தநாள் | அம்மன் பிறந்தநாள், ஆண்டாள் பிறந்தநாள் |
ஆடி | செவ்வாய் | ஆடிச் செவ்வாய் | நோன்பு | முருகன் வழிபாடு |
ஆடி | வெள்ளி | ஆடி வெள்ளி | நோன்பு | அம்மன் வழிபாடு, புற்று நாகர் வழிபாடு |
ஆடி | கடைசி நாள் | ஆடி அறுதி | [1] | |
சிம்மஞாயிறு/சிங்கஞாயிறு=ஆவணித்திங்கள் | ||||
ஆவணி | பிறப்பு=1 | விஷூ | புத்தாண்டு | மலையாள புத்தாண்டு |
ஆவணி | ஓணம்+பூரணை | ஆவணி ஓணம் | விழா |
புது அறுவடை விழா,[1]
|
ஆவணி | உரோகணி+தேய்பிறை அட்டமி | கிருஷ்ண ஜெயந்தி | பிறந்தநாள் | திருவரங்கம் கோவில் பஞ்சாங்கத்தில் ஞாயிறு நாட்காட்டிப்படி இருக்கும். நாட்காட்டியில் திங்கள் நாட்காட்டிப்படி இருக்கும். |
ஆவணி | மூலம் | ஆவணி மூலம் | விழா | சிறப்பு நிகழ்வு - பிட்டுத்திருவிழா |
கன்னிஞாயிறு=புரட்டாசித்திங்கள் | ||||
புரட்டாசி | சனி | புரட்டாதிச் சனி | நோன்பு | விண்ணவன் வழிபாடு |
துலாஞாயிறு=ஐப்பசித்திங்கள் | ||||
ஐப்பசி | பிறப்பு=1 முதல் கடைசி நாள் வரை | ஐப்பசி முழுக்கு |
| |
ஐப்பசி | அமை | ஐப்பசி அமாவாசை | முன்னோர் வழிபாடு | |
விருச்சிகஞாயிறு=கார்த்திகைத்திங்கள் | ||||
கார்த்திகை | பிறப்பு=1 | முடவன் முழுக்கு | வேறுபெயர்=முடமுழுக்கு | |
கார்த்திகை | கார்த்திகை+பூரணை | கார்த்திகை விளக்கீடு | விழா |
பனிக்காலத் தொடக்கவிழா, புது அறுவடை விழா
|
கார்த்திகை | திங்கள் | கார்த்திகைத் திங்கள் | நோன்பு | முருகனுக்குச் சிறப்புரிமை நாள்[1] |
தனுசுஞாயிறு=மார்கழித்திங்கள் | ||||
மார்கழி | பிறப்பு=1 முதல் கடைசி நாள் வரை | மார்கழி நோன்பு | நோன்பு | சிறப்பு நிகழ்வு - பாவை நோன்பு, மார்கழி உற்சவம், மார்கழி நீராடல்[1] |
மார்கழி | ஆதிரை | மார்கழித் திருவாதிரை | நோன்பு |
சிறப்பு நிகழ்வு
|
மார்கழி | மூலம்+அமை | அனுமன் ஜெயந்தி | பிறந்தநாள் | |
மார்கழி | உரோகணி+வளர்பிறை ஏகாதசி | வைகுண்ட ஏகாதசி |
சிறப்பு நிகழ்வு
| |
மார்கழி | கடைசி நாள் | போகி | விழா | பழையன கழித்து புது அறுவடைக்கு ஆயத்தம் ஆகும் விழா |
மகரஞாயிறு=தைத்திங்கள் | ||||
தை | பிறப்பு=1 முதல் 3 வரை | தைப்பொங்கல் | விழா |
புதியன புகும் புது அறுவடை விழா
|
தை | பூசம்+பூரணை | தைப்பூசம் | விழா | முருகன் வழிபாடு |
தை | அமை | தை அமாவாசை | முன்னோர் வழிபாடு | |
தை | கார்த்திகை | தைக் கார்த்திகை | நோன்பு | முருகன் வழிபாடு |
தை | செவ்வாய் | தைச் செவ்வாய் | நோன்பு | |
தை | வெள்ளி | தை வெள்ளி | நோன்பு | |
கும்பஞாயிறு=மாசித்திங்கள் | ||||
மாசி | மகம்+பூரணை | மாசி மகம் | விழா | |
மீனஞாயிறு=பங்குனித்திங்கள் | ||||
பங்குனி | பிறப்பு=1 | காரடையான் நோன்பு | நோன்பு | |
பங்குனி | உத்தரம்+பூரணை | பங்குனி உத்தரம் | விழா | முருகன் வழிபாடு |
பங்குனி | திங்கள் | பங்குனித் திங்கள் | நோன்பு | அம்மன் வழிபாடு |
திங்கள் | நாள் | நிகழ்வு | வகை | மாவட்டம் | குறிப்பு |
---|---|---|---|---|---|
சித்திரை | சித்திரை+பூரணை முன் 10 நாள்கள் முதல் சித்திரை+பூரணை வரை | சித்திரைத் திருவிழா | விழா | மதுரை |
சிறப்பு நிகழ்வு
|
வைகாசி | மூலம் | தஞ்சாவூர் முத்துப்பல்லக்கு விழா | விழா | தஞ்சாவூர் | திருஞானசம்பந்தரின் குருபூசையை முன்னிட்டு நிகழும் விழா |
வைகாசி | முத்துப்பந்தல் விழா | விழா | தஞ்சாவூர் | ||
ஆனி | பூரணை | மாங்கனித் திருவிழா | விழா | காரைக்கால் | |
ஆடி | பிறப்பு=1 | தேங்காய் சுடும் விழா | விழா | கருவூர், ஈரோடு, சேலம், நாமக்கல் | |
ஆடி | உத்தராடம்+பூரணை | ஆடித் தவசு | விழா | தென்காசி | [1] |
ஆடி | வண்டி வேடிக்கை | சேலம் | |||
ஆடி | ஞாயிறு | ஆடி ஞாயிறு | சென்னை | [1] | |
ஆவணி | ஞாயிறு | ஆவணி ஞாயிறு | நோன்பு | நாஞ்சில் நாடு | [1] |
தை | 3 | வாழைப்பழம் சூறைவிடும் விழா | விழா | திண்டுக்கல் | |
தை | 5 | ஆற்றுத் திருவிழா | விழா | கடலூர், விழுப்புரம் | |
தை | 8 | மயிலார் திருவிழா | விழா | காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, திருப்பத்தூர் | காணும்பொங்கல் விழா முடிந்த ஆறாம்நாள்=தை 8, வேறுபெயர்கள்=மயிலார்,மயிலார் பண்டிகை,மயில் பண்டிகை,மயிலார் நோன்பு,[12][13][14][15][16][17][18][19][20][21] |
தை | முதல் ஞாயிறு | தலை ஞாயிறு | ஞாயிறு வழிபாடு | கன்றுக்குட்டிப்பொங்கல்,[16] | |
பங்குனி | புனர்பூசம் | நந்தி திருமண விழா | விழா | அரியலூர் |
குறிப்பு :
ஞாயிறுப்பெயர்ச்சி
வியாழன்பெயர்ச்சி
பிற திருநாள்கள்
நோன்பும் ஆண்டுவிழாவும்
தவறானச் சொல்லாடல்
பிற
வியாழன்பெயர்ச்சி
திங்கள் | நாள் | நிகழ்வு | வகை | குறிப்பு |
---|---|---|---|---|
சித்திரை | ||||
சித்திரை | வளர்பிறை பிரதமை | உகாதி, குடீ பாடவா, நவ்ரே | புத்தாண்டு |
|
சித்திரை | வளர்பிறை துவிதியை=மூன்றாம்பிறை | சேதி சந்த் | புத்தாண்டு | சிந்தி இந்துக்களின் புத்தாண்டு - சேதி=சித்திரை,சந்த்=சந்திரன்,பிறை தெரியும் முதல் நாள் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது |
சித்திரை | வளர்பிறை பிரதமை-நவமி | வசந்த நவராத்திரி | விழா | |
சித்திரை | வளர்பிறை நவமி | இராம நவமி | பிறந்தநாள் | |
வைகாசி | ||||
வைகாசி | வளர்பிறை திரிதியை | அட்சய திருதியை | தற்பொழுது நடக்கும் சதுர்யுகத்தில் நூறு விழுக்காடு அறமே நிறைந்திருக்கும் முதல் உகமான கிருதயுகம்(சத்தியயுகம்) இந்நாளில் பிறந்ததால் இந்நாளை கிருதயுகத்தின் புத்தாண்டாகக் கொண்டாடி இந்நாளில் அறச்செயல்கள் புரிவது மரபு | |
வைகாசி | வளர்பிறை பஞ்சமி | சங்கர ஜெயந்தி | பிறந்தநாள் | |
வைகாசி | வளர்பிறை சதுர்தசி | நரசிம்ம ஜெயந்தி, நரசிம்ம செயந்தி | பிறந்தநாள் | |
ஆனி | ||||
ஆனி | வளர்பிறை பூரணை | ஏர்வாக பௌர்ணமி | விழா |
புது விதைப்பு விழா,ஆந்திர மாநிலத்தில் கொண்டாடப்படுவது[23] |
ஆனி | வளர்பிறை பூரணை | வட பூர்ணிமா | நோன்பு | வடம்=ஆலமரம் |
ஆடி | ||||
ஆடி | வளர்பிறை துவிதியை=மூன்றாம்பிறை | ஆசாடி பீஜ் | புத்தாண்டு | குசராத்தின் கச்சுப்பகுதியின் புத்தாண்டு, புது விதைப்பு விழா, ஆசாடி=ஆடி, பீஜ்=துவிதியை |
ஆடி | வளர்பிறை ஏகாதசி | சயன ஏகாதசி | ||
ஆடி | வளர்பிறை பூரணை | குரு பூர்ணிமா | ஆசிரியர் வழிபாடு | |
ஆடி (அமையந்தம் முறை) | தேய்பிறை அமை | பீம அமாவாசை | முன்னோர் வழிபாடு | |
ஆவணி | ||||
ஆவணி | வளர்பிறை பஞ்சமி | கருட பஞ்சமி | ||
ஆவணி | வளர்பிறை பூரணைக்கு முன் வரும் வெள்ளி | வரலட்சுமி நோன்பு | நோன்பு | |
ஆவணி | வளர்பிறை பூரணை | ரக்ஷா பந்தன் | விழா | |
ஆவணி (அமையந்தம் முறை), புரட்டாசி (பூரணையந்தம் முறை) | தேய்பிறை சதுர்த்தி | மகாசங்கடகர சதுர்த்தி | ||
ஆவணி (அமையந்தம் முறை), புரட்டாசி (பூரணையந்தம் முறை) | தேய்பிறை அட்டமி | கிருஷ்ண ஜெயந்தி | பிறந்தநாள் | |
புரட்டாசி | ||||
புரட்டாசி | வளர்பிறை சதுர்த்தி | விநாயக சதுர்த்தி | விழா |
பெருவிழாவுடன் வரும் விழாக்கள்
|
புரட்டாசி | வளர்பிறை பஞ்சமி | ரிஷி பஞ்சமி | எழுமுனி வழிபாடு | |
புரட்டாசி | வளர்பிறை சப்தமி | முக்தாபரண சப்தமி | ஞாயிறு வழிபாடு | |
புரட்டாசி | வளர்பிறை துவாதசி | வாமன ஜெயந்தி | பிறந்தநாள் | |
புரட்டாசி (அமையந்தம் முறை), ஐப்பசி (பூரணையந்தம் முறை) | தேய்பிறை பிரதமை-அமை | மகாளய பட்சம் | முன்னோர் வழிபாடு |
|
ஐப்பசி | ||||
ஐப்பசி | வளர்பிறை பிரதமை-நவமி | துர்கா பூஜை, நவராத்திரி நோன்பு | விழா |
பெருவிழாவுடன் வரும் விழாக்கள்
சிறப்பு நிகழ்வு - கொலு |
ஐப்பசி | வளர்பிறை பூரணை | சரத் பூர்ணிமா | விழா | |
ஐப்பசி (அமையந்தம் முறை), கார்த்திகை (பூரணையந்தம் முறை) | தேய்பிறை திரிதியை | அட்ல தத்தே | நோன்பு | |
ஐப்பசி (அமையந்தம் முறை), கார்த்திகை (பூரணையந்தம் முறை) | தேய்பிறை சதுர்த்தி | கரக சதுர்த்தி | நோன்பு | |
ஐப்பசி (அமையந்தம் முறை), கார்த்திகை (பூரணையந்தம் முறை) | தேய்பிறை அமை | தீபாவளி | விழா |
முன்னோர் வழிபாடு, புது அறுவடை விழா
|
கார்த்திகை | ||||
கார்த்திகை | வளர்பிறை பிரதமை | பெஸ்து வரஸ் | புத்தாண்டு | குசராத்தி புத்தாண்டு, புது அறுவடை விழா, பெஸ்து=புது, வரஸ்=வருஷம் |
கார்த்திகை | வளர்பிறை பிரதமை-சட்டி | கந்த சஷ்டி, சூரசம்ஹாரம் | விழா | |
கார்த்திகை | வளர்பிறை சட்டி | சத் பூசை | ஞாயிறு வழிபாடு | சத்=சஷ்டி |
கார்த்திகை | வளர்பிறை ஏகாதசி | பிரபோதினி ஏகாதசி | ||
கார்த்திகை | வளர்பிறை பூரணை | தேவ தீபாவளி | விழா | |
மார்கழி | ||||
மார்கழி | வளர்பிறை பூரணை | தத்த ஜெயந்தி | பிறந்தநாள் | |
தை | ||||
மாசி | ||||
மாசி | வளர்பிறை சதுர்த்தி | கணேச ஜெயந்தி | பிறந்தநாள் | |
மாசி | வளர்பிறை பஞ்சமி | வசந்த பஞ்சமி | ||
மாசி | வளர்பிறை சப்தமி | ரத சப்தமி | ஞாயிறு வழிபாடு | |
மாசி (அமையந்தம் முறை), பங்குனி (பூரணையந்தம் முறை) | தேய்பிறை சதுர்தசி | மகா சிவராத்திரி | நோன்பு | |
பங்குனி | ||||
பங்குனி | வளர்பிறை பூரணை | ஹோலி | விழா |
பூரணையந்தம் முறையில் சித்திரைப் புத்தாண்டிற்கு முந்தைய நாள்=இளவேனிலை வரவேற்கும் விழா
|
குறிப்பு :
நோன்பும் ஆண்டுவிழாவும்
வேறுபாடு
பிற
பிற
நோன்பு
பிறை வழிபாடு
பிறந்தநாள்
பிற
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.