ல் (ல்) தமிழ் மொழியின் எழுத்துகளில் ஒன்று. இது தமிழ் நெடுங்கணக்கில் இருபத்தாறாவது எழுத்து. இது மொழியின் ஓர் ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "லகர மெய்" அல்லது "லகர ஒற்று" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்து கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "இல்லன்னா" என வழங்குவர்.

விரைவான உண்மைகள் ல், தமிழ் எழுத்துக்கள் ...
Thumb
ல்
தமிழ் எழுத்துக்கள்
க்ங்ச்ஞ்ட்
ண்த்ந்ப்ம்
ய்ர்ல்வ்ழ்
ள்ற்ன்
மூடு

"ல்" இன் வகைப்பாடு

தமிழ் எழுத்துகளின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் ல் மெய்யெழுத்து வகையைச் சேர்ந்தது. மெய்யெழுத்துகள் அரை மாத்திரை அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் அரை மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்[1]

தமிழ் எழுத்துகளில் மெய்யெழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ல் இடையின மெய் வகையைச் சேர்ந்தது. இவ்வெழுத்து, வல்லினம் பிறக்கும் மார்புக்கும், மெல்லினம் பிறக்கும் மூக்குக்கும் இடைப்பட்ட இடமான கழுத்தில் பிறப்பதால் இடையின வகையுள் சேர்க்கப்பட்டுள்ளது.

இனவெழுத்துகள்

எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் எழுத்துகளை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய ஆறும் ஓரினத்தைச் சேர்ந்தவையாகக் கொள்ளப்படுகின்றன.[2].

குறிப்புகள்

உசாத்துணைகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.