Remove ads
இந்து மத பண்டிகை From Wikipedia, the free encyclopedia
கோவத்ச துவாதசி ( Govatsa Dwadashi )என்பது ஒரு இந்துக்களின் கலாச்சார மற்றும் மத பண்டிகையாகும். இது இந்தியாவின் சில பகுதிகளில், குறிப்பாக மகாராட்டிர மாநிலத்தில், வாசு பரஸ் என்று அழைக்கப்படும் தீபாவளி கொண்டாட்டங்களின் தொடக்கத்தைக் குறிக்கிறது. குசராத்தில், இது வாக் பரஸ் என்றும், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிதாபுரம் தத்தா மகாசம்ஸ்தானில் ஸ்ரீபாத ஸ்ரீ வல்லபரின் ஸ்ரீபாத வல்லப ஆராதனா உத்சவம் என்றும் கொண்டாடப்படுகிறது . [1] இந்து மதத்தில், பசுக்கள் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகின்றன. இது தாய்மார்களுக்குச் சமமான ஊட்டமளிக்கும் பால் மக்களுக்கு வழங்குகிறது.
கோவத்ச துவாதசி | |
---|---|
பிற பெயர்(கள்) | வாசு பரஸ், நந்தினி விரதம், பச் பரஸ் |
கடைப்பிடிப்போர் | இந்துக்கள் |
வகை | இந்துக்களின் கலாச்சார மற்றும் மத பண்டிகை |
கொண்டாட்டங்கள் | 1 நாள் |
அனுசரிப்புகள் | பசுக்கள் மற்றும் கன்றுகளை வணங்கி அதற்கு கோதுமை உணவுகளை வழங்குதல் |
நாள் | 27 ஐப்பசி (amanta tradition) 12 கார்த்திகை (purnimanta tradition) |
தொடர்புடையன | கோவர்தனன் பூஜை, தீபாவளி |
சில வட இந்திய மாநிலங்களில், கோவத்ச துவாதசி வாக் என்று குறிப்பிடப்படுகிறது. இது ஒருவரின் நிதிக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதைக் குறிக்கிறது. எனவே வணிகர்கள் தங்கள் கணக்குப் புத்தகங்களை வணங்கி கடவுளின் முன் வைத்துவிட்டு அன்று வணிகம் எதுவும் செய்யமாட்டார்கள் .இந்து சமயத்தில், பசுக்கள் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகின்றன. இது தாய்ப்பாலுக்குச் சமமான ஊட்டமளிக்கும் பாலை மக்களுக்கு வழங்குகிறது. சைவ மரபில் நந்தினி [2] மற்றும் நந்தி ஆகிய இரண்டும் புனிதமானதாகக் கருதப்படுவதால், கோவத்ச துவாதசி நந்தினி விரதமாகவும் அனுசரிக்கப்படுகிறது. இது மனித வாழ்க்கையை நிலைநிறுத்த உதவிய பசுக்களுக்கு நன்றி தெரிவிக்கும் திருவிழாவாகும். இதனால் பசுக்கள் மற்றும் கன்றுகள் இரண்டும் வணங்கப்பட்டு கோதுமைப் பொருட்களால் உணவளிக்கப்படுகின்றன. இந்த நாளில் கோதுமை மற்றும் பால் பொருட்கள் சாப்பிடுவதை பக்தர்கள் தவிர்க்கிறார்கள். இந்த வழிபாடுகள் மற்றும் சடங்குகளால் பக்தர்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. [3] கோவத்ச துவாதசியின் முக்கியத்துவம் பவிசிய புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
கோவத்ச துவாதசியை முதன்முதலில் உத்தானபாத மன்னன் ( சுவயம்புவ மனுவின் மகன்) மற்றும் அவரது மனைவி சுனிதி ஆகியோர் விரதத்துடன் அனுசரித்தனர் என்று கூறப்படுகிறது. அவர்களின் பிரார்த்தனை மற்றும் விரதத்தின் காரணமாக, அவர்களுக்கு துருவன் என்ற மகன் பிறந்தான்.
பசுக்களையும் கன்றுகளையும் குளிப்பாட்டி, ஆடைகள் மற்றும் மலர் மாலைகள் அணிவித்து, அவற்றின் நெற்றியில் மஞ்சள் / மஞ்சள் பொடி பூசப்படும். சில கிராமங்களில், மக்கள் சேற்றில் இருந்து பசுக்களையும் கன்றுகளையும் உருவாக்கி, அதற்கும் மாலை அணிவித்து, அலங்கரிப்பார்கள். ஆரத்திகள் நடத்தப்படும். பூமியில் காமதேனுவின் மகளாக இருந்த மற்றும் வசிட்ட முனிவரின் ஆசிரமத்தில் வாழ்ந்த புனித பசு நந்தினிக்கு கோதுமை பொருட்கள், உளுந்து மற்றும் வெண்டைக்காய் முளைகள் பசுக்களுக்கு உணவளிக்கப்படுகின்றன. பசுக்கள் மீது கிருட்டிணனின் அன்பையும், அவற்றின் அருளாளர் என்பதையும் போற்றும் பாடல்களை பக்தர்கள் பாடுகின்றனர். பெண்கள் தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக நந்தினி விரதம் கடைப்பிடிக்கிறார்கள். மேலும் அன்று மது அருந்துவதையும், சாப்பிடுவதையும் தவிர்க்கிறார்கள். பசுக்கள் தாய்மையின் அடையாளமாகவும், இந்தியாவின் பல கிராமங்களில் வாழ்வாதாரத்தின் முக்கிய ஆதாரமாகவும் இருப்பதால், அவை தீபாவளி வழிபாட்டின் மையமாக உள்ளன. [4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.