இத்தாலி
ஐரோப்பிய நாடு / From Wikipedia, the free encyclopedia
இத்தாலியக் குடியரசு அல்லது இத்தாலி (இத்தாலிய மொழி: Repubblica Italiana அல்லது Italia - இட்டாலியா) தெற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. இதன் நிலப்பகுதியானது கால்பாதம் போன்ற தீபகற்பப் பகுதியையும், மத்திய தரைக் கடல் பகுதிகளான சிசிலி மற்றும் சார்தீனியா என்ற தீவுப்பகுதிகளையும் கொண்டதாகும். இத்தாலியின் வடக்கே ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, சிலவேனியா ஆகிய நாடுகள் எல்லைகளாகவும் அமைந்துள்ளன. சான் மேரினோ மற்றும் வத்திக்கான் நகர் என்ற இரு தனி நாடுகளும், இத்தாலியின் நிலப்பகுதிக்குள் அமைந்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம், ஜி8, ஜி20 ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது. உலகில் வாழ்வதற்கு ஏற்ற நாடுகளில் முதன்மையான நாடுகளில் இதுவும் ஒன்று. இத்தாலியின் தலைநகரான உரோம் நகரம் மேற்கத்தியக் கலாச்சாரத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியுள்ளது.
விரைவான உண்மைகள் இத்தாலியக் குடியரசுRepubblica Italiana, தலைநகரம் ...
இத்தாலியக் குடியரசு Repubblica Italiana | |
---|---|
நாட்டுப்பண்: Il Canto degli Italiani | |
தலைநகரம் | ரோம் |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) | இத்தாலிய மொழி |
மக்கள் | இத்தாலியன் |
அரசாங்கம் | நாடாளுமன்றக் குடியரசு |
• குடியரசுத் தலைவர் | செர்சியோ மத்தெரெல்லா |
• தலைமை அமைச்சர் | ஜியோர்ஜியா மெலோனி |
இத்தாலியக் கூட்டு | |
• இத்தாலியக் கூட்டு | மார்ச் 17 1861 |
• குடியரசு | ஜூன் 2 1946 |
பரப்பு | |
• மொத்தம் | 301,318 km2 (116,340 sq mi) (71வது) |
• நீர் (%) | 2.4 |
மக்கள் தொகை | |
• 2006 மதிப்பிடு | 59,131,287 [1] (23வது) |
• அக்டோபர் 2001 கணக்கெடுப்பு | 57,110,144 |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2006 மதிப்பீடு |
• மொத்தம் | $1.956 திரிலியன் (8வது) |
• தலைவிகிதம் | $31,200 (20வது) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2006 மதிப்பீடு |
• மொத்தம் | $1.885 திரிலியன் (7வது) |
• தலைவிகிதம் | $33,680 (21வது) |
ஜினி (2000) | 36 மத்திமம் |
மமேசு (2004) | 0.940 அதியுயர் · 17வது |
நாணயம் | யூரோ (€)1 (EUR) |
நேர வலயம் | ஒ.அ.நே+1 (மஐநே) |
ஒ.அ.நே+2 (மஐகோநே) | |
அழைப்புக்குறி | 39 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | IT |
இணையக் குறி | .it2 |
|
மூடு