ஜனக்பூர்

From Wikipedia, the free encyclopedia

ஜனக்பூர்map

ஜனக்பூர் (Janakpur) நேபாளி: जनकपुर) நேபாள மாநில எண் 2-இல் அமைந்த தனுசா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும்.[1]ஜனக்பூர் நகரத்தில் புகழ் பெற்ற ஜானகி கோயில் அமைந்துள்ளது. இந்நகரம் நேபாளத்தின் ஆன்மீகம் மற்றும் பண்பாட்டுச் சுற்றுலாத் தலமாகும்.[2]இந்தியாவின் பீகார் - நேபாள எல்லையில் அமைந்த ஜனக்பூர் நகரம், பாட்னாவிலிருந்து 180 கிமீ தொலைவிலும்; அயோத்திலிருந்து 520 கிமீ தொலைவிலும் உள்ளது.

விரைவான உண்மைகள் ஜனக்பூர் जनकपुर, நாடு ...
ஜனக்பூர்
जनकपुर
நகரம்
Thumb
அடைபெயர்(கள்): மிதிலை
குறிக்கோளுரை: சமயம் & பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த நகரம்
Thumb
ஜனக்பூர்
நேபாளத்தில் ஜனக்பூரின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 26°43′43″N 85°55′30″E
நாடுநேபாளம்
மண்டலம்ஜனக்பூர் மண்டலம்
மாநிலம்நேபாள மாநில எண் 2
மாவட்டம்தனுஷா மாவட்டம்
அரசு
  வகைநகராட்சி
பரப்பளவு
  மொத்தம்100.20 km2 (38.69 sq mi)
ஏற்றம்
74 m (243 ft)
மக்கள்தொகை
 (2015)
  மொத்தம்1,69,287
  அடர்த்தி1,700/km2 (4,400/sq mi)
நேர வலயம்ஒசநே+5:45 (நேபாள சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
45600
இடக் குறியீடு041
இணையதளம்http://janakpurmun.gov.np
மூடு

மிதிலையை தலைநகராகக் கொண்ட விதேக நாட்டு மன்னர் ஜனகரின் பெயரால், கிபி 18ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் நிறுவப்பட்ட ஜனக்பூர் நகரத்தை ஜனக்பூர்தாம் என்றும் அழைப்பர். [3]

ஜனக்பூர் நகரம் நேபாள தேசியத் தலைநகரம் காட்மாண்டிலிருந்து தென்கிழக்கே 123 கிமீ தொலைவில் உள்ளது.[4]2015ஆம் ஆண்டில் இந்நகரத்தின் மக்கள் தொகை 1,69,287 ஆக இருந்தது.[5]

வரலாறு

புனித யாத்திரை தலமான ஜனக்பூர் நகரம் 1805ல் நிறுவப்பட்டது. இந்து தொன்மவியலின் இராமாயணக் காவியத்தில் மன்னர் ஜனகரின் அரண்மனை விதேக நாட்டின் தலைநகரான ஜனக்பூரில் அமைந்திருந்தது.

சீதையின் சுயம்வரத்திற்காக இராமர் முறித்த வில், ஜனக்பூரின் வடமேற்கில் தொல்லியல் ஆய்வின் போது கண்டெடுக்கப்பட்டது.[3] ஜனக்பூரில் சீதையின் நினைவாக ஜானகி கோயில் நிறுவப்பட்டுள்ளது.

1950 வரை ஜனக்பூர் சிறு கிராமமாக இருந்தது. பின்னர் வளர்ச்சி அடைந்து நகராட்சியான ஜனக்பூர், 1960 முதல் தனுஷா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமாக செயல்படுகிறது.[1]

கி மு 600க்கும் முந்தைய சதபத பிராமண சாத்திரத்தில், மிதிலையின் மன்னர் மாதவ விதேகன் என்பவர் விதேக நாட்டை நிறுவியதாக கூறப்பட்டுள்ளது. கௌதம புத்தரும், மகாவீரரும் ஜனக்பூரில் சிறிது காலம் ஜனக்பூர் நகரத்தில் வாழ்ந்ததாக, பௌத்த, சமண சாத்திரங்கள் கூறுகிறது. மிதிலை பிரதேசத்தில் முக்கிய வணிக மையமாக ஜனக்பூர் நகரம் திகழ்ந்திருந்தது.

புவியியல் & தட்ப வெப்பம்

நேபாளம்|நேபாளத்தின்]] தெற்கு பகுதியில், வெளித் தராய் சமவெளியில், இந்திய எல்லையை ஒட்டி அமைந்த ஜனக்பூர் நகரம் உள்ளது. இந்நகரத்தில் ஏப்ரல் முதல் சூன் வரை கோடைக்காலமும்; சூலை முதல் செப்டம்பர் முடிய மழைக்காலமும்; அக்டோபர் முதல் ஜனவரி முடிய கடுங்குளிர் காலமுமாக உள்ளது.[1]

ஜனக்பூரில் பாயும் முக்கிய ஆறுகள்: தூத்மதி, ஜலாத், ராதே, பாலன் மற்றும் கமலா ஆகும்.

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், ஜனக்பூர் விமான நிலையம் (1981-2010), மாதம் ...
தட்பவெப்ப நிலைத் தகவல், ஜனக்பூர் விமான நிலையம் (1981-2010)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 22.2
(72)
26.0
(78.8)
31.2
(88.2)
34.8
(94.6)
34.6
(94.3)
34.1
(93.4)
32.5
(90.5)
32.7
(90.9)
32.3
(90.1)
31.7
(89.1)
29.3
(84.7)
25.1
(77.2)
30.5
(86.9)
தினசரி சராசரி °C (°F) 15.6
(60.1)
18.6
(65.5)
23.4
(74.1)
27.7
(81.9)
29.3
(84.7)
30.0
(86)
29.3
(84.7)
29.6
(85.3)
28.8
(83.8)
26.8
(80.2)
22.5
(72.5)
18.0
(64.4)
25.0
(77)
தாழ் சராசரி °C (°F) 9.1
(48.4)
11.3
(52.3)
15.5
(59.9)
20.6
(69.1)
24.0
(75.2)
25.9
(78.6)
26.1
(79)
26.4
(79.5)
25.3
(77.5)
22.0
(71.6)
15.7
(60.3)
10.9
(51.6)
19.4
(66.9)
பொழிவு mm (inches) 11.7
(0.461)
11.4
(0.449)
11.5
(0.453)
52.2
(2.055)
128.3
(5.051)
238.7
(9.398)
487.6
(19.197)
339.4
(13.362)
197.5
(7.776)
63.9
(2.516)
1.9
(0.075)
8.4
(0.331)
1,552.5
(61.122)
ஆதாரம்: [6]
மூடு

பொருளாதாரம்

நேபாளத்தின் வேகமாக வளரும் நகரஙகளில் ஒன்றான ஜனக்பூரில் சிறந்த கல்வி நிறுவனங்கள் உள்ளது. சுற்றுலாத் துறை ஜனக்பூரின் முக்கிய வருவாய் ஆகும். மைதிலி மொழி பேசும் பெண்களின் தயாரிப்புகளான, மதுபனி கலைநயத்துடன் கூடிய ஓவியங்கள், மட்பாண்டங்கள் புகழ் பெற்றது.

போக்குவரத்து

Thumb
ஜனக்பூர் தொடருந்து நிலையத்தில் நிற்கும் தொடருந்து
Thumb
ஜனக்பூர் வானூர்தி நிலையம்

நேபாள இரயில்வே நிறுவனம், ஜனக்பூர் நகரத்தை இந்தியாவின் பிகார் மாநிலத்தின் ஜெய்நகரத்துடன் தொடருந்துகள் மூலம் இணைக்கிறது.

ஜனக்பூர் விமான நிலையம், காட்மாண்டுவுடன் வானூர்திகள் மூலம் இணைக்கிறது. [7]

மக்கள் தொகையியல்

2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜனக்பூர் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 97,776 ஆகும். ஜனக்பூரின் நகரப்புறத்தில் 11 கிராமங்கள் உள்ளது. ஜனக்பூர் நேபாளத்தின் ஆறாவது பெரிய நகரமாகும். இந்நகரத்தில் மைதிலி மொழி முக்கிய மொழியாகவும் மற்றும் நேபாள மொழி, போஜ்புரி மொழி, அவதி மொழி மற்றும் இந்தி மொழிகளும் பேசப்படுகிறது.

கோயில்கள்

Thumb
இராம-இலக்குமணர்கள் நடுவில் சீதையும், காலடியில் அனுமாரும்
Thumb
சாத் திருவிழா, ஜனக்பூர்

ஜனக்பூரின் நடுவில் புகழ் பெற்ற ஜானகி கோயில் 1898இல் ஒன்பது இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. [8]

ஜனக்பூரின் பழையான இராமர் கோயில் கூர்க்கா படைவீரர் அமர் சிங் தாபா என்பவரால் கட்டப்பட்டது.[8] சிறப்பு நாட்களில், இங்குள்ள கங்கா சாகர், தனுஷ் சாகர் போன்ற 200 புனிதக் குளங்களில் மக்கள் கூட்டமாக கூடி நீராடுவர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.