மிதிலையின் புனித நாள் From Wikipedia, the free encyclopedia
விவாக பஞ்சமி (Vivaha Panchami) என்பது இராமன், சீதை ஆகிய இருவரின் திருமணத்தை கொண்டாடும் ஒரு இந்து பண்டிகை ஆகும். இது மைதிலி நாட்காட்டியின்படி அக்ரகாயன மாதத்தில் (நவம்பர்-திசம்பர்) சுக்ல பட்சத்தின் ஐந்தாவது நாளிலும், இந்து நாட்காட்டியில் மார்கழி மாதத்திலும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இந்தியாவிலும், நேபாளத்தின் மிதிலைப் பிரதேசத்திலும் உள்ள இராமனுடன் தொடர்புடைய கோவில்களிலும், புனித இடங்களிலும் "விவாக உத்சவம்" எனக் கொண்டாடப்படுகிறது.
விவாக பஞ்சமி | |
---|---|
கடைப்பிடிப்போர் | இந்துக்கள் |
வகை | இந்து |
நிகழ்வு | வருடாந்திரம் |
நேபாளத்தில் உள்ள ஜனக்பூரில் இந்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அங்கு ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் இந்தியாவிலிருந்தும் நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் வருகிறார்கள். ஏனெனில் சீதை இராமனை (அயோத்தியின் இளவரசர்) திருமணம் செய்து கொண்டார் என்று நம்பப்படுகிறது.[1]
Seamless Wikipedia browsing. On steroids.