From Wikipedia, the free encyclopedia
பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள் (International Lefthanders Day) என்பது இடது கை பழக்கம் உள்ளவர்களின் தனித்துவம் மற்றும் வேறுபாடுகளைக் கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13 அன்று அனுசரிக்கப்படும் பன்னாட்டு தினமாகும். 1976 முதல் "பன்னாட்டு இடக்கை பழக்கத்தவரின் நிறுவனத்தின்" நிறுவனர் ஆர். கேம்ப்பெல் என்பவரால் கொண்டாடப்பட்டது.[1]
பன்னாட்டு இடது கை பழக்கம் கொண்டவர்கள் தினமானது பாவத்தை கொண்டாடுவதற்கும். வலது கை அதிகம் உள்ள உலகில் இடது கையால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உருவாக்கப்பட்டது. இது இடது கை மக்களின் தனித்துவம் மற்றும் வேறுபாடுகளைக் கொண்டாடுகிறது.
உலகளாவிய ரீதியில் மொத்த மக்கள்தொகையில் 7-10 விழுக்காட்டினர் இடதுகை பழக்கமுடையோர் என கணிப்பீடுகள் குறிப்பிடுகின்றன.[2] இந்த இடதுகை பழக்கமுடையவர்கள் சிறுபான்மையாளராக இருப்பதனால் சமூகத்தில் பல்வேறு பட்ட சிரமங்களை அவர்கள் எதிர் நோக்க வேண்டி ஏற்படுகின்றது. எனவே இடது கை பழக்கம் உள்ளவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், எ.கா. இடது கை குழந்தைகளுக்கான சிறப்புத் தேவைகளின் முக்கியத்துவம் மற்றும் இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு மனப்பித்து ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த விழிப்புணர்வை இந்த நாள் பரப்புகிறது.[3][4] பல ஊடகங்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள் விடுமுறையை அங்கீகரிக்கும் வகையில் இடது கை பழக்கம் உள்ளவர்களின் ஒரு முறை பதிவுகள் மற்றும் தொகுப்புகளை செய்துள்ளன.[5][6]
இந்த இடதுகைப் பழக்கம் பிறப்பிலே சிலருக்கு ஏற்படுகின்றது. மூளையானது மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை: மூளையம், மூளி சிறுமூளை மற்றும் நீள்வளைய மையவிழையம். இவற்றில் மூளையம் (பெருமூளை) இரண்டு அரைக்கோள வடிவில் உள்ளது. இடதுபக்க அரைக்கோளம் உடலின் வலதுப்பக்க உறுப்புகளையும், வலதுப்பக்க அரைக்கோளம் உடலின் இடப்பக்க உறுப்புகளையும் இயக்குகின்றன. இதில் பெரும்பாலானோருக்கு இடப்பக்க அரைக்கோளம் சற்று மேலோங்கியதாக இருக்கும். இதனால் அவர்களுக்கு வலப்பக்க உறுப்புகள் சிறப்பாக செயல்படுகின்றன. ஆனால் ஒரு சிலருக்கு வலப்பக்க அரைக்கோளம் மேலோங்கி செயல்படுவதால் இடது கை பழக்கம் ஏற்படுகிறது.
இடக்கைப் பழக்கமுள்ள குழந்தைகளை சில பெற்றோர்கள் குழந்தைப் பருவத்திலேயே வலக்கைக்கு மாற்றுவதற்கான பிரயத்தனங்களை மேற்கொள்வர். இந்தப் பழக்கத்தை இவர்கள் மாற்ற முயற்சி செய்தால் பேச்சிலும், பார்வையிலும் குறைபாடுகள் ஏற்படலாம் என்கிறது அறிவியல்.
தனித்துவமான போக்கினைக் கொண்ட இடக்கைப் பழக்கமுள்ளோரின் செயற்பாடுகளை கௌரவிக்கவும் மானசீகமான தாக்கங்கள் ஏற்படாமல் காப்பதற்கும் இந்நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக இவர்கள் மத்தியில் போட்டி நிகழ்ச்சிகளை நடத்துவதும், கருத்தரங்குகள், கூட்டங்கள் நடத்துவது என்பன இந்நாளில் முக்கியமாக மேற்கொள்ளப்படுகின்றன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.