From Wikipedia, the free encyclopedia
புனித நீராடும் விழா (புஷ்கரம்) என்பது இந்தியாவில் கொண்டாடப்படுகின்ற, ஆற்றை வணங்குகின்ற விழாவாகும்.
புஷ்கரம் என்ற சொல்லுக்கு தீர்த்தமாடுதல் என்று பொருள் கூறப்படுகிறது. புஷ்கரணி என்றால் தீர்த்த கட்டம் ஆகும். அதாவது அது குளியலுக்கான சாதாரண படித்துறை அல்ல. அதைவிடப் புனிதமான ஆன்மிக தீர்த்தமாடும் தலமாகக் கருதப்படுகிறது.[1]
இவ்விழா இந்தியாவின் 12 பெரிய ஆறுகளில் கொண்டாடப்படுகிறது. மூத்தோர் வழிபாடு, ஆன்மீகச் சொற்பொழிவுகள், பண்பாட்டு நிகழ்வுகள் போன்றவை இவ்விழாவின்போது நடத்தப்படுகின்றன. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒவ்வொரு ஆற்றிலும் நடத்தப்பெறுகிறது. ஒவ்வொரு ஆறும் ஒவ்வொரு ராசியுடன் தொடர்புடையதாகும். குரு இருக்கும் இடத்தினைப் பொறுத்து, தொடர்புடைய ஆற்றில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. [2]
ஜாதக பாரிஜாதா (1426) என்ற நூலில் இது தொடர்பான ஒரு கதை கூறப்படுகிறது. கடுமையான தவத்தை மேற்கொண்ட பிராமணர் ஒருவருக்கு சிவன் ஒரு வரம் அளித்தார். அதன்படி அவரால் தண்ணீரில் வாழவும், புனித நீரை சுத்தமாக்கவும் முடியும். அந்த பிராமணர் புஷ்கரா என்றழைக்கப்பட்டார். குருவின் வேண்டுகோளின்படி அவர் 12 புனித ஆறுகளில் ஒன்றில் இருக்க முடிவெடுத்தார்.[3]
ஒவ்வொரு ஆறும் ஒவ்வொரு ராசியுடன் தொடர்புடைய நிலையில் அந்தந்த ஆண்டிற்கான விழா குரு இருக்கும் நேரத்தைப் பொறுத்துக் கொண்டாடப்படுகிறது.[4] சில சமயங்களில் குரு ஒரே ராசியில் ஆண்டில் இரு முறை வரவும் வாய்ப்புள்ளது. அவ்வாறான காலக்ளில் குருவின் இரண்டாவது கால நுழைவென்பது விழாவின் முதல் பகுதியாக அமைக்கப்படுகிறது.[5]
புஷ்கரம் எனப்படுகின்ற மரபு பற்றி ஆரம்ப கால இந்து சமய இலக்கியங்களில் கூறப்படவில்லை. இடைக்காலத்தில் இம்மரபு வந்ததாகக் கூறப்படுகிறது. அந்தந்த பகுதிகளின் பழக்கவழக்கங்களுகேற்ப 12 ஆறுகளின் பெயர்களும் அவ்வப்போது மாறும்.[2][3]
இந்தியாவில் ராசியின் அடிப்படையிலும், நதிகளின் அடிப்படையிலும் புஷ்கரங்கள் 12 இடங்களில் கொண்டாடப்படுகின்றன.[6] [7]
ராசி | நதி | புஷ்கரம் | கொண்டாடப்படும் இடங்கள் |
---|---|---|---|
மேஷம் | கங்கை | கங்கா புஷ்கரம் | காசி, ஹரித்வார், ரிஷிகேஷ் |
ரிஷபம் | நர்மதை | நர்மதா புஷ்கரம் | ஓங்காரேஸ்வரர் தலம் (நர்மதா நதிக்கரை, மத்தியப் பிரதேசம்) |
மிதுனம் | சரஸ்வதி | சரஸ்வதி புஷ்கரம் | குருசேத்திரம், கேசவ பிரயாகை, சோம்நாதபுரம் (குஜராத்), திரிவேணி சங்கமம் (அலகாபாத்), காலேஸ்வரம் (ஆந்திரப்பிரதேசம்), பேடாகட் (மத்தியப் பிரதேசம்) |
கடகம் | யமுனை | யமுனா புஷ்கரம் | யமுனோத்ரி, ஹரித்வார், விருந்தாவன், மதுரா, திரிவேணி சங்கமம் |
சிம்மம் | கோதாவரி | கோதாவரி புஷ்கரம் | திரியம்பகம் (நாசிக் மாவட்டம்), கோதாவரி நதி தீர்த்தக்கரை (ஆந்திரப்பிரதேசம்) |
கன்னி | கிருஷ்ணா | கிருஷ்ணா புஷ்கரம் | பஞ்ச கங்கா நதி (துளசி, காசரி, போகவதி, கும்பி, சாவித்ரி ஆகிய ஐந்து நதிகள் சேர்ந்து), பிரயாக் சங்கமம் (கிருஷ்ணா நதியோடு சேருமிடம்), விஜயவாடா (ஆந்திரப்பிரதேசம்) |
துலாம் | காவிரி | காவிரி புஷ்கரம் | ஒக்கனேக்கல், மேட்டூர், ஈரோடு, பவானி, பள்ளிபாளையம், கொடுமுடி, நெரூர், வேலூர் (நாமக்கல்), திருச்சி, ஸ்ரீரங்கம், திருவையாறு, சுவாமிமலை, கும்பகோணம், மயிலாடுதுறை, காரைக்கால், பூம்புகார் (தமிழ்நாடு) |
விருச்சிகம் | தாமிரபரணி | பீமா மற்றும் தாமிரபரணி புஷ்கரம் | பீமாசங்கரம் (ஜோதிர்லிங்கத்தலம்), பண்டரிபுரம், பாண தீர்த்தம் (தாமிரபரணி நதிக்கரை), பாபநாசம், திருவிடைமருதூர், சிந்துபூந்துறை |
தனுசு | பிரம்மபுத்ரா | பிரம்மபுத்ரா புஷ்கரம் | பிரம்மபுத்ரா நதிக்கரை (அஸ்ஸாம்) |
மகரம் | துங்கபத்ரா | துங்கபத்திரா புஷ்கரம் | சிருங்கேரி, மந்த்ராலயம் |
கும்பம் | சிந்து | சிந்து புஷ்கரம் | சிந்து நதி பாயும் ஜம்மு, காஷ்மீர், பஞ்சாப் |
மீனம் | பிராணஹிதா (கோதாவரியின் உப நதி) | பிராணஹிதா புஷ்கரம் | காலேஸ்வரம் (அடிலாபாத், தெலுங்கானா) |
Seamless Wikipedia browsing. On steroids.