ட்
தமிழ் மொழியின் பதினெட்டு மெய்யெழுத்துக்களுள், வல்லின மெய்யெழுத்துக்கள் ஆறில் ஒன்று. / From Wikipedia, the free encyclopedia
ட் (ட்ⓘ) தமிழ் மொழியின் எழுத்துகளில் ஒன்று. இது தமிழ் நெடுங்கணக்கில் பதினெட்டாவது எழுத்து. இது மொழியின் ஓர் ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "டகர மெய்" அல்லது "டகர ஒற்று" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்து கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "இட்டன்னா" என வழங்குவர்.