![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/65/Flag_of_Belgium.svg/langta-640px-Flag_of_Belgium.svg.png&w=640&q=50)
பெல்ஜியம்
மேற்கு ஐரோப்பிய நாடு / From Wikipedia, the free encyclopedia
பெல்ஜியம் (/ˈbɛldʒəm/ (கேட்கⓘ) BEL-jəm; டச்சு: België; பிரென்சு: Belgique; ஜெர்மன்: Belgien) (அதிகாரப்பூர்வமாக பெல்ஜிய பேரரசு) மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவன உறுப்பினர் ஆகும். இதன் தலைநகரான பிரஸ்ஸல்ஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகமாக மட்டுமன்றி, நேட்டோ போன்ற பல முக்கிய சர்வதேச அமைப்புக்களின் தலைமையகமாகவும் உள்ளது. பெல்ஜியத்தின் பரப்பளவு 30,528 சதுர கிலோமீட்டர் (11,787 சதுர மைல்) மற்றும் இதன் மக்கள்தொகை 11 மில்லியன் ஆகும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பெல்ஜியம் இராச்சியம் | |
---|---|
குறிக்கோள்: Eendracht maakt macht (டச்சு) L'union fait la force" (பிரெஞ்சு) Einigkeit macht stark (ஜெர்மன்) "ஒன்றியத்திலிருந்து பலம்" | |
நாட்டுப்பண்: த "பிராபன்சொன்" | |
![]() ஐரோப்பாவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் பெல்ஜியத்தின் இடம் | |
தலைநகரம் | பிரசெல்சு |
பெரிய மிகப்பெரிய மாநகராட்சி | பிரசெல்சு தலைநகரப் பகுதி |
ஆட்சி மொழி(கள்) | டச்சு, பிரெஞ்சு, ஜெர்மன் |
மக்கள் | பெல்ஜியன் |
அரசாங்கம் | நாடாளுமன்ற மக்களாட்சி, அரசியலமைப்புச்சட்ட முடியாட்சி |
• அரசர் | ஆல்பர்ட் II |
• பிரதமர் | எலியோ டி ரூபோ |
விடுதலை | |
• கூற்றம் | அக்டோபர் 4 1830 |
• திட்டப்படம் | ஏப்ரல் 19 1839 |
பரப்பு | |
• மொத்தம் | 30,528 km2 (11,787 sq mi) (139th) |
• நீர் (%) | 6.4 |
மக்கள் தொகை | |
• 2007 மதிப்பிடு | 11,007,020 (76வது [2005]) |
• 2001 கணக்கெடுப்பு | 10,296,350 |
• அடர்த்தி | 344.32/km2 (891.8/sq mi) (2006) (29th [2005]) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2018 மதிப்பீடு |
• மொத்தம் | $550 பில்லியன் (38வது) |
• தலைவிகிதம் | $$48,224 (17வது) |
ஜினி (2000) | 33 மத்திமம் · 33வது |
மமேசு (2005) | ![]() Error: Invalid HDI value · 17வது |
நாணயம் | ஐரோ (€)1 (EUR) |
நேர வலயம் | ஒ.அ.நே+1 (CET) |
ஒ.அ.நே+2 (CEST) | |
அழைப்புக்குறி | 32 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | BE |
இணையக் குறி | .be |
|
ஜெர்மானிய மற்றும் இலத்தீன்-ஐரோப்பிய கலாச்சார எல்லைகளுக்கு இடையே விரிந்திருக்கும் பெல்ஜியத்தில், பெரும்பான்மையாக டச்சு மொழி பேசும் ஃபிளம்மியர்கள் 60 சதவீதமும், பிரெஞ்சு மொழி பேசும் வலோனியர்கள் 40 சதவீதமும் இருந்தாலும், மிகச்சிறிய அளவில் ஜெர்மன் மொழியும் பேசப்பட்டு வருகிறது. எனவே தான், பெல்ஜியத்தில் டச்சு, பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் ஆகிய மொழிகள் அலுவல் மொழிகளாக உள்ளன. டச்சு மொழி பேசும் ஃபிளம்மியர்கள் வசிக்கும் வடக்கு பிராந்தியம் ஃப்ளாண்டர்ஸ் என்றும் பிரெஞ்சு மொழி பேசும் வலோனியர்கள் வசிக்கும் தெற்கு பிராந்தியம் வலோனியா என்றும் அழைக்கப்படுகிறது. ஜெர்மானிய மொழி பேசும் சமூகம் கிழக்கு வலோனிய பகுதியில் வசித்து வருகின்றனர். பிரஸ்ஸல்ஸ்-தலை நகர பகுதியானது, ஃபிளம்மிய எல்லைக்குட்பட்ட பகுதியாக இருந்தாலும், இங்கு பெரும்பாலானோர் பிரெஞ்சு மொழியே பேசுகின்றனர். எனவே, டச்சு மற்றும் பிரெஞ்சு ஆகிய இரண்டு மொழிகளுமே அதிகார மொழிகளாக உள்ளன.