From Wikipedia, the free encyclopedia
போஹாக் பிஹூ அல்லது ரங்கோலி பிஹூ என்பது வடகிழக்கு இந்திய மாநிலமான அசாம் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பழங்குடிகளால் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய திருவிழா ஆகும். மேலும் இது அசாமின் புத்தாண்டு தொடக்கத்தை குறிக்கிறது. திபெத்திய-பர்மா மற்றும் தாய் கூறுகளை கொண்ட இத்திருவிழா பழங்குடி வம்சாவளியை சார்ந்த்தது. இது வழக்கமாக ஏப்ரல் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வரும்,வரலாற்றின் அடைப்படையில் அறுவடை காலத்தை குறிக்கிறது.ஆண்டுதோறும் ஏப்ரல் 14 வது நாளில் வருகிறது. [1] இவ்விடுமுறை நாட்களில் அசாமின் பூர்வீக குடிகள் ஒண்றினைந்து கொண்டாடி வருகின்றனர்.
ரங்கோலி உற்சவம் என்பது ஆண்டுதோறும் கவுகாத்தியில் நடத்தப்பெறும் திருவிழா ஆகும்[2][3][4][5] ,இத்திருவிழா அசாம் பழங்குடிகளின் கலாச்சாரத்தை உலகிற்கு தெரிவிக்கிறது.[6][7][8]
அசாமின் ஊள்ளுரில் போஹாக் (அசாம் நாட்காட்டியின்படி) ஆரம்பமானது ரங்கோலி பிஹூவின் தொடக்கமாக உள்ளது.பிஹூவின் மூன்று முக்கிய வகைகள் போஹாக் பிஹூ அல்லது ரங்கோலி பிஹூ, கட்டி பிஹூ அல்லது கொங்காலி பிஹூ, மாக் பிஹூ அல்லது போகலி பிஹூ,இந்த ஒவ்வொறு திருவிழாவும் நெற்பயிர்களின் விவசாய சுழற்சியை முறையை வரலாற்று பூர்வமாக அங்கீகரிப்பதாய் உள்ளது.[9] ரங்கோலி பிஹூவின் போது ஏழு உச்ச நிலைகள் உள்ளன 'அவை 'சோட்', 'ராத்தி', 'கோரு', 'மனு', 'குடும்', 'மேளா' மற்றும் 'சேரா'.
ராத்தி பிஹூ(ৰাতি বিহু): இந்த நிலையில் சோட் மாதத்தின் இரவில் தொடங்கி உருகா வரை நடைபெறும்.இந்நிலையானது பழங்கால மரத்தின் அடியில் எரியும் தீப்பந்தங்கள் ஒளியில் திறந்த வெளியில் நடத்தப்பட்டது.கிராமங்களில் நடத்தப்பட்டது இதில் அதிகளவில் பெண்கள் பங்கேற்றனர்,ஆண்கள் பெயரளவில் சடங்கிற்காக மட்டுமே பங்கேற்றனர். அவர்கள் பீப்பா எனப்படும் எருமை கொம்பு குழாயினை வாசித்தனர்.இந்த கட்டத்தில் வாசிக்கப்படும் ஒரு முக்கிய இசைக்கருவி 'பொலுஹா பான்ஹோர் டோகா ஆகும்,மூங்கிலை பிளந்து செய்யப்பட்ட இசைக்கருவியாகும்.
சோட் பிஹூ(চ'ত বিহু): பாலி ஹூசோரி என அழைக்கப்படும் இந்த கட்டம் சோட் மா மாதத்தின் இரண்டாம் நாளில் தொடங்குகிறது,இந்நாளில் வயல்வெளிகள்,வெளி இடங்கள் நாம்கோர் பகோரி(சமூக பிரார்த்தனை கூடத்தின் முற்றம்) ஆகிய இடங்களில் இளைஞர்களால் பிஹூ பாடல்கள்,நடனங்கள் ஆகியவை ரங்கோலி பிஹூவின் முறையான ஆரம்பமான உருகா வரை ஏற்பாடு செய்யப்படுகிறாது.
கோரு பிஹூ (গৰু বিহু): இந்த கட்டம் அசாமின் விவசாய வேர்கள் மற்றும் பழங்கால வாழ்வாதரத்தை வழங்கிய கால்நடைகளுக்கான மரியாதை செய்வது தொடர்பானது.சோட் மாதத்தின் கடைசி தேதியில் ரங்கோலி பிஹூவின் முதல் நாள் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை காட்சிபடுத்தப்படுகிறது. ஒரு கிராமத்தின் மொத்த கால்நடைகளும் குளம் அல்லலது ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு கொண்டு வரப்படுகிறது.குறிப்பிட்ட மூலிகைகள் கொண்டு காலநடைகள் கழுவப்படுகிரது.இது சடங்காக செய்யப்படுகிறது.
மனு பிஹூ (মানুহ বিহু): போஹாக் மாதத்தின் முதல் நாள் மனு பிஹூவைக் குறிக்கிறது (மனு என்பது பெரியவர்கள் மற்றும் மூதாதையர்களின் ஆவிகளைக் குறிக்கிறது) மக்கள் பெரியவர்களுக்கும், மூதாதையர்களுக்கும் பிரசாதம் கொடுத்து ஆசிர்வாதம் கேட்கிறார்கள்.
குடும் பிஹூ(কুতুম বিহু): போஹாக் மாவின் இரண்டாவது தேதி குடும் பிஹூவாகும்.இந்த நாளில் மக்கள் தங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களைச் சந்தித்து மதிய உணவு அல்லது இரவு உணவை ஒன்றாகச் சாப்பிட்டு செய்திகளையும் கதைகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
மேளா பிஹு (মেলা বিহু): பிஹுவின் மூன்றாவது நாள் கலாச்சார நிகழ்வுகள் மற்றும் வெளிப்புற இடங்களில் போட்டிகளுடன் பிஹு கொண்டாட்டத்தால் குறிக்கப்படுகிறது (மேளா "சிகப்பு" என்பதைக் குறிக்கிறது). பண்டைய நாட்களில், ராஜாவும் அவரது ஊழியர்களும் பிஹு கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்காக இதுபோன்ற கண்காட்சிகள் அல்லது பிஹுடோலிகளுக்கு வெளியே வருவார்கள். இந்த நிகழ்வுகளின் பாரம்பரியம் இன்றுவரை பிஹு மேளாக்கள் அல்லது பிஹு செயல்பாடுகளுடன் தொடர்கிறது.
Seamless Wikipedia browsing. On steroids.