அச்சு நாடுகள்
இரண்டாம் உலகப் போரின் போதான நாடுகளின் கூட்டணி / From Wikipedia, the free encyclopedia
அச்சு அணி நாடுகள் (Axis powers) முதலில் ரோம்-பெர்லின் அச்சு நாடுகள் என்று அழைக்கப்பட்டது. [1] இது இரண்டாம் உலகப் போரின் போது நட்பு அணி நாடுகளை எதிர்த்த நாடுகள் ஆகும். ஜெர்மனி, இத்தாலி, மற்றும் ஜப்பான் அரசு ஆகியவை முதன்மையான அச்சு நாடுகள் ஆகும். இந்நாடுகள் ஒரு நேரத்தில் ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் ஆசியா-பசிபிக் ஆகியவற்றின் பெரும்பாலான பகுதிகளில் மேலோங்கியிருந்தன. ஆனால் போரின் முடிவில் அச்சு அணி நாடுகள் பெரும் தோல்வியை அடைந்தன. நட்பு அணி நாடுகளைப் போலவே இக்கூட்டணியிலும் சில நாடுகள் போர் நடைபெற்ற நேரத்தில் சேர்வதும் விலகுவதுமாக இருந்தன.