ரக்ஷா பந்தன் என்பது, ஆவணி மாதப் பௌர்ணமி நாளிற் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி. இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது. ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு (அல்லது பணம்) அளிப்பது வழக்கம். அடிப்படையில் இந்துக்களால் கொண்டாடப்படும் இப்பண்டிகையை மதப் பணடிகை என்பதை விட சமுதாயப் பண்டிகை என்று கூறுவது பொருந்தும்.

விரைவான உண்மைகள் Raksha Bandhan, அதிகாரப்பூர்வ பெயர் ...
Raksha Bandhan
Examples of Rakhi.
அதிகாரப்பூர்வ பெயர்Raksha Bandhan. रक्षा बन्धन
பிற பெயர்(கள்)Rakhi or Rakhri
கடைபிடிப்போர்Religious festival:' இந்து and Jains.[1] Multicultural: Sikhs,Buddhists, Christians[2] and Muslims.[3]
கொண்டாட்டங்கள்Religious: Sister-Brother get together, tie Rakhi on wrist, perform aarti,[4] mark tilak, brother promises to protect sister, sister feeds brother, brother gives gift, hugs. Multicultural: tying Rakhi, giving gifts, honoring relationships of siblings.
நாள்Purnima (full moon) of Shravana श्रावन पुर्णिमा
தொடர்புடையனBhai Duj; Bhai Tika
மூடு

வட இந்தியாவில் பிரபலமாக உள்ள இந்த நிகழ்ச்சி தற்போது தென்னிந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. வண்ணமயமான ராக்கிகள், தென்னிந்தியாவில் சின்னச் சின்ன கடைகளில் கூட தொங்குவதைக் காணலாம்.

ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுவதற்கான காரணம்

மகாபாரதத்தில் பாண்டவர்களின் மனைவியான திரௌபதி, போர்க்களத்தில் கிருஷ்ணருக்கு ஏற்பட்ட காயத்தால் வடிந்த இரத்தத்தைத் தடுப்பதற்காக, அவரது புடவையின் ஒரு பகுதியைக் கிழித்து, அவரின் மணிக்கட்டில் கட்டினார். இந்நிகழ்வு, கிருஷ்ணரின் ஆழ்மனதைத் தொட்டதால், அவர் திரௌபதியைத் தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு அவரை எல்லா தீயசக்திகளிடமிருந்தும், பிரச்சனைகளிலிருந்தும் பாதுகாப்பதாக அவருக்கு உறுதியளித்தார். அவரளித்த உறுதியைக் காப்பாற்றும் விதமாக, சூதாட்டத்தில் கௌரவர்களிடம் பாண்டவர்கள் தோற்று திரிதராஷ்டிராவின் நீதிமன்றத்தில் திரௌபதியை துகிலுரிய முயன்றபோது அவரின் மானத்தைக் கிருஷ்ணர் காப்பாற்றினார். திரௌபதி கிருஷ்ணரின் கையில் புடவையை கிழித்து கட்டிய நிகழ்வே இன்று ரக்ஷாபந்தன் விழாவாக கொண்டாடப்படுகிறது.

ரக்ஷாபந்தன் கொண்டாடப்படுவது தொடர்பான மற்றொரு வரலாற்று சம்பவமும் கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள சித்தூர் நாட்டை கர்ணாவதி என்ற ராணி ஆட்சி புரிந்து வந்தார். குஜராத்தை ஆண்ட சுல்தான் பகதூர் ஷா சித்தூர் நாட்டை கைப்பற்ற அந்த நாட்டின் மீது போர் தொடுத்தார். இதை கேள்விப்பட்ட ராணி முகலாய பேரரசர் ஹுமாயுன் அவர்களுக்கு ‘ராக்கி’ என்னும் புனிதக்கயிறை அனுப்பினார். பாச உணர்ச்சிக் கொண்ட ஹுமாயுன் ராணியையும் அவரது ராஜ்ஜியத்தைக் காப்பாற்ற முற்பட்டார். ஆனால் அதற்குள் ராணியை வென்று வெற்றிக்கொடி நாட்டினார் பேரரசர் பகதூர் ஷா.

கிமு 326 ல் மாவீரர் அலக்சாண்டர் இந்தியாவில் படையெடுத்து இந்தியாவின் ஏறக்குறைய வடக்குப் பகுதியனைத்தையும் கைப்பற்றிய பின்னர் போரஸ் மன்னரிடம் போரிட்டார். போரஸ் மன்னரின் வலிமையை கேள்விப்பட்ட அலக்ஸாண்டரின் மனைவி ரோக்ஷனா போரில் தன் கணவரின் உயிருக்கு எந்த தீங்கும் ஏற்படுத்தக் கூடாது என்று அவருக்கு ஒரு புனித நூலை அனுப்பினார். போரில் அலக்சாண்டரை நேரடியாக வீழ்த்த வாய்ப்புக் கிடைத்தும் கையில் கட்டியிருந்த புனித நூலைப் பார்த்ததும் அலக்ஸாண்டரை விட்டு விட்டார்.

இப்படி ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்படுவதற்கு கதை கதையாக சொல்லிக்கொண்டு போகலாம். தற்போது ரக்ஷா பந்தன் என்பது, ஆவணி மாதப் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் அல்லது அழகாக வடிவமைக்கப்பட்ட நூல்களால் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி. இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது. ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு (அல்லது பணம்) அளிப்பது வழக்கம். அடிப்படையில் இந்துக்களால் கொண்டாடப்படும் இப்பண்டிகையை மதப் பண்டிகை என்பதை விட சமுதாயப் பண்டிகை என்று கூறுவது பொருந்தும்.

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.