உலகில் தோன்றிய மிகப்பழமையான முதல் மூத்த மொழி. எழுத்து வடிவம் தந்த முதல் மொழி From Wikipedia, the free encyclopedia
கிரேக்க மொழி அல்லது கிரேக்கு அல்லது எல்லினிக்கா (Greek) என்பது கிரீசு நாட்டுக்கும் கிழக்கு மத்தியதரைக் கடலின் மற்ற பகுதிகளுக்கும் சொந்தமான இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்திலுள்ள தற்சார்புடைய ஒரு கிளை மொழியாகும். உலகில் தோன்றிய உலகின் முதல் மூத்த மொழிகளில் கிரேக்கமும் ஒன்று ஆகும். உலகில் மனிதன் தோன்றிய ஆப்பிரிக்க கண்டத்தில் மாந்தன் பேசிய மொழி கிரேக்கம். ஏறத்தாழ 6,746 ஆண்டுகள் வரலாறு கொண்ட தொன்மையான மொழி கிரேக்க மொழியாகும். வாழும் இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்திலேயே மிகநெடிய வரலாறு கொண்ட மொழியும் கிரேக்க மொழியேயாகும். மேலும் இம்மொழியில் 74 நுற்றாண்டுகளாக எழுதப்பட்ட ஆவணங்கள் உள்ளன.[2]. இம்மொழியின் எழுத்து முறை கிரேக்க மொழி எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இலீனியர் பி மற்றும் சைப்ரியாட் அசையெழுத்துகள் போன்ற பிற எழுத்துமுறை அமைப்புகள் முற்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன [3].
கிரேக்கம் (எல்லினிக்கா) | |
---|---|
Ελληνικά Εlliniká | |
நாடு(கள்) | கிரீசு, சைப்பிரசு, அல்பேனியா, பல்கேரியா, மாசிடோனியா, இத்தாலி, துருக்கி, ஆர்மேனியா, சியார்ச்சியா, உக்ரைன், மால்டோவா, ருமேனியா, உருசியா, எகிப்து, சோர்தான், தென் ஆப்பிரிக்கா, கசக்குத்தான், பிரான்சு, புலம்பெயர் கிரேக்கர் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 15 மில்லியன்[1] (date missing) |
இந்தோ-ஐரோப்பிய
| |
கிரேக்க அகரவரிசை | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | கிரேக்க நாடு சைப்பிரசு ஐரோப்பிய ஒன்றியம் சிறுபான்மை மொழியாக அறியப்பட்ட நாடுகள்: அல்பேனியா இத்தாலி துருக்கி |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | el |
ISO 639-2 | gre (B) ell (T) |
ISO 639-3 | Either: grc — பழைய கிரேக்கம் ell — தற்கால கிரேக்கம் |
கிரேக்க எழுத்துக்கள் பினீசிய எழுத்துக்களிலிருந்து உருவானவையாகும். இலத்தீன், சிரிலிக், ஆர்மீனியன், காப்டிக், கோதிக் மற்றும் இது போன்ற பல எழுத்து முறை எழுத்தமைப்புகளுக்கும் இதுவே அடிப்படையாக அமைந்தது. மேற்கத்திய உலகம் மற்றும் கிறித்துவம் ஆகியவற்றின் வரலாற்றில் கிரேக்க மொழி ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இலியட் , ஒடிசி போன்ற மேற்கத்திய காவியங்களின் நெறிமுறைகள் பண்டைய கிரேக்க இலக்கியத்தில் அடங்கியுள்ளன. விஞ்ஞானம், வானியல், கணிதம், தர்க்கம், அடித்தள உரையாடல்கள் போன்ற மேற்கத்திய தத்துவம் அரிசுடாட்டிலின் படைப்புகள் போன்றவற்றை எல்லாம் தொகுக்கவும் கிரேக்க மொழி ஏற்புடையதாக உள்ளது. கிறித்துவ விவிலியத்தின் புதிய ஏற்பாடு கிரேக்கத்திப் கொய்யென் மொழியில் எழுதப்பட்டது. உரோமானிய உலகின் மரபுகளுடன் இலத்தீன் எழுத்துகளையும் சேர்த்து, கிரேக்க நூல்களையும் பழங்கால சமுதாயத்தையும் ஆய்வு செய்வதே பாரம்பரிய ஒழுக்கமாகும்.
தொல்பழங்காலத்தின்போது மத்தியதரைக் கடல் உலகிலும் அதற்கு அப்பால் இருந்த பல இடங்களிலும் கிரேக்க மொழி பரவலாக ஓர் இணைப்பு மொழியாகப் பேசப்பட்டது. இறுதியாக இம்மொழி பைசான்டைன் பேரரசின் அதிகாரப்பூர்வ பேச்சுமொழிப் பாணியாக இடைக்கால கிரேக்கத்திற்குள் உருவானது [4]. கிரீசு, சைப்ரசு ஆகிய இரண்டு நாடுகளுக்கு கிரேக்கமொழி அதன் நவீன வடிவத்தில் அலுவலக மொழியாக விளங்குகிறது. ஏழு நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ள சிறுபான்மை மொழியாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 24 அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக இடம்பிடித்தும் சிறப்புப் பெற்றுள்ளது. கிரேக்க மொழி உலக அளவில் சைப்ரசு, இத்தாலி, அல்பேனியா, துருக்கி போன்ற நாடுகளில் வாழும் மக்கள் மற்றும் கிரேக்க புலம்பெயர்ந்தோர் என இன்று 13.2 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.
கிரேக்க மொழியின் வேர்கள் பெரும்பாலும் பிற மொழிகளுக்கு புதிய சொற்களைத் தருகின்றன. கிரேக்கமும் இலத்தீனும் சர்வதேச அறிவியல் சொற்களுக்கு முக்கிய ஆதாரங்களாக இருக்கின்றன.
சுமார் கி.மு. மூவாயிரம் ஆண்டுகள்[5] அல்லது அதற்கு முன்னரே[6] பால்கன் குடாவில் கிரேக்க மொழி பேசப்பட்டது. கிரேக்க மொழியின் மிகப்பழைய அசையெழுத்து வடிவம் கிரேக்கத்தின் மெசேனியாவில் கண்டெடுக்கப்பட்டது. இதன் காலம் கி.மு 1450 இற்கும் 1350 இற்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்[7]. இதனடிப்படையில் எழுத்துச் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்ட ஆகப்பழைய வாழும் மொழியாகக் கிரேக்க மொழி அமைகிறது. இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் கிரேக்க மொழியின் தொன்மைக்கு சான்றாகக் கிடைத்துள்ள எழுத்துப்பூர்வ ஆவனம் இப்போது அழிந்துவரும் அனடோலியன் மொழிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
மரபு வழியில் கிரேக்க மொழி பின்வரும் காலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
கிரேக்க மொழி சுமார் 13 மில்லியன் மக்களால் பேசப்படுகின்றது. இவர்களில் பெரும்பான்மயோர் கிரேக்கம், அல்பேனியா, சைப்பிரசு ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். புலம்பெயர் கிரேக்கர்களாலும் கிரேக்கம் பேசப்படுகிறது. பாரம்பரிய கிரேக்கக் குடியேற்றங்கள், அல்பேனியா, பல்கேரியா, துருக்கி ஆகிய நாடுகளின் எல்லைப்புறங்களிலும் கருங்கடல் பகுதி நாடுகளான உக்ரைன், இரசியா, உரோமானியா, சியார்சியா, ஆர்மேனியா, அசர்பைசான் ஆகிய நாடுகளிலும் மத்திய தரைக்கடலை அண்டிய தென் இத்தாலி, சிரியா, இஸ்ரேல், எகிப்து, லெபனான், லிபியா ஆகிய நாடுகளிலும் காணப்படுகின்றன. மேலும் ஐக்கிய இராச்சியம், செருமனி, கனடா, ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஆர்ஜென்டீனா, பிரேசில், சிலி மற்றும் தென்னாபிரிக்கா நாடுகளில் கிரேக்க மொழி பேசும் புலம்பெயர் கிரேக்கர்கள் வாழ்கின்றனர்.
கிரேக்க மொழி கிரேக்க நாட்டில் அலுவல் மொழியாக உள்ளது. இது ஏறத்தாழ கிரேக்கத்தின் மொத்தச் சனத்தொகையாலும் பேசப்படுகிறது[9]. மேலும் இது துருக்கி மொழியுடன் இணைந்து சைப்பிரசு நாட்டின் அலுவல் மொழியாகவும் உள்ளது[10]. இவ்விரு நாடுகளும் உறுப்பினர்களாக உள்ளதால் ஐரோப்பிய ஒன்றியத்தின் 24 அலுவல் மொழிகளில் ஒன்றாகவும் உள்ளது[11]. இத்தாலியின் சில பகுதிகளிலும் அல்பேனியாவிலும் இது சிறுபான்மையின மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
நவீன சகாப்தத்தில் கிரேக்க மொழியானது இரட்டைநடை வழக்கிற்குள் நுழைந்தது. பேச்சு மொழியியல் நிலைத்தும் எழுத்து மொழி வழக்கொழிந்தும் உள்ள மொழியாக இம்மொழியின் நிலை மாறியது. .
கிரேக்க மொழியின் ஒலியனியல், உருபனியல், சொற்றொடரியல் மற்றும் சொற்றொகுதி என்பவற்றின் அடிப்படையில், இம்மொழி பண்டைய காலத்திலிருந்து தற்காலம் வரை பழைமையைப் பேணும் அதேவேளை புதுமையைப் புகுத்த இடம் கொடுப்பதாகவும் உள்ளது.
மைசீனிய கிரேக்க காலத்தினதான அசையெழுத்து முறையான நேரான பி (Linear B) என்ற எழுத்துமுறை கி.மு. பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இம்முறையிலான எழுத்துக்களைக் கொண்ட மைசீனிய கிரேக்கம், கிரேக்க மொழியின் மிகப்பழைய வடிவமாகும்.ஏறத்தாழ நேரான பி எழுத்துமுறையை ஒத்த சைபீரிய அசையெழுத்து முறை கி.மு. பதினோராம் நூற்றாண்டளவில் சைபீரியாவில் கிரேக்க மொழியை எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்டது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.