Remove ads
நடிகை From Wikipedia, the free encyclopedia
ஸ்ரீதேவி (Sridevi, 13 ஆகத்து 1963 - 24 பெப்ரவரி 2018) தமிழ்நாடு, விருதுநகர் மாவட்டம், மீனம்பட்டியில்[1][6] பிறந்து இந்தியத் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற ஒரு நடிகை ஆவார். 1969ல் துணைவன் திரைப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடத்தில் அறிமுகமானார்.[7]
ஸ்ரீதேவி | |
---|---|
இலக்மி ஃபேசன் வீக் 2010இல் ஸ்ரீதேவி | |
பிறப்பு | மீனம்பட்டி,[1] சிவகாசி, தமிழ்நாடு, இந்தியா | 13 ஆகத்து 1963
இறப்பு | 24 பெப்ரவரி 2018 54) துபாய், ஐக்கிய அரபு அமீரகம்[2] | (அகவை
இறப்பிற்கான காரணம் | தவறுதலாக நீரில் மூழ்குதல்[3][4][5] |
பணி | நடிகர், தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1967–2018 |
வாழ்க்கைத் துணை | போனி கபூர், (1996-2018) |
பிள்ளைகள் | ஜான்வி, குஷி |
கதாநாயகியாக இவர் நடித்த முதல் படம் கே. பாலச்சந்தரின் மூன்று முடிச்சு (1976). ஆரம்ப காலத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த்துடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்தார்.[8]
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி திரைப்படங்களில் நடித்தார். தனது நடிப்பிற்காக தமிழ் நாடு, ஆந்திர மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகளையும், கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும், நான்கு முறை பிலிம்பேர் விருதினையும் வென்றார். இது வரை 300 படங்களில் நடித்துள்ளார். இவரது கடைசி படமும் 300வது படமாகும்.
கலைத்துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இவருக்கு 2013ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
ஸ்ரீதேவி, அய்யப்பன் - இராஜேஸ்வரி தம்பதியருக்கு 13 ஆகஸ்டு 1963 அன்று சிவகாசி ஊராட்சி ஒன்றியம், அனுப்பன்குளம் ஊராட்சியில் உள்ள மீனம்பட்டி கிராமத்தில் பிறந்தவர்.[1] அவரது தங்கை லதாவின் கணவர் சஞ்சய் ராமசாமி, 1991 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[9]
2 சூன் 1996 அன்று ஸ்ரீதேவிக்கும், இந்தித் திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூருக்கும் திருமணம் நடைபெற்றது. ஸ்ரீதேவி - போனி கபூர்[10] தம்பதியருக்கு ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.[11]
ஆண்டு | திரைப்படம் | ஏற்ற வேடம் | குறிப்புகள் | |
---|---|---|---|---|
1969 | துணைவன் | முருகன் | ||
1969 | நம் நாடு | கிங் | ||
1970 | அகத்தியர் | |||
1970 | பெண் தெய்வம் | |||
1971 | பாபு | |||
1971 | யானை வளர்த்த வானம்பாடி மகன் | |||
1972 | கனிமுத்து பாப்பா | |||
1972 | மலைநாட்டு மங்கை | |||
1972 | வசந்த அறைகள் | |||
1973 | நண்பன் | |||
1973 | தெய்வ குழந்தைகள் | |||
1973 | பிரார்த்தனை | |||
1973 | பாரத விலாஸ் | |||
1974 | திருமாங்கல்யம் | |||
1974 | திருடி | |||
1974 | எங்கள் குல தெய்வம் | இளம் வள்ளி | ||
1974 | அவளுக்கு நிகர் அவளே | இளம் மீனா | ||
1976 | தசாவதாரம் | இளவரசி சீதா | ||
1976 | மூன்று முடிச்சு | செல்வி | ||
1977 | உன்னை சுற்றும் உலகம் | சீதா | ||
1977 | காயத்ரி | காயத்ரி | ||
1977 | கவிக்குயில் | ராதா | ||
1977 | 16 வயதினிலே | மயில் | ||
1977 | சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு | கவுரி | ||
1978 | இளைய ராணி ராஜலட்சுமி | |||
1978 | யமுனா கங்கா காவேரி | |||
1978 | டாக்ஸி டிரைவர் | |||
1978 | வணக்கத்திற்குரிய காதலியே | |||
1978 | இது எப்படி இருக்கு | |||
1978 | மச்சானைப் பார்த்தீங்களா | |||
1978 | மனிதரில் இத்தனை நிறங்களா | |||
1978 | முடிசூடா மன்னன் | தோற்றம் | ||
1978 | பைலட் பிரேம்நாத் | |||
1978 | சிகப்பு ரோஜாக்கள் | சாரதா | ||
1978 | ஆண்கள் | பிரியா | ||
1978 | கண்ணன் ஒரு கைக்குழந்தை | |||
1978 | ராஜாவுக்கேத்த ராணி | |||
1978 | சக்கபோடு போடு ராஜா | |||
1979 | அரும்புகள் | |||
1979 | தர்ம யுத்தம் | சித்ரா | ||
1979 | கல்யாணராமன் | கல்யாணராமன் | செண்பகம் | |
1979 | பகலில் ஒரு இரவு | சிந்து | ||
1979 | கவரிமான் | |||
1979 | நீலமலர்கள் | மீனா | ||
1979 | நான் ஒரு கை பார்க்கிறேன்' ' | |||
1979 | பட்டாக்கத்தி பைரவன் | தீபா | ||
1979 | சிகப்புக்கல் மூக்குத்தி | |||
1979 | லட்சுமி | லட்சுமி | ||
1979 | தாயில்லாமல் நானில்லை | புவனா | ||
1980 | குரு | |||
1980 | ஜானி | அர்ச்சனா | ||
1980 | வறுமையின் நிறம் சிவப்பு | தேவி | ||
1980 | விஸ்வரூபம் | |||
1981 | பால நாகம்மா | பாலா | ||
1981 | தெய்வ திருமணங்கள் | |||
1981 | சங்கர்லால் | ஹேமா | ||
1981 | மீண்டும் கோகிலா | கோகிலா | ||
1981 | ராணுவ வீரன் | |||
1982 | மூன்றாம் பிறை | பாக்கியலட்சுமி/ விஜயா / விஜி | ||
1982 | தேவியின் திருவிளையாடல் | |||
1982 | தனிக்காட்டு ராஜா | வாணி | ||
1982 | போக்கிரி ராஜா | வனஜா | ||
1982 | வாழ்வே மாயம் | தேவி | ||
1982 | வஞ்சம் | |||
1983 | அடுத்த வாரிசு | வள்ளி / ராதா | ||
1983 | சந்திப்பு | கீதா | ||
1985 | மீனாட்சியின் திருவிளையாடல் | |||
1986 | நான் அடிமை இல்லை | பிரியா | ||
1986 | ஹரே ராதா ஹரே கிருஷ்ணா | ராதா | ||
2012 | இங்கிலீஷ் விங்கிலிஷ் | சசி | ||
2015 | புலி | ராணி யுவராணி |
ஸ்ரீதேவி பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னக மொழிப் படங்களில் நடித்துப் பெரும் புகழ்பெற்ற பின்னர், 1980-களின் தொடக்கத்தில் பாலிவுட் சென்று மிகப் பெரிய வெற்றிகளைக் கண்டார். 1980-களின் தொடக்கத்தில் அவர் நடித்த இந்திப் படங்கள் மிகப் பெரிய வெற்றி பெற இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் எனப் பெயர்ப் பெற்றார். ராஜேஷ் கன்னா, தர்மேந்திரா, மிதுன் சக்கரவர்த்தி, அமிதாப் பச்சன், ரிஷிகபூர், அனில் கபூர், சல்மான் கான், சஞ்சய் தத் ஆகிய பெரும் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மிக நீண்ட காலம் பாலிவுட்டில் அவர் நடித்துவந்தார்.
2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24ஆம் நாள் சனிக்கிழமை இரவு துபாயில் மாரடைப்பு காரணமாக காலமானார் என்று செய்திகள் வெளியானது.[12] பின்னர் வெளியான பிணக்கூற்று அறிக்கை, அவர் நீரில் மூழ்கி இறந்ததாகவும், அவரது குருதியில் மதுபானம் இருந்ததாகவும் கூறியது.[13][14] உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட அவரது உடலானது பெப்ரவரி 27, 2018 அன்று தனி விமானம் மூலம் துபாயிலிருந்து மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. பின்பு இவரது உடலை பெப்ரவரி 28, 2018 அன்று மும்பையில் உள்ள வில்லே பார்லே மின்மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.[15]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.