From Wikipedia, the free encyclopedia
வடக்கு மக்கெதோனியா அல்லது வடக்கு மசிடோனியா (North Macedonia; மக்கதோனியம்: Северна Македонија) (2019 இற்கு முன்னர் மக்கெதோனியா), அதிகாரபூர்வமாக வடக்கு மக்கெதோனியக் குடியரசு என்பது தென்கிழக்கு ஐரோப்பாவில் பால்கன் குடாவில் அமைந்துள்ள ஒரு நாடு. இது 1991 ஆம் ஆண்டில் யுகோசுலாவியாவில் இருந்து பிரிந்து தனிநாடாகியது. நிலம்சூழ் நாடான வடக்கு மக்கெதோனியாவின் வடமேற்கில் கொசோவோ, வடகிழக்கில் செர்பியா, கிழக்கில் பல்காரியா, தெற்கில் கிரேக்கம், மேற்கில் அல்பேனியா ஆகிய நாடுகள் எல்லைகளாக உள்ளன.[7] இது மக்கெதோனியாவின் பெரிய புவியியல் பகுதியின் சுமார் மூன்றில் ஒன்றாகும். தலைநகரும் மிகப்பெரிய நகரமான ஸ்கோப்ஜே நாட்டின் 2.06 மில்லியன் மக்களில் சுமார் கால் பங்கினரைக் கொண்டுள்ளது. குடியிருப்பாளர்களில் பெரும்பாலோர் தெற்கு சிலாவிக் மக்களான மக்கெதோனிய இனத்தவர்கள். அல்பேனியர்கள் சுமார் 25% சிறுபான்மையினராக உள்ளனர். இவர்களுடன், துருக்கியர், ரோமானி, செர்பியர், பொசுனியர், அரோமானியர் ஆகியோரும் உள்ளனர்.
வடக்கு மக்கெதோனியக் குடியரசு Republic of North Macedonia | |
---|---|
நாட்டுப்பண்: Денес над Македонија ("இன்று மக்கெதோனியாவின் மேல்") | |
தலைநகரம் | ஸ்கோப்ஜே 42°0′N 21°26′E |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) | |
| |
இனக் குழுகள் (2002) |
|
மக்கள் |
|
அரசாங்கம் | ஒருமுக நாடாளுமன்றக் குடியரசு |
• அரசுத்தலைவர் | இசுடீவோ பெந்தரோவ்சுக்கி |
• பிரதமர் | ஒலிவர் இசுபசோவ்சுக்கி |
சட்டமன்றம் | பேரவை |
வரலாறு | |
8 செப்டம்பர் 1991 | |
• ஐநாவில் இணைவு | 8 ஏப்ரல் 1993 |
• பிரெசுப்பா தீர்மானம் | 12 பெப்ரவரி 2019 |
பரப்பு | |
• மொத்தம் | 25,713 km2 (9,928 sq mi) (145-வது) |
• நீர் (%) | 1.9 |
மக்கள் தொகை | |
• 2019 மதிப்பிடு | 2,077,132[3] |
• 2002 கணக்கெடுப்பு | 2,022,547[2] |
• அடர்த்தி | 80.1/km2 (207.5/sq mi) (122-வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2019 மதிப்பீடு |
• மொத்தம் | $33.822 பில்.[4] |
• தலைவிகிதம் | $16,253[4] |
மொ.உ.உ. (பெயரளவு) | 2019 மதிப்பீடு |
• மொத்தம் | $12.383 பில்லியன்[4] |
• தலைவிகிதம் | $6,143[4] |
ஜினி (2018) | 31.9[5] மத்திமம் |
மமேசு (2018) | 0.759[6] உயர் · 82-வது |
நாணயம் | மாசிடோனிய தெனார் (MKD) |
நேர வலயம் | ஒ.அ.நே+1 (ம.ஐ.நே) |
ஒ.அ.நே+2 (ம.ஐ.கோ.நே) | |
திகதி அமைப்பு | நாநா/மாமா/ஆஆஆஆ (கிபி) |
வாகனம் செலுத்தல் | வலது |
அழைப்புக்குறி | +389 |
இணையக் குறி |
|
1992ல் யுகோசுலாவியா உடைந்த பிறகு மக்கெதோனியா விடுதலை பெற்றது முதல், மக்கெதோனியா பெயர் தொடர்பான பிணக்கு, கிரேக்க நாட்டுடன் இருந்து வந்தது. பேரரசர் அலெக்சாந்தர் ஆண்ட, கிரேக்க நாட்டின் வடக்கு பகுதி மக்கெதோனியா என அழைக்கப்படுவதால், இப்பகுதிக்கும் அண்டை நாடான மக்கெதோனியா நாடு உரிமை கோரலாம் என நினைத்து, நீண்ட காலமாக கிரேக்கம், மக்கெதோனியாவுடன் பிணக்கு கொண்டிருந்தது. இதனால் மக்கெதோனியா ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இணைய வாய்ப்பு இல்லாது போயிற்று.
30 ஆண்டு சர்ச்சைக்கு பிறகு, கிரேக்கத்தின் அண்டை நாடான மக்கெதோனியா "வடக்கு மக்கெதோனியா" எனப் பெயர் மாற்றம் செய்ய இரு நாடுகளும் 2018 சூன் மாதத்தில் ஒப்பந்தம் செய்தது.[8][9] எட்டு மாதங்களின் பின்னர் நாட்டின் பெயர் வடக்கு மக்கெதோனியக் குடியரசு என மாற்ரப்பட்டது.[10][11] 2020 மார்ச் 20 இல் நேட்டோ அமைப்பில் இணைந்து கொண்டது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.