ஐரோ
ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள 12 நாடுகளில் பயன்படுத்தப்படும் நாணய முறை / From Wikipedia, the free encyclopedia
ஐரோ அல்லது யூரோ (Euro) என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் பயன்படுத்தப்படும் நாணய முறையாகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 28 நாடுகளில், 19 நாடுகள் (ஐரோ வலய நாடுகள்) யூரோவை அதிகாரபூர்வ நாணயமாக கொண்டுள்ளன. ஆஸ்திரியா, சைப்ரஸ், எசுத்தோனியா, பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பேர்க், மால்ட்டா, நெதர்லாந்து, போர்த்துக்கல், சிலோவேக்கியா, சுலோவீனியா, ஸ்பெயின் ஆகியவை இந்த 18 நாடுகளாகும்.[1] இந்நாணயம் ஒரு நாளில் 334 மில்லியன் ஐரோப்பியர்களால் பயன்படுத்தப்படுகிறது.[2] மேலும் உலகெங்கும் 210 மில்லியன் மக்கள் யூரோவுடன் தொடர்புடய நாணயத்தை பயன்படுத்துகிறார்கள். "யூரோ" என்னும் வார்த்தை திசம்பர் 16,1995ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
ευρώ (கிரேக்கம்), евро (சிரில்லிக்) | |
---|---|
வங்கித் தாள்கள் | |
ஐ.எசு.ஓ 4217 | |
குறி | வார்ப்புரு:ISO 4217/maintenance-category |
சிற்றலகு | 0.01 |
அலகு | |
குறியீடு | € |
மதிப்பு | |
துணை அலகு | |
1/100 | சதம் |
வங்கித்தாள் | |
அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்) | €5, €10, €20, €50 |
அரிதாக பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்) | €100, €200, €500 |
உலோக நாணயம் | |
அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் உலோக நாணயம்(கள்) | 1, 2, 5 ,10, 20, 50 சென்ட் நாணயம், €1, €2 |
அரிதாக பயன்படுத்தப்படப்படும் உலோக நாணயம்(கள்) | 1 சென்ட் மற்றும் 2 சென்ட் (பின்லாந்து மற்றும் நெதர்லந்து நாட்டில் மட்டும்) |
மக்கள்தொகையியல் | |
பயனர்(கள்) | ஐரோப்பிய ஒன்றியம்; ஆஸ்திரியா, பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பேர்க், நெதர்லாந்து, போர்த்துகல், ஸ்பெயின், அண்டோரா, மொனாக்கோ, சான் மரீனோ, வாட்டிகன் நகரம், மொண்டெனேகுரோ, கொசோவோ. |
வெளியீடு | |
நடுவண் வங்கி | ஐரோப்பிய மத்திய வங்கி |
இணையதளம் | www.ecb.int |
மதிப்பீடு | |
பணவீக்கம் | 1.4%, திசம்பர் 2012 |
ஆதாரம் | ஐரோ வலயம், May 2005 |
1999ம் ஆண்டு சட்டரீதியாக உருவாக்கப்பட்ட இந்த நாணய முறை, 2002ம் ஆண்டு வரை மின் அஞ்சல் முறைப் பணம் பட்டுவாடா செய்யமட்டுமே உபயோகபப்படுத்தப்படது. பின்னர் 2002ம் ஆண்டு, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களின் பழைய நாணய முறையை ஒழித்து, ஐரோ நாணய முறையை பயன்படுத்தத் தொடங்கியது.அமெரிக்க டாலருக்கு அடுத்தபடியாக உலகளவில் அதிகப்படியான மக்களால் பயன்படுத்தப்படும் நாணயம் யூரோ ஆகும். €942 பில்லியன் யூரோ அளவில் உலகில் அதிகப்படியான வங்கிப்பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.உலகில் இரண்டாவது பொருளாதார பலம் பொருந்தியதாக யூரோ வலயம் உள்ளது.