ஐ
தமிழ் மொழியின் 12 உயிரெழுத்துக்களில் ஒன்பதாவது எழுத்து. / From Wikipedia, the free encyclopedia
இதே பெயரில் வெளிவந்த திரைப்படம் பற்றி அறிய ஐ (திரைப்படம்) கட்டுரையைப் பார்க்க.
ஐ (ஐⓘ) தமிழ் மொழியின் எழுத்துகளில் ஒன்று. தமிழ் நெடுங்கணக்கில் இஃது ஒன்பதாவது எழுத்து. இது மொழியின் ஓர் ஒலியையும் அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "ஐகாரம்" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "ஐயன்னா" என்பது வழக்கம்.