சரசுவதி ஆறு (Sarasvati River) என்பது ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஓர் ஆறு. ரிக் வேதத்தின் (10.75) நதி வணக்கம் (நதி ஸ்துதி) எனும் பகுதியில் இந்த ஆறு சொல்லப்படுகிறது.
வேதத்தில் குறிப்பிடப்படும் சரசுவதி ஆற்றின் உண்மைத்தன்மை குறித்துப் பல வேறுபட்ட கருத்துகள் உள்ளன. மாக்ஸ் முல்லர் போன்றோர் இதை காகர்-ஹக்ரா நதி என்கின்றனர். சிலரோ தெற்கு ஆஃப்கானிஸ்தானில் உள்ள ஹேல்மந் நதி என்கின்றனர்.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம் எனுமிடத்தில் கங்கை, யமுனை ஆறுகளுடன் இந்த சரசுவதி ஆறும் வந்து கட்புலனாகாமல் கலப்பதாக நம்பப்பட்டு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நிகழ்த்தப்படுகிறது.
ஆராய்ச்சி நூல்
சரசுவதி ஆறு குறித்து, "சரசுவதி - த ரிவர் தட் டிஸ்அப்பியர்டு" எனும் ஆராய்ச்சி நூல் அறிஞர் கே.எஸ்.வால்டியாவால் எழுதப்பட்டது. [1]
ஆவணப்படம்
சரசுவதி ஆற்றை மீட்கும் முயற்சிக்குப் பின்னுள்ள அரசியலை, போலி அறிவியலை, மூட நம்பிக்கையைக் கேள்விக்கு உட்படுத்தும்விதத்தில் ‘சர்ச்சிங் ஃபார் சரஸ்வதி’ எனும் ஆவணப்படம் ஷிர்லி ஆபிரகாம், அமித் மாதேஷியா ஆகியோர் இயக்கத்தில் எடுக்கப்பட்டுள்ளது.[2]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.