வடக்கு அத்திலாந்திக்கிலுள்ள ஒரு தீவு From Wikipedia, the free encyclopedia
அயர்லாந்து ஐரோப்பாக் கண்டத்தின் வடமேற்குப்பகுதியிலுள்ள ஒரு தீவு ஆகும். இதன் மேற்குப் பகுதியில் அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது. இது ஐரோப்பாவின் மூன்றாவது பெரிய தீவும் உலகின் இருபதாவது பெரிய தீவும் ஆகும். இதன் கிழக்கே பிரித்தானியாவின் பெரியதீவு உள்ளது. இவையிரண்டும் ஐரியக் கடலால் பிரிக்கப்பட்டுள்ளன.
வடமேற்கு ஐரோப்பா கண்டம், கிழக்கே பெரிய பிரித்தானியா. | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | மேற்கு ஐரோப்பா |
உயர்ந்த புள்ளி | கரண்ட்டூஹில் |
நிர்வாகம் | |
அயர்லாந்து குடியரசு | |
பெரிய குடியிருப்பு | டப்ளின் |
ஐக்கிய இராச்சியம் | |
ஆட்சிப் பிரிவு | வட அயர்லாந்து |
Largest settlement | பெல்பாஸ்ட் |
மக்கள் | |
மக்கள்தொகை | அண்ணளவாக 6 மில்லியன் (2007 தரவுகள்) |
இனக்குழுக்கள் | ஐரிஷ் |
அரசியல் ரீதியாக அயர்லாந்து தீவு இரண்டு வெவ்வேறு ஆட்சிகளை உடைய பிரிவுகளைக் கொண்டுள்ளது:
தீவின் 5/6 பங்கில் அயர்லாந்துக் குடியரசு அமைந்துள்ளது. தீவின் வடகிழக்கே வட அயர்லாந்து அமைந்துள்ளது. அயர்லாந்தின் மக்கள் தொகை 6.4 மில்லியன். இதில் அயர்லாந்துக் குடியரசில் 4.6 மில்லியன் பேரும், வட அயர்லாந்தில் 1.8 மில்லியன் பேரும் உள்ளனர்..[2]
சார்பளவில் உயரங் குறைந்த மலைகள் மத்தியிலுள்ள சமதரையைச் சூழக் காணப்படுகின்றன. அத்துடன் சில பயணிக்கத்தக்க ஆறுகளும் காணப்படுகின்றன. உயர்வு இல்லாத காலநிலையின் காரணமாக இதன் காலநிலை மெல்லிய மாறக்கூடிய கடல்சார் காலநிலையைக் கொண்டுள்ளது. 17ம் நூற்றாண்டு வரையில் இங்கு அடர்த்தியான காடுகள் அமைந்திருந்தன. இன்று இது ஐரோப்பாவில் மிக அதிகளவில் காடழிக்கப்படும் பிரதேசங்களில் ஒன்றாக உள்ளது.[3][4] 26 பாலூட்டி விலங்குகள் அயர்லாந்தை தாயகமாகக் கொண்டுள்ளன.
ஐரியக் கலாசாரம் ஏனைய கலாசாரங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. இவற்றுள் இலக்கியத் துறையிலான தாக்கம் மிக அதிகமாகும். மேலும் விஞ்ஞானம் மற்றும் கல்வி ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும் பண்டைய கலாசாரங்கள் இங்கு இன்னும் காணப்படுகின்றன. கேலிய விளையாட்டுக்கள், ஐரிய இசை, மற்றும் ஐரிய மொழி ஆகியன இங்கு இன்னும் காணப்படுவதே இதற்குச் சான்றாகும். இவை தவிர மேற்கத்திய கலாசாரத்திலமைந்த இசை மற்றும் நாடகம் போன்றனவும், பெரிய பிரித்தானியாவுடனான பகிரப்பட்ட கலாசாரங்களான, கால்பந்து, ரக்பி, குதிரைச் சவாரி மற்றும் கோல்ஃப் போன்ற விளையாட்டுக்களும், ஆங்கில மொழியும் இங்கு காணப்படுகின்றன.
அயர்லாந்துத் தீவு ஐரோப்பாவின் வட மேற்கே, அகலாங்குகள் 51° மற்றும் 56° N இடையேயும், நெட்டாங்குகள் 11° மற்றும் 5° W இடையேயும் அமைந்துள்ளது. இது அதன் பக்கத்திலுள்ள பெரிய பிரித்தானியத் தீவுகளிலிருந்து ஐரியக் கடலாலும், அதன் ஒடுங்கிய புள்ளியில் 23 கிலோமீட்டர்கள் (14 mi)[5] அகலமுள்ள வடக்குக் கால்வாயாலும் பிரிக்கப்பட்டுள்ளது.அயர்லாந்தின் மேற்கே வட அத்திலாந்திக் கடலும், தெற்கே, செல்டிக் கடலும் எல்லைகளாக உள்ளன. செல்டிக் கடல் பிரான்சின் பிரிட்டனிக்கும் அயர்லாந்துக்கும் இடையே உள்ளது. அயர்லாந்து, பெரிய பிரித்தானியா மற்றும் அதனோடிணைந்த தீவுகள் ஒன்றாக பிரித்தானியத் தீவுகள் என அழைக்கப்படுகின்றன. பிரித்தானியத் தீவுகள் என்ற பெயரை அயர்லாந்து விரும்பாமை காரணமாக சிலவேளைகளில் அயர்லாந்து மற்றும் பிரித்தானியா என்ற நடுநிலைப் பதம் பயன்படுத்தப்படுகிறது.
வளைய வடிவிலான கரையோர மலைகளால் சூழப்பட்ட தாழ்நிலங்கள் நாட்டின் மத்திய பகுதியில் காணப்படுகின்றன.இவற்றுள் மிக உயரமானது,கெரி கவுன்டியிலுள்ள கரன்டூஹில் எனும் மலையாகும். இது கடல் மட்டத்துக்கு மேலே 1,038 m (3,406 அடி) உயரமுடையது.[6] இவற்றுள் மிகவும் வளமான நிலப்பகுதி லியின்ஸ்டர் மாகாணத்தில் உள்ளது.[7] மேற்குப் பகுதியிலுள்ள நிலப்பகுதி மலைப்பாங்கானதாகவும் பாறைகள் உள்ளதாகவும் காணப்படுவதோடு அகன்ற புல் நிலங்களும் காணப்படுகின்றன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.