ஆகத்து 13 (August 13) கிரிகோரியன் ஆண்டின் 225 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 226 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 140 நாட்கள் உள்ளன.
<< | ஆகத்து 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
MMXXIV | ||||||
நிகழ்வுகள்
- கிமு 29 – உரோமைப் பேரரசன் அகத்தசு டால்மாத்திய இனத்தவரைப் போரில் வெற்றி கொண்டான்.
- 523 – ஒர்மிசுதாசின் இறப்பை அடுத்து முதலாம் யோவான் புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 582 – பைசாந்தியப் பேரரசராக மோரிசு பதவியேற்றார்.
- 1099 – இரண்டாம் அர்பனுக்குப் பின்னர் இரண்டாம் பசுக்கால் 160-வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
- 1516 – புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசு நாப்பொலியையும் பிரான்சின் முதலாம் பிரான்சிசு மிலானையும் உரிமை கொண்டாட இரு நாடுகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
- 1521 – எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் எர்னான் கோட்டெஸ் தலைமையிலான படையினர் அஸ்டெக் தலைநகரைக் கைப்பற்றினர்.
- 1532 – பிரிட்டனி தன்னாட்சிப் பிரதேசம் பிரான்சுடன் இணைக்கப்பட்டது.
- 1536 – சப்பானில் கியோத்தோவில் உள்ள என்றியாக்கு கோயிலின் பௌத்த மதகுருக்கள் அங்குள்ள 21 நிச்சிரன் பௌத்த கோயில்களைத் தீக்கிரையாக்கினர்.
- 1645 – சுவீடனும் நோர்வேயும் அமைதி உடன்பாட்டுக்கு வந்தன.
- 1704 – எசுப்பானிய மரபுரிமைப் போர்: ஆங்கிலேய மற்றும் உரோமைப் படையினர் பிரெஞ்சுப் படையினரை பிளெனைம் சமரில் வென்றனர்.
- 1792 – பிரான்சின் பதினாறாம் லூயி மன்னர் கைது செய்யப்பட்டு மக்களின் எதிரி என அறிவிக்கப்பட்டார்.
- 1806 – செர்பியப் புரட்சி: உதுமானியர்களுக்கு எதிரான மிசார் சமர் ஆரம்பமானது. இரண்டு நாட்களில் செர்பியா வெற்றி பெற்றது.
- 1814 – ஐக்கிய இராச்சியத்துக்கும் ஐக்கிய மாகாணங்களுக்கும் இடையில் இலண்டனில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன்படி நெப்போலியப் போர்களுக்கு முன்னதாக இருந்த இடச்சுக் குடியேற்றங்கள் அவர்களுக்கே திரும்பத் தரப்பட்டன.
- 1849 – யாழ்ப்பாணம் பதில் மறை மாவட்டம் நிறுவப்பட்டது.
- 1868 – பெருவின் தெற்கே அரிக்கா என்ற இடத்தில் 8.5–9.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 25,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதனை அடுத்து நிகழ்ந்த ஆழிப்பேரலையினால் அவாய், நியூசிலாந்து வரை சேதங்கள் ஏற்பட்டன.
- 1889 – நாணயங்கள் மூலம் தொலைபேசிகளைக் கட்டுப்படுத்தும் கருவி வில்லியம் கிரே என்பவரால் அமெரிக்காவில் ஹார்ட்பர்ட் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது.[1]
- 1898 – எசுப்பானிய அமெரிக்கப் போர்: எசுப்பானிய அமெரிக்கப் படைகள் மணிலாவில் போரில் ஈடுபட்டன. நகரைப் பிலிப்பீனியக் கிளர்ச்சியாளர்களின் பிடியில் சிக்க விடாமல், எசுப்பானியத் தளபதி அமெரிக்காவிடம் சரணடைந்தார்.
- 1898 – 433 ஈரோசு என்ற முதலாவது புவியருகு சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1905 – சுவீடனில் இருந்து பிரிவதற்கு ஆதரவாக நோர்வே மக்கள் வாக்களித்தனர்.
- 1913 – ஹரி பிறியர்லி என்ற ஆங்கிலேயர் துருவேறா எஃகைக் கண்டுபிடித்தார்.
- 1918 – அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவில் முதல்தடவையாகப் பெண்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
- 1920 – போலந்து–சோவியத் போர் வார்சாவாவில் ஆரம்பமாயிற்று. ஆகத்து 25 இல் முடிவடைந்த இப்போரில் சோவியத் செஞ்சேனை தோற்றது.
- 1937 – இரண்டாம் சீன-சப்பானியப் போர்: சாங்காய் சமர் ஆரம்பமானது.
- 1954 – பாக்கித்தான் வானொலி பாக்கித்தான் நாட்டுப்பண்ணை முதல் தடவையாக ஒலிபரப்பியது.
- 1960 – மத்திய ஆபிரிக்கக் குடியரசு பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1961 – பனிப்போர்: கிழக்கு செருமனி தனது குடிமக்கள் தப்பிச் செல்லாதவாறு பெர்லினின் கிழக்கு, மேற்கு எல்லையை மூடி பெர்லின் சுவரைக் கட்ட ஆரம்பித்தது.[2]
- 1964 – ஐக்கிய இராச்சியத்தில் கடைசித் தடவையாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
- 1968 – கிரேக்க அரசுத்தலைவர் கியார்கியசு பப்படப்பவுலசு மீது ஏதன்சு நகரில் கொலைமுயற்சி இடம்பெற்றது.
- 1969 – வட அயர்லாந்தில் இடம்பெற்ற அரசியல், மதக் கலவரங்களை அடக்க பிரித்தானியப் படையினர் வரவழைக்கப்பட்டனர்.
- 1969 – அப்பல்லோ 11 விண்வெளிவீரர்கள் நியூயார்க் நகரில் வெற்றி ஊர்வலம் வந்தார்கள்.[3]
- 1978 – லெபனான் உள்நாட்டுப் போரின் இரண்டாம் கட்டமாக பெய்ரூத் நகரில் 150 பாலத்தீனர்கள் தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
- 2004 – 156 கொங்கோ துட்சி அகதிகள் புருண்டியில் படுகொலை செய்யப்பட்டனர்.
- 2004 – மாலைதீவுகள் தலைநகர் மாலேயில் இடம்பெற்ற அமைதியான அரச எதிர்ப்புப் போராட்டம் இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது.
- 2004 – 28வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஏதென்சில் ஆரம்பமாயின.
- 2006 – புனித பிலிப் நேரி தேவாலயத் தாக்குதல்: யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி தேவாலயத்தின் மீது இலங்கை இராணுவத்தினரின் எறிகணை வீச்சில் 18 பேர் கொல்லப்பட்டனர், 54 பேர் காயமடைந்தனர்.
- 2008 – உருசியப் படைகள் சியார்சியாவின் கோரி நகரைக் கைப்பற்றின.
- 2010 – 380 ஆண்கள், 63 பெண்கள், 49 சிறுவர்கள் என மொத்தம் 492 இலங்கைத் தமிழ் அகதிகளுடன் எம்வி சன் சீ என்ற தாய்லாந்து சரக்குக் கப்பல் கனடாவின் பிரிட்டிசு கொலம்பியா மாகாணத்தை வந்தடைந்தது.
- 2015 – பகுதாது நகரில் சந்தை ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 76 பேர் உயிரிழந்தனர், 212 பேர் காயமடைந்தனர்.
பிறப்புகள்
- 1814 – ஆண்டர்ஸ் யோனாஸ் ஆங்ஸ்டிராம், சுவீடிய இயற்பியலாளர் (இ. 1874)
- 1819 – ஜார்ஜ் கேப்ரியல் ஸ்டோக்ஸ், ஆங்கிலேய-ஐரியக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1903)
- 1888 – ஜான் லோகி பைர்டு, தொலைக்காட்சியைக் கண்டுபிடித்த இசுக்கொட்டிய பொறியியலாளர் (இ. 1946)
- 1899 – ஆல்பிரட் ஹிட்ச்காக், ஆங்கிலேய-அமெரிக்க இயக்குநர் (இ. 1980)
- 1904 – படி ராஜர்சு, அமெரிக்க நடிகர், இசைக்கலைஞர் (இ. 1999)
- 1913 – ஸ்ரீபாத பினாகபாணி, ஆந்திரப் பிரதேச மருத்துவர், கருநாடக இசைப்பாடகர் (இ. 2013)
- 1918 – பிரடெரிக் சேங்கர், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய வேதியியலாளர் (இ. 2013)
- 1924 – டி. கே. மூர்த்தி, தமிழக மிருதங்கக் கலைஞர்
- 1926 – பிடல் காஸ்ட்ரோ, கியூபாவின் 15வது அரசுத்தலைவர், புரட்சியாளர் (இ. 2016)
- 1927 – எஸ். வரலட்சுமி, தென்னிந்திய நடிகை, பாடகி (இ. 2009)
- 1933 – வைஜயந்திமாலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை, அரசியல்வாதி
- 1946 – ஜி. எல். பீரிஸ், இலங்கை அரசியல்வாதி, பேராசிரியர்
- 1952 – பிரதாப் போத்தன், தென்னிந்திய நடிகர் (இ. 2022)
- 1963 – ஸ்ரீதேவி, இந்திய நடிகை (இ. 2018)
- 1979 – ரஞ்சித், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- 1987 – சிராபந்தி சாட்டர்ஜி, வங்காள-இந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
- 1795 – அகில்யாபாய் ஓல்கர், இந்தோர் பேரரசி (பி. 1725)
- 1826 – ரெனே லென்னக், இதயத்துடிப்பு மானியைக் கண்டுபிடித்த பிரான்சிய மருத்துவர் (பி. 1781)
- 1907 – எர்மன் கார்ல் வோகல், செருமானிய வானியற்பியலாளர் (பி. 1841)
- 1910 – புளோரன்ஸ் நைட்டிங்கேல், இத்தாலிய-ஆங்கிலேய இறையியலாளர் (பி. 1820)
- 1917 – எடுவர்டு பூக்னர், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (பி. 1860)
- 1936 – பிகாஜி காமா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1861)
- 1946 – எச். ஜி. வெல்ஸ், ஆங்கிலேய எழுத்தாளர், வரலாற்றாளர் (பி. 1866)
- 1956 – யாக்குப் கோலாசு, பெலருசிய எழுத்தாளர், கவிஞர் (பி. 1882)
- 2022 – சரோஜ் நாராயணசுவாமி, இந்தியத் தமிழ் வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1935)
சிறப்பு நாள்
- பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள்
- விடுதலை நாள் (மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, பிரான்சிடம் இருந்து 1960)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.