![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/73/Flag_of_Romania.svg/langta-640px-Flag_of_Romania.svg.png&w=640&q=50)
உருமேனியா
ஐரோப்பாவின் தென்கிழக்கு மற்றும நடுப் பகுதியிலுள்ள ஒரு நாடு. / From Wikipedia, the free encyclopedia
உருமேனியா, ரொமானியா அல்லது ரொமேனியா (România, /roʊˈmeɪniə/ (கேட்கⓘ)) என்பது ஐரோப்பாவின் நடு, கிழக்கு, தென்கிழக்குப் பகுதிகளின் குறுக்கே அமைந்துள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக, தெற்கே பல்காரியா, வடக்கே உக்ரைன், மேற்கே அங்கேரி, தென்மேற்கே செர்பியா, கிழக்கே மல்தோவா ஆகிய நாடுகளும் தென்கிழக்கே கருங்கடலும் அமைந்துள்ளன. இது முக்கியமாக மிதவெப்ப-கண்டக் காலநிலையையும், 238,397 சதுர கிமீ பரப்பளவையும் கொண்டுள்ளது. இங்கு கிட்டத்தட்ட 19 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்[3]. உருமேனியா ஐரோப்பாவின் 12-ஆவது பெரிய நாடும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆறாவது மக்கள்தொகை கொண்ட உறுப்பு நாடும் ஆகும். புக்கரெஸ்ட் இதன் தலைநகரும், மிகப் பெரிய நகரமும் ஆகும், உருமேனியா ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ, ஐரோப்பியப் பேரவை, உலக வணிக அமைப்பு ஆகிய அமைப்புகளில் உறுப்புரிமையைக் கொண்டுள்ளது.
உருமேனியா România | |
---|---|
நாட்டுப்பண்: "Deșteaptă-te, române!" ("எழுந்திரு, உருமானியனே!") | |
அமைவிடம்: உருமேனியா (dark green) – ஐரோப்பியக் கண்டத்தில் (light green & dark grey) | |
தலைநகரம் | புக்கரெஸ்ட் 44°25′N 26°06′E |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) | உருமேனியம்[1] |
அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை மொழிகள்[2] | |
இனக் குழுகள் (2022)[3] |
|
சமயம் (2022)[3] |
|
மக்கள் | உருமேனியன் |
அரசாங்கம் | ஒருமுக அரை-சனாதிபதி குடியரசு |
• அரசுத்தலைவர் | கிளாசு யோகன்னிசு |
• பிரதமர் | நிக்கொலாய் சியூக்கா |
சட்டமன்றம் | நாடாளுமன்றம் |
• மேலவை | மேலவை |
• கீழவை | பிரதிநிதிகள் சபை |
நிறுவிய வரலாறு | |
• உரொமான் தாக்கியா | 106 |
1330 | |
• மல்தாவியா | 1346 |
1570 | |
• இணைப்பு | 24 சனவரி 1859 |
• உதுமானியப் பேரரசில் இருந்து விடுதலை | 9 மே 1877/1878 |
• பாரிய உருமேனியா | 1918/1920 |
• இராணுவ சர்வாதிகாரம் | 1941 |
• கம்யூனிச உருமேனியா | 30 திசம்பர் 1947 |
• இன்றைய அரசு | 27 திசம்பர் 1989[4][5][6] |
• அரசமைப்பு | 8 திசம்பர் 1991 |
• ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு | 1 சனவரி 2007 |
பரப்பு | |
• மொத்தம் | 238,397 km2 (92,046 sq mi) (81-வது) |
• நீர் (%) | 3 |
மக்கள் தொகை | |
• 2022 கணக்கெடுப்பு | ![]() |
• அடர்த்தி | 79.9/km2 (206.9/sq mi) (136-ஆவது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2022 மதிப்பீடு |
• மொத்தம் | ![]() |
• தலைவிகிதம் | ![]() |
மொ.உ.உ. (பெயரளவு) | 2022 மதிப்பீடு |
• மொத்தம் | ![]() |
• தலைவிகிதம் | ![]() |
ஜினி (2021) | ![]() மத்திமம் |
மமேசு (2022) | ![]() அதியுயர் · 49-ஆவது |
நாணயம் | ரொமேனிய லியு (RON) |
நேர வலயம் | ஒ.அ.நே+2 (கி.ஐ.நே) |
ஒ.அ.நே+3 (கோடை கி.ஐ.நே) | |
திகதி அமைப்பு | நாநா.மாமா.ஆஆஆஆ (கிபி) |
வாகனம் செலுத்தல் | வலது |
அழைப்புக்குறி | +40 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | RO |
இணையக் குறி | .roa |
|
ஐரோப்பாவின் இரண்டாவது நீளமான ஆறு தனியூப், செருமனியின் கறுப்புக் காட்டுப் பகுதியில் உருவாகி தென்கிழக்கே 1,857 கிமீ பாய்ந்து உருமேனியாவின் தன்யூப் டெல்ட்டா பகுதியில் கலக்கிறது. 2,544 மீ (8,346 அடி) உயரத்தில் உள்ள மால்டோவேனு சிகரத்தை உள்ளடக்கிய கார்பேத்திய மலைகள் உருமேனியாவை வடக்கிலிருந்து தென்மேற்காகக் கடக்கிறது.[10]
இப்போதுள்ள உருமேனியாவின் குடியேற்றம் டாச்சியா இராச்சியத்தைக் கைப்பற்றல், உரோமைப் பேரரசால் இலத்தீன்-மயமாக்கல் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் எழுத்துப் பதிவுகளுடன், பழைய கற்காலப் பகுதியில் தொடங்கியது. நவீன உருமேனிய அரசு 1859-இல் மால்தாவியா, வலாச்சியா ஆகியவற்றின் தனூபிய ஆட்சியாளர்களின் விரும்பிய ஒன்றிணைப்புடன் உருவாக்கப்பட்டது. 1866 முதல் உருமேனியா என்று அதிகாரபூர்வமாகப் பெயரிடப்பட்ட புதிய நாடு, உதுமானியப் பேரரசிடம் இருந்து 1877 இல் விடுதலை பெற்றது. முதலாம் உலகப் போர்க் காலத்தில், 1914 இல் நடுநிலையை அறிவித்த உருமேனியா, 1916 முதல் நேச நாடுகளுடன் இணைந்து போரிட்டது. போருக்குப் பின், புக்கோவினா, பெசராபியா, திரான்சில்வேனியா, பனாத்தின் சில பகுதிகள், கிறிசானா போன்ற பகுதிகள் உருமேனியா இராச்சியத்தின் பகுதிகளாயின.[11] 1940 சூன்-ஆகத்து காலப் பகுதியில், மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தத்தின் படி பெசராபியா, வடக்கு புக்கோவினா ஆகியவை சோவியத் ஒன்றியத்திடமும், வடக்கு திரான்சில்வானியாவை அங்கேரிக்கும் கொடுக்க வேண்டி வந்தது. 1940 நவம்பரில், உருமேனியா முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, 1941 சூனில் இரண்டாம் உலகப் போரில் இறங்கி அச்சு நாடுகளுடன் இணைந்து 1944 ஆகத்து வரை சோவியதிற்கு எதிராகப் போரிட்டது. 1944 இல் அது நேச நாடுகளுடன் இணைந்து போரிட்டு, வடக்கு திரான்சில்வேனியாவை மீண்டும் தனதாக்கிக் கொண்டது. போரின் முடிவில், செஞ்சேனை உருமேனியாவை ஆக்கிரமித்ததை அடுத்து, அது சோசலிசக் குடியரசாகத் தன்னை அறிவித்து, வார்சா உடன்பாட்டின் ஓர் உறுப்பு நாடாகியது. 1989 புரட்சியை அடுத்து, அது மக்களாட்சிக்கும், சந்தைப் பொருளாதாரத்திற்கும் மாற்றமடையத் தொடங்கியது.
உருமேனியா அதிக வருமானப் பொருளாதாரத்தைக் கொண்ட ஒரு வளரும் நாடு ஆகும்.[12] மனித வளர்ச்சிக் குறியீட்டில் 53வது இடத்தில் உள்ளது. இது பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலகின் 47வது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. 2000களின் முற்பகுதியில் உருமேனியா விரைவான பொருளாதார வளர்ச்சியைக் கண்டது; இதன் பொருளாதாரம் இப்போது முக்கியமாக சேவைகளை அடிப்படையாகக் கொண்டதாகும். டாச்சியா தானுந்து, பெட்ரொம் எண்ணெய் கம்பனி போன்ற நிறுவனங்கள் மூலம், இயந்திரங்கள், மற்றும் மின்னாற்றலை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருகிறது. உருமேனியா 1955 முதல் ஐக்கிய நாடுகள் அமைப்பிலும், 2004 முதல் நேட்டோவிலும், 2007 முதல் ஐரோப்பிய ஒன்றியத்திலும் உறுப்பு நாடாக உள்ளது. உருமேனியாவின் பெரும்பான்மை மக்கள் உருமேனிய இனத்தைச் சேர்ந்த, கிழக்கு மரபுவழிக் கிறித்தவர்கள் ஆவர். அவர்கள் உரோமானிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த உருமானிய மொழியைப் பேசுகின்றனர்.